Search
  • Follow NativePlanet
Share
» »சாப்பாடு பிரியர்களா நீங்கள்.. அப்போ இந்த இடம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது மாதிரிதான்

சாப்பாடு பிரியர்களா நீங்கள்.. அப்போ இந்த இடம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது மாதிரிதான்

சாப்பாடு பிரியர்கள் கட்டாயம் செல்லவேண்டிய பகுதிகளில் ஒன்று கேரள மலபார் கடற்கரை.

By Udhaya

நீங்கள் சாப்பாட்டு பிரியர் என்றால் கட்டாயம் கண்டு உண்டு வரவேண்டிய பகுதிகளில் ஒன்றான கேரள மலபார் கடற்கரைக்கு செல்லலாம் வாங்க...!

இந்தியாவுக்கு ஐரோப்பியர்கள் வர தூண்டுதலாக இந்த காரணிகளில் முக்கியமானது ஏலக்காய், மிளகு, கிராம்பு போன்ற வாசனை மற்றும் சுவையூட்டிகள் ஆகும். மிளகு அக்கலத்தில் பட்டுக்கும், தங்கத்துக்கும் இணையான மதிப்பை கொண்டிருந்திருக்கிறது. வாஸ்கோட-காமா கடல் மார்க்கமாக இந்தியாவை அடையும் வழியை கண்டறிந்த பிறகு மூட்டை மூட்டையாக தங்கத்தை கொடுத்து மேற்சொன்ன வாசனை பொருட்களை வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

இந்த பரிமாற்றத்தின் மையமாக திகழ்ந்த பகுதி தான் 'மலபார் கடற்கரையின் பாரிஸ்' என்றழைக்கப்படும் தலசேரி ஆகும்.வாருங்கள், தலசேரியில் இருக்கும் ஐந்து முக்கியமான, நிச்சயம் காணத்தூண்டும் சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். மேலும் இங்கு கிடைக்கும் உணவுகளை சுவைத்து விட்டு வருவோம்.

தலசேரி கோட்டை:

தலசேரி கோட்டை:

குடகு, மாஹே, கோழிக்கோடு மற்றும் வயநாட்டை எல்லைகளாக கொண்டதால் தலசேரி ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்து வந்திருக்கிறது. 1708ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களால் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. மைசூர் மகாராஜாவாக இருந்த ஹைதர் அலி இக்கோட்டையை கைப்பற்ற நினைத்து தோல்வியை தழுவியிருக்கிறான்.

இன்று தலசேரியின் வரலாற்றை தன்னகத்தே சுமந்தபடி நெருப்பு உமிழ்ந்த பீரங்கிகளும், முற்றுகைகளை சந்தித்த கோட்டை கொத்தளங்களும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.


PC : Maneesh M J

புனித ரோசரி தேவாலயம்:

புனித ரோசரி தேவாலயம்:


இந்த தலசேரி கோட்டையை ஒட்டியபடியே அமைந்திருக்கிறது இந்த புனித ரோசரி தேவாலயம். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் கேரளத்தில் இருக்கும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். அரபிக்கடலை நோக்கியிருக்கும் இந்த தேவாலயம் அமைந்திருக்கும் இடம் அத்தனை அழகானது !.


PC : ShajiA

தலசேரி மரப்பாலம்:

தலசேரி மரப்பாலம்:

தலசேரி கடற்கரையில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட மரப்பாலம் ஒன்று இன்றும் இருக்கிறது. கப்பல்களுக்கு சரக்கு எடுத்துச்செல்வதற்க்காக கட்டப்பட்டதாகும் இது. இப்போது இந்த மரப்பாலம் காதலர்களின் கனவிடமாக இருக்கிறது. மாலை நேரத்தில் துணையுடன் கைகோர்த்தபடி மரப்பாலத்தின் மேல் நடந்தபடியே கடலை ரசித்துகொண்டே கடலை போடுவது ஹ்ம்ம்...

PC : Basavaraj PM

ஸ்ரீ ராமஸ்வாமி கோயில்:

ஸ்ரீ ராமஸ்வாமி கோயில்:

திருவங்காடு கோயில் என்றறியப்படும் இந்த தலசேரி ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் கேரளத்தில் இருக்கும் பிரதான ராமர் கோயில்களில் ஒன்றாகும். பழமையான கேரள கட்டிடக்கலை முறைப்படி இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

PC : Primejyothi

ஸ்ரீ ஜகன்னாதர் கோயில்

ஸ்ரீ ஜகன்னாதர் கோயில்

தலசேரி ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் இருக்கிறது ஸ்ரீ ஜகன்னாதர் கோயில். 1908ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. பூரி ஜகன்னாதர் கோயிலை முன்மாதிரியாக கொண்டு இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. தலசேரி நகரில் இருந்து 1கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.


PC: Primejyothi

தலசேரி பிரியாணி

தலசேரி பிரியாணி

தலசேரியில் கிடைக்கும் மிகப்பிரபலமான உணவென்றால் அது தலசேரி பிரியாணி தான். கேரளா பாரம்பரிய சமையலில் இருக்கும் ஒரே பிரியாணி இது என்பதால் 'கேரளா பிரியாணி' என்றும் இது அழைக்கப்படுகிறது.

தலசேரி பலூடா

தலசேரி பலூடா

பிரியாணியை தவிர தலசேரியில் கிடைக்கும் விசேஷமான உணவுகளில் ஒன்று தலசேரி பலூடா ஆகும். பழக்கூட்டு, உலர்ந்த திராட்சை, வெண்ணிலா பனிக்கூழ் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகை உணவு கோடைகாலத்தின் போது சாப்பிட மிகவும் உகந்தது.

எப்படி போகலாம்

எப்படி போகலாம்

தலசேரி செல்லும் வழி

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X