Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் தலை சிறந்த 10 அருங்காட்சியகங்கள் எங்கிருக்கிறது?

இந்தியாவின் தலை சிறந்த 10 அருங்காட்சியகங்கள் எங்கிருக்கிறது?

இந்தியாவின் தலை சிறந்த 10 அருங்காட்சியகங்கள் எங்கிருக்கிறது?

By Bala Karthik

அருங்காட்சியகங்கள் அலுப்பை ஒருவர் மனதில் விதைக்க, அதனால் பல அருங்காட்சியகங்கள் வந்த வண்ணமும் போன வண்ணமும் இருந்துக்கொண்டிருப்பது வழக்கமே. இருப்பினும், பல்வேறு தகவல்களை சேகரிக்க துடிப்பவர்களும், நால் சுவற்றுக்குள்ளே இருக்கும் விலைமதிப்பற்ற இரகசியங்களை ஆராய நினைப்பவர்களும் குறைவாக இருக்கத்தான் செய்கின்றனர். சில அருங்காட்சியகங்கள் நல்லதொரு பெயருடன் விளங்க, அதே நேரத்தில் சில அருங்காட்சியகங்களை பற்றியும் மக்களுக்கு தெரிவதில்லை.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் அளவானது கடந்து வந்த காலத்திலிருந்தே நம் கண் முன் அதிகம் நிற்பதற்கு காரணம், அவற்றின் பராமரிப்பே ஆகும். நீங்கள் உங்கள் மனதில் அருங்காட்சியகங்கள் என்பது சோர்வையும், அலுப்பையும் தருவதாக எண்ணினால், சில பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்கள் மூலமாக பழைய மற்றும் புதிய அறிவினை பெற்று மகிழுங்களேன். இங்கே நம் நாட்டில் காணப்படும் போக்குவரத்து, அதோடு இணைந்த ஜவுளி கடைகள் என பலவற்றையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

பழங்காலத்து கலாச்சாரத்தை விவரிக்கும் டான் பாஸ்கோ மையம் – ஷில்லாங்க்:

பழங்காலத்து கலாச்சாரத்தை விவரிக்கும் டான் பாஸ்கோ மையம் – ஷில்லாங்க்:

பதினேழு தொகுப்புகளை கொண்டிருக்கும் இவ்விடம், பெரிய மற்றும் திட்டங்களால் பட்டை தீட்டப்பட்டு ஜொலிக்கும் அழகிய அருங்காட்சியகமாகும். வடகிழக்கு இந்தியாவின் பழங்காலத்து மற்றும் நாடோடி கலாச்சாரத்தை இவ்விடம் உணர்த்த, இந்த அருங்காட்சியகம் 7 அடுக்குகளால் பரந்து விரிந்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும், வெவ்வேறு விதமான வடிவங்கள் தீட்டப்பட்டிருக்க, அவை விவசாயத்திலிருந்து, உணவு, மத உணர்வு, ஆயுதங்கள், ஆடைகள், என பலவும் அடங்கும்.

மேல்மட்டத்தின் மாடியில் ஸ்கைவால்க் (Skywalk) அமைந்து நம்மை பெருமூச்செறிந்து பார்க்க வைக்க, ஷுல்லாங்கின் அழகினையும் நம்மால் இங்கிருந்து பார்க்க முடிகிறது. இங்கே உணவகமும் காணப்பட, வடகிழக்கு உணவு வகைகள் இங்கே நமக்கு பரிமாரப்படுகிறது.

official site

ஆதிவாசி அருங்காட்சியகம் – போபால்:

ஆதிவாசி அருங்காட்சியகம் – போபால்:


2013ஆம் ஆண்டு இது திறக்கப்பட, இந்த ஆதிவாசி அருங்காட்சியகத்தில் மத்தியபிரதேசத்து ஆதிவாசிகள் கலாச்சாரமானது கொண்டாடப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பொருட்கள் காணப்பட, அவை அனைத்தும் மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தின் வெவ்வேறு பழங்குடியினரால் உருவாக்கப்பட்டது என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் தொகுப்புகள் காணப்பட, பழங்குடியினரின் வாழ்க்கையையும், அழகியலையும், மத நம்பிக்கைகளையும் என பலவற்றை அது சித்தரிக்கிறது. அவை அனைத்தும் மிகவும் புதிய பரிணாமத்தில் கைவினைஞர்களின் அசைவுகளால் வடிவமைக்கப்பட்டிருக்க, பழங்குடியினர் கிராமத்தின் வாழ்க்கை அதிசயத்தை பார்க்க, நாம் பயணிக்க துடிக்கும் இடங்களுள் இதுவும் ஒன்றாகவும் அமைகிறது.

Nagarjun Kandukuru

 தக்ஷினா சித்ரா அருங்காட்சியகம் – சென்னை:

தக்ஷினா சித்ரா அருங்காட்சியகம் – சென்னை:

திசம்பர் 1996 ஆம் ஆண்டு இது திறக்கப்பட, சென்னை கைவினை அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட அருங்காட்சியகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே 18 விதமான தென்னிந்தியா முழுவதும் காணப்படும் மூதாதையர்களின் இடங்கள் காணப்பட, ஒவ்வொரு அமைப்பும் கடத்தப்பட்டு, இதன் அருங்காட்சியகங்களின் வளாகம் மீண்டும் கட்டப்பட்டும் உள்ளது. இந்த அமைப்புகளோடு இணைந்து, ஓர் குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையும் நமக்கு உணர்த்தப்பட, அவர்கள் இந்த வீடுகளில் ஒன்றில் வாழ்ந்து வந்ததும் நமக்கு தெரிய வருகிறது.

Rrjanbiah

 ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம் – ஜெய்சால்மர்:

ஜெய்சால்மர் போர் அருங்காட்சியகம் – ஜெய்சால்மர்:


இந்திய இராணுவத்தினை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவ, 1965ஆம் ஆண்டின் இந்திய - பாகிஸ்தான் போரின் தியாகிகள் மற்றும் 1971ஆம் ஆண்டின் லோங்கிவாலா போரில் போராடியவர்களென நாம் தெரிந்துக்கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவுகிறது. இந்த அருங்காட்சியகமானது லெப்டினென்ட் ஜெனரல் பாபி மேத்யூஸிற்கு மூளையாக விளங்க, இது 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது.

இங்கே இரண்டு பெரிய திரையிடும் அரங்குகள் காணப்பட, ஆடியோ விஷுவல் அறை, நினைவு பரிசு கடை, மற்றும் உணவு விடுதிகளும் காணப்படுகிறது. இங்கே எண்ணற்ற போர் கோப்பைகளும், விண்டேஜ் உபகரணங்கள், டாங்கிகள், துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது. இங்கே காணப்படும் சிறப்பம்சங்களுள் ஒன்றாக வேட்டை விமானம் காணப்பட, லோங்கிவாலா போரில் இவை பயன்படுத்தப்பட்டவை என்பதும் நமக்கு தெரியவருகிறது.

Jaisalmer War Museum

 காலிகோ மியூசியம் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ்:

காலிகோ மியூசியம் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ்:

1949ஆம் ஆண்டு காலிகோ மில்லில் இந்த அருங்காட்சியகம் அமைத்திட, அகமதாபாத்தின் வளர்ந்து வரும் நெசவுத் தொழில் மையத்தின் தொழிலதிபரான கௌதம் சாரபா மற்றும் அவருடைய தங்கை கிரா சாராபாயால் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இங்கே, எண்ணற்ற பாரம்பரிய இந்திய உடைகள் காணப்பட, அவை அனைத்தும் 500 வருடங்களுக்கு பழமையானவை என்பதும் தெரியவருகிறது.

முக்கிய காட்சியகங்களில் சௌக் சிறப்பம்சங்கள் காணப்பட, முகலாயத்தின் நீதிமன்றத் துணி, மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான மாகாண ஆட்சியாளர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிராந்திய நெறிமுறைகள், சிவப்பு கம்பளங்கள், ஆடைகள், உலகளாவிய இந்திய ஆடை வியாபாரங்கள் என அனைத்தை பற்றியும் இங்கே வருவதன் மூலம் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

official site

 பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகம் – குருகரம்:

பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகம் – குருகரம்:

2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இது திறக்கப்பட, இந்த அருங்காட்சியகமானது இந்தியாவின் போக்குவரத்து புரட்சியை பற்றி நம்மிடம் காலம் கடந்து உரைக்கிறது. தனியார் அருங்காட்சியகமான இவ்விடம், விண்டேஜ் கார் கலெக்டரான தருண் தக்ரலால் சிந்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரால், அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமான பொருட்கள் பார்வைக்கு சேகரித்து வைக்கப்பட்டதும் நமக்கு தெரிய வருகிறது.

இங்கே நம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பல வகையான போக்குவரத்தாக அம்பாரிகள், மாட்டு வண்டிகள், ஆட்டு வண்டிகள், பல்லக்குகள், விண்டேஜ் ஸ்கூட்டர்கள், விமானங்கள், படகுகள், இரயில்கள், மற்றும் அசாதாரண முரண்பாடுகள் கொண்டு இந்தியாவின் கிராமப்புறங்களில் பயன்படுத்திய போக்குவரத்துகளையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

official site

 பிரிவினை அருங்காட்சியகம் – அமிர்தசரஸ்:

பிரிவினை அருங்காட்சியகம் – அமிர்தசரஸ்:

அக்டோபர் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பிரிவினை அருங்காட்சியகத்தின் நோக்கமாக இந்தியாவில் 1947ஆம் ஆண்டின் பிரிவின்போது பாதிக்கப்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இங்கே காணப்படும் சிறப்பம்சங்களுள் ஒன்றாக ‘கேலரி ஆப் ஹோப்' காணப்பட, இந்தியாவை கடந்து சென்றவர்களின் கதையையும் இவ்விடம் உரைக்கிறது. மேலும், அவர்கள் எதுவுமற்று இங்கே வந்து வணிக ரீதியாக பெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

official site

 விக்டோரிய நினைவு மண்டபம் – கொல்கத்தா:

விக்டோரிய நினைவு மண்டபம் – கொல்கத்தா:

விரிவான நுண்கலை வரலாற்று அருங்காட்சியகமான இவ்விடத்தில், இருபத்தைந்து தொகுப்புகள் காணப்பட, மேலும்... 3,900 வரைபடங்களின் அணிவகுப்பும், 28,000 கலைப்பொருட்களும் இந்த விக்டோரிய நினைவு மண்டபத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நினைவு மண்டபமானது, இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி போது விக்டோரிய இராணியின் நினைவாக கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

souu boyy

 காந்தி ஸ்மிருத்தி – தில்லி:

காந்தி ஸ்மிருத்தி – தில்லி:


காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடமான காந்தி ஸ்மிருத்தி, அவர் தன்னுடைய வாழ்வின் கடைசி 144 நாட்களை இங்கே கழித்ததை நினைவுப்படுத்துகிறது. ஜனவரி 30, 1948ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே இங்கே வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் தங்கிய அறை பாதுகாக்கப்பட்டு வர, அவர் பயன்படுத்திய பொருட்கள் என கண்ணாடி மற்றும் அவருடைய தடிக்கம்பு என அனைத்தையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. பார்வையாளர்கள் இந்த இடத்தின் பின்புற தோட்டத்தை பார்த்து செல்ல, அவர் சுடப்பட்ட இடத்தையும் வாயில் கை வைத்தபடி ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அவர் சுடப்பட்ட இடமானது தியாக குறியீடாக இன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Adam Jones

 நகரத்து அரண்மனை அருங்காட்சியகம் – உதய்ப்பூர்:

நகரத்து அரண்மனை அருங்காட்சியகம் – உதய்ப்பூர்:

இந்த அருங்காட்சியகமானது அரண்மனை தொடர்களை அணிவகுத்தபடி காட்சியளிக்க, 1559ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவை அமைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. இங்கே நாம் நடந்து செல்ல, விலைமதிப்பில்லா அரச குடும்பத்து நினைவு பொருட்களான வெள்ளிக்கோப்பை, இசைக்கருவிகள், குடும்பத்து புகைப்படங்கள், மற்றும் உருவப்படங்கள், கலை நயவேலைப்பாடுகள், மற்றும் ஆயுதங்கள் ஆகியவையும் காண்கிறோம்.

மேவர் அரச குடும்பத்தினரால், இந்த உதய்ப்பூர் நகரத்து அரண்மனையானது உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்றப்பட, குறிப்பிடப்படும் ஒரு இடமாக உங்களை மூழ்கடித்து, இந்திய அரசின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் பெருமையையும் உணர்த்தி வருபவர்களை வாய் பிளந்து நிற்க செய்கிறது.

Richard Moross

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X