Search
  • Follow NativePlanet
Share
» »காதலியை நினைத்து பீல் பண்றதுக்கு பதிலா இந்த இடங்களுக்கு போங்க பாஸ்..

காதலியை நினைத்து பீல் பண்றதுக்கு பதிலா இந்த இடங்களுக்கு போங்க பாஸ்..

By Super Admin

நாம் எல்லோருமே வாழ்கையில் ஒருமுறையாவது காதல் தோல்வியை சந்தித்திருப்போம். அந்த ஒருவர் தான் வாழ்கையே என்று இருந்துவிட்டு பின் ஏதோ ஒரு காரணத்தினால் பிரிய நேரிடும்போது ஏற்படும் வலி இதயத்தையே கிழிப்பது போல இருக்கும். காதல் தோல்விகள் நம் வாழ்க்கையையே முடக்கிவிடும். படிப்பிலோ அல்லது வேலையிலோ கவனம் செலுத்த முடியாது, வீட்டில் இருப்பவர்களுடன் அன்பாக பேசவும் தோன்றாது.

இந்த இறுக்கமான சூழலில் இருந்து வெளியேற புதியதொரு வாழ்கையை துவங்க பயணங்கள் பேருதவியாக இருக்கும். புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள் மனதுக்கு புத்துணர்வை அளிக்கும். அப்படி காதல் தோல்வியை நினைத்து வருந்தாமல் இருக்க நாம் செல்லவேண்டிய இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கோவா :

கோவா :

மனதை உருக்கிய சோகத்தில் இருந்து வெளியேற மிக சுலபமான வழி வலியை மறக்கும் அளவுக்கு கொண்டாடுவதுதான். அப்படி கொண்டாட மிகச்சிறந்த இடம் 'இந்தியாவின் கொண்டாட்டங்களின் தலைநகரம்' என்றழைக்கப்படும் கோவா தான். கோவாவின் கடற்கரைகளும், விடிய விடிய நடக்கும் பார்டிகளும், இயற்கை செழுமைமிக்க இடங்களும் நிச்சயம் மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

அஞ்சுனா பீச் :

அஞ்சுனா பீச் :

அட்டகாசமாக பீச் பார்ட்டியில் கலந்துகொண்டு அசத்த நினைப்பவர்கள் வர வேண்டிய இடம் இந்த அஞ்சுனா பீச். அதிலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட பார்டிகள் களைகட்டும். பவுர்ணமி அன்று நடைபெறும் முழு இரவு பார்டிகள் இந்த இடத்தின் தனித்துவம். இங்கிருக்கும் பப்களில் அதிரச்செய்யும் 'டிரான்ஸ்' இசை பார்டிகளின் போது நம்மை நடனமாட தூண்டும்.

கொல்வா பீச் :

கொல்வா பீச் :

இந்திய சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையான இங்கு குறைவான செலவில் கடற்கரையை அனுபவிக்க நினைப்பவர்களின் ஆசையை நிறைவேற்றும் இடமாகும். இங்கு கிடைக்கும் கடல் உணவுகள் மிகவும் பிரபலமானது. சிறிய அளவிலான உணவகங்கள், பார்கள் இங்கு நிறைய உள்ளன. மற்ற கடற்கரைகளை போல இங்கு பெரிய அளவில் இரவு பார்டிகள் நடக்காது என்பது ஒரு குறை.

மார்கோ ரயில் நிலையத்தில் இருந்து 8கி.மீ தொலைவில் உள்ளது. பனாஜியில் இருந்து அதிகமாக பேருந்து வசதியும் உண்டு.

Photo: Flickr

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 27-29ஆம் தேதிகளில் கோவா கடற்க்கரையில் நடக்கும் இந்த பார்டி கொண்டாட்டத்தில் உலகின் தலைசிறந்த டீஜெக்கள் கலந்துகொண்டு இசைமாலை பொழிகின்றனர்.

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

கோவாவின் புகழ்பெற்ற கடற்க்கரைகளில் ஒன்றான வகேடோர் பீச்சில் நடக்கும் இந்த பார்டி திருவிழாவில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து டிக்கெட் பெறவேண்டியதும் அவசியம். வெறுமனே ஆட்டம், பாட்டம் என்பதோடு மட்டும் இல்லாமல் இங்கே பீச் வாலிபால் விளையாடலாம், ஆபத்து நிறைந்த பாறை ஏற்றத்தில் ஈடுபடலாம், இங்கே உள்ள கடைகளில் வித்தியாசமான பொருட்களை ஷாப்பிங் செய்யலாம்.

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டிதிருவிழாவின் புகைப்படங்கள்.

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டிதிருவிழாவின் புகைப்படங்கள்.

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டி திருவிழா :

சன் பர்ன் பார்டிதிருவிழாவின் புகைப்படங்கள்.

கோவா சர்ச்சுகள் :

கோவா சர்ச்சுகள் :

போர்சுகல் ஆளுகையின் கீழ் இருந்த நகரம் என்பதால் இங்கே அவர்கள் கட்டிய ஏராளமான சர்ச்சுகள் இருக்கின்றன. அவற்றிக்கு சென்றால் நாம் ஏதோ போர்சுகல் நாட்டுக்கே சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக 'போம் ஜீசஸ் பசில்லியா' என்ற சர்ச் 1605 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான சர்சுகளில் ஒன்றாகும்.

கோவா :

கோவா :

எனவே காதல் தோல்வியை மறந்து ஆசைதீர கொண்டாடவேண்டும் என்று நீங்கள் என்றாவது விரும்பினால் நண்பர்களுடன் கோவாவிற்கு சென்றுவாருங்கள். கோவா பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

வாரணாசி :

வாரணாசி :

புண்பட்ட மனதுக்கு அமைதியும், ஆனந்தமும் தான் அடிப்படை தேவைகள். இவை இரண்டையும் பெற ஆன்மீகத்தை விட சிறந்ததொரு மார்க்கம் இருக்க முடியாது. வாழ்வை மாற்றக்கூடிய ஆன்மீக அனுபவத்தை பெற விரும்புகிறவர்கள் நிச்சயம் செல்லவேண்டிய ஓரிடம் இந்தியாவின் ஆன்மீக தலைநகரான வாரணாசி என்றழைக்கப்படும் காசி நகரம் தான்.

வாரணாசி :

வாரணாசி :

காசியில் பல விதமான மனிதர்களை நாம் பார்க்க முடியும். மாய வித்தை புரியும் நிர்வாண அகோரிகள், இறப்பை நோக்கி காத்திருக்கும் முதியவர்கள், இந்திய தத்துவத்தை தேடி வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் என இங்கு நாம் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு மனிதரிடமுமிருந்து ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள முடியும். மனிதர்களை தாண்டி காசியில் நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்களும் சில இருக்கின்றன.

காசி விஸ்வநாதர் கோயில் :

காசி விஸ்வநாதர் கோயில் :

காசி நகரின் மிக முக்கிய ஆன்மீக அடையாளமாக திகழ்வது 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையானதான காசி விஸ்வநாதர் கோயிலாகும். உலகின் மிகப்பழமையான நகரங்களுள் ஒன்றான காசியின் நாடித்துடிப்பாக இராயிரம் வருடங்களாக இந்த கோயில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காசி விஸ்வநாதர் கோயில் :

காசி விஸ்வநாதர் கோயில் :

இந்த கோயிலை ஒட்டியே தச்வமேத படித்துறை என்ற இடம் கங்கைக்கரையில் அமைந்திருக்கிறது. இங்கு தான் ஹிந்து மத சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த படித்துறையின் வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பாவங்களை போக்க புனித நதியான கங்கையில் நீராடுகின்றனர்.

மணிகர்ணிகா படித்துறை :

மணிகர்ணிகா படித்துறை :

காசியில் இறப்பெய்தினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளதால் தங்களின் இறுதி காலத்தை காசியில் கழிக்க நாடு முழுவதிலும் இருந்து வரும் முதியவர்கள் இறந்த பிறகு இந்த மணிகர்ணிகா படித்துறையில் தான் எரியூட்டப்படுகின்றன. இறப்பை பார்ப்பவர்களுக்கு வாழ்கையின் அருமை புரியும் என்பார்கள். எனவே, காசிக்கு சென்றால் இந்த இடத்திற்கும் கட்டாயம் செல்லுங்கள்.

காசி :

காசி :

காசி நகரை அப்ற்றிய மேலும் பல தகவல்களையும், காசியை எப்படி அடைவது என்பது பற்றிய தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

ரிஷிகேஷ்:

ரிஷிகேஷ்:

ரிஷிகேஷ் என்றதும் மீண்டும் ஒரு ஆன்மீக ஸ்தலம் என்று நினைத்து விட வேண்டாம். ஆன்மீக ஸ்தலம் என்பதை தாண்டி இப்போது சாகச விளையாட்டுகள் அதிகம் நடக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இங்கு நடத்தப்படும் அதி சுவாரஸ்யமான சாகச விளையாட்டுக்களில் பங்கேற்கும் போது பழைய விஷயங்களை மறந்து உற்சாகமும், மகிழ்ச்சியும் மட்டுமே நம் மனதில் நிறைந்திருக்கும்.

ரிஷிகேஷ்:

ரிஷிகேஷ்:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் மட்டுமே இருந்துவந்த சாகச விளையாட்டுகளான ராப்டிங், ஜிப் லைன் ரைடிங், பங்கீ ஜம்பிங் போன்ற விளையாட்டுகள் ரிஷிகேஷில் இருக்கும் பல தனியார் முகவங்கலால் (Agency) நடத்தப்படுகின்றன.

உங்கள் வாழ்கையில் காதல் தோல்வியோ அல்லது எந்த விதத்தில் தோல்வி ஒன்று ஏற்பட்டாலும் மனம் கலங்காமல் புதியதொரு பாதையை தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X