Search
  • Follow NativePlanet
Share
» »திங்களூர் கைலாசநாதர் கோயில்

திங்களூர் கைலாசநாதர் கோயில்

நவகிரகத் தலங்களுள் ஒன்றான குளிர்ச்சியின் நாயகன் சந்திரனின் திருத்தலம் திங்களூர் ஆகும்

திங்களூர் கைலாசநாதர் கோயில்

இது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றினருகே அமைந்துள்ளது. திருவையாற்றிலிருந்து இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள இந்த திங்களூர் திருத்தலத்திலிருந்து 33கிமீ தொலைவில் கும்பகோணம் அமைந்துள்ளது.

தல வரலாறு

நாம் அனைவரும் இந்த கதையை கேள்விப்பட்டிருப்போம். அதாவது, தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அதை கடைவதற்கு மத்தாக மந்திர மலையை உபயோகித்தார்களாம். அதேநேரத்தில் நளினத்திலும் ஆட்டத்திலும் சிறந்து விளங்கிய வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தனர்.

திங்களூர் கைலாசநாதர் கோயில்

அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனராம். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினாராம். ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனராம். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தாராம்.

அப்பூதி அடிகள்

இத்தலம் அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம். அப்பூதி அடிகள் நாயனார் என்பவர், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலம் இதுவாகும்.

np

யார் அந்த அப்பூதி

திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார்.

ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும், என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார். அதற்காகத் தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார். ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தைத் திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தைத் துணியால் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான் என்பது நம்பிக்கைக் கதையாகும்.

 கோயிலின் சிறப்பம்சம்: புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திரனின் கிரகணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும். இறைவன் இக்கோயிலின் இறைவன் கைலாசநாதர், இறைவி பெரியநாயகி அம்மாள். சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.

PC: Rsmn

கோயிலின் சிறப்பம்சம்:

புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திரனின் கிரகணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

இறைவன்

இக்கோயிலின் இறைவன் கைலாசநாதர், இறைவி பெரியநாயகி அம்மாள். சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X