Search
  • Follow NativePlanet
Share
» »12 மணிநேரத்தில் சென்னையில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?

12 மணிநேரத்தில் சென்னையில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?

சிங்கார சென்னை, இந்த பெயர சொல்லும் போதே மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோசம் வரும். அந்த மேஜிக்குக்கு காரணம் சென்னை ஒரு நகரம் என்பதை தாண்டி அதற்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது. சென்னைக்கு செல்லும் ஒவ்வொருவராலும் அதை நிச்சயம் உணர முடியும். ஒரு குட்டி தமிழ்நாடு என்று சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட மனிதர்களையும், கலாசாரங்களையும் நாம் எதிர்கொள்ள முடியும்.

இங்கே நாம் சுற்றிப்பார்க்க, சந்திக்க, சாப்பிட கொண்டாட ஏராளமான இடங்கள் உள்ளன. 12 மணி நேரத்தில் சென்னையில் என்னென்னவோ செய்யலாம். வாருங்கள், சிங்கார சென்னையில் சிறகடித்து பறக்கலாம்.

1. பெசன்ட் நகர் பீச்:

1. பெசன்ட் நகர் பீச்:

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாக திகழும் மெரினா கடற்கரை சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும். இந்த மெரினா பீச்சை சுற்றிபார்க்க அதிகாலை தான் மிகச்சிறந்த நேரம்.

Photo:Nikhilb239

1. பெசன்ட் நகர் பீச்:

1. பெசன்ட் நகர் பீச்:

அதிலும் அடையார் ஆற்றை ஒட்டியவாறு அமைந்திருக்கும் பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் சுத்தமானதும் பலவகையான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளையும் நமக்கு தரும்.

தொந்தியை குறைக்க வாக்கிங் போகும் பெரியவர்கள், ஆறு மணிக்கே கால்பந்து விளையாடும் இளைஞர்கள், செயற்கையாக சத்தம் போட்டு சிரிக்கும் நடுத்தர வயதினர், மணக்க மணக்க மல்லிகை பூ விற்கும் பெண் என பலரை நாம் இங்கே சந்திக்க முடியும். அதிகாலை காலை 6மணி முதல் 7 மணி வரை நாம் இங்கே செலவிடலாம்.

Photo:Prasenna Sundar

2. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்:

2. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்:

பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து அடுத்து நேராக நாம் மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்வோம். இந்த பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து 6.5 கி.மீ தொலைவில் கபாலீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. சிவபெருமானை கபாலீஸ்வரராகவும் பார்வதி தேவியை கற்பகாம்பாளகவும் வழிபடலாம்.

Photo:Nagesh Jayaraman

2. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்:

2. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்:

7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பண்டையகால திராவிட கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும் இந்தக்கோயிலை ஒட்டியே மிகப்பெரிய கோயில் குளமும் இருக்கிறது. சென்னையின் மிக முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றான இந்தக்கோயிலுக்கு தவறாமல் சென்றுவாருங்கள்.

Photo:mountainamoeba

3. மயிலாப்பூர் டிகிரி காப்பி:

3. மயிலாப்பூர் டிகிரி காப்பி:

கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திரும்பியவுடன் நாம் செய்ய வேண்டிய அடுத்த விஷயம் மணமணக்கும் மயிலாப்பூர் டிகிரி காப்பியை சுவை பார்ப்பது தான். காப்பி கோட்டையை அரைக்கும் விதத்திலும் பின் காப்பியாக வடிக்கும் விதத்திலும் சற்றே வித்தியாசமான இந்த டிகிரி காப்பி அதன் சுவையிலும் தனித்துவமானதே. இந்த காப்பிகென்றே பிரத்யேகமாக இருக்கும் கடைகளில் இதை சுவைக்க மறந்து விடாதீர்கள்.

Photo:Ambarish

ரத்னா கபே:

ரத்னா கபே:

டிகிரி காபியை சுவைத்த கையோடு காலை உணவையும் சுவைக்க விரும்புபவகள் ரத்னா கபே ஹோட்டலுக்கு செல்லலாம். மயிலாப்பூரில் இருந்து 3 கி.மீ தூரத்தில் திருவல்லிக்கேணி என்னும் இடத்தில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. இங்கு கிடைக்கும் சுவையான சாம்பார் இட்லி உள்ளூர் மக்களிடையே மிகப்பிரபலம். சாம்பார் இட்லி தவிர இங்கு கிடைக்கும் நெய் மசாலா தோசையும் நாவூற வைக்கும். அருமையான சூழலில் ஆற அமர காலை உணவை சுவைத்திடுங்கள்.

Photo:Santhosh Janardhanan

சென்னையின் அழிக்க முடியாத அடையாளங்கள்:

சென்னையின் அழிக்க முடியாத அடையாளங்கள்:

தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றி எழுதிய இந்த இரண்டு திராவிட இயக்கங்களின் தலைவர்களான எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் சி.என். அண்ணாதுரை ஆகியோரின் சமாதிகளை பார்க்க வராத சுற்றுலாப்பயணிகளே இருக்க முடியாது.

கைக்கடிகாரத்துடனே புதைக்கப்பட்டதால் எம்.ஜி.ஆர் சமாதியில் இன்றும் அந்த கடிகாரத்தின் முள் நகரும் ஓசை கேட்கிறது என்ற சுவாரஸ்யமான வதந்தி உலாவுகிறது. ரத்னா கபேயில் இருந்து 2 கி.மீ தொலைவில் இவை அமைந்திருப்பதால் ஐந்து நிமிடத்தில் இதை அடைந்து விடலாம்.

Photo:Balasubramanian G Velu

கலாக்ஷேத்ரா:

கலாக்ஷேத்ரா:

இந்த சமாதிகளை சுற்றிப்பார்த்து விட்டு அடுத்ததாக நாம் கலாக்ஷேத்ரா நடனப்பள்ளிக்கு செல்லலாம். இங்கே காலை 10 மணிமுதல் 12 மணி வரை இங்கு பயிலும் மாணவர்களின் அற்புதமான பரத நாட்டிய நடனம் அரங்கேறுகிறது.

திங்கள் முதல் வியாழன் வரை இலவசமாகவே இதை நாம் காணலாம். தென் இந்தியாவின் சிறந்த நடனப்பள்ளிகளில் ஒன்றான இது சென்னையின் முக்கிய கலாசார கேந்திரங்களில் ஒன்றாக விளங்குகிறது. எம்.ஜி.ஆர் சமாதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த இடத்தை அரைமணி நேரத்தில் நாம் அடையலாம்.

Photo:Thoreaulylazy

சென்னையில் ஷாப்பிங்:

சென்னையில் ஷாப்பிங்:

இதற்கடுத்து நாம் சென்னையின் மிக முக்கிய ஷாப்பிங் ஏரியாவான தி.நகர் எனப்படும் தியாகராய நகருக்கு செல்லலாம். மிக குறுகலான வீதிகளில் பல மாடி கட்டிட கடைகள் அமைந்திருக்கும் இங்கே மதிய நேரங்களில் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் ஷாப்பிங் செய்வதும் எளிது.

துணி வகைகள், வீடு உபயோக பொருட்கள், நகைகள் போன்றவை இங்கே அதிகம் கிடைகின்றன. திருவிழா சமயங்களில் பெரும் மனித கடலை நாம் இங்கே பார்க்கலாம். ஷாப்பிங் செய்ய ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக வர வேண்டிய இடம் இந்த தி. நகர் ஆகும்.

Photo:McKay Savage

கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்:

கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்:

ஷாப்பிங்கை முடித்த கையேடு நாம் கிழக்கு கடற்கரைசாலையில் ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொள்வோம். சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வழியாக துத்துக்குடி வரை நீளும் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் போவதென்பது இன்மையிலே மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமையும்.

Photo: Flickr

மகாபலிபுரம்:

மகாபலிபுரம்:

இந்த கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் முக்கியமான சுற்றுலாதலம் என்றால் அது மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில்கள் தான். பல்லவர் காலத்தில் வெறும் கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த கோயில்கள் இன்றும் அதன் அழகினால் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. சென்னையில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று.

Photo:Amit Rawat

எங்க ஊரு மெட்ராசு!

எங்க ஊரு மெட்ராசு!

இந்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் மெரினா கடற்கரைக்கு அந்தி சாயும் நேரத்தில் வந்தால் குளுமையான கடற்காற்றை ரசித்த படியே சுடச்சுட மீன்களை வாங்கி ருசிக்கலாம்.

Photo:Aleksandr Zykov

சென்னை:

சென்னை:

மேலே சொன்னவைகள் தவிர சென்னையில் நாம் செய்யவும் செல்லவும் நிறைய விஷயங்களும், இடங்களும் உள்ளன. ஆனாலும் 12 மணி நேரத்தில் சென்னையை சுற்றிபார்க்க நினைத்தால் மேலே சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோககரமாக இருக்கும்.

Photo:Dr. Mithun James

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X