உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா?

Written by: Udhaya
Updated: Friday, May 19, 2017, 13:22 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

சோழர் தலைநகரத்தின் பழமையான அரிய புகைப்படங்கள்

இவர்களுக்குப் பின் வந்த மன்னர்களுள் பெரும்பான்மையானவர்களின் பெயர்கள் வரலாற்றுப்பதிவில் தெளிவு படுத்தப்படவில்லை அல்லது அந்த அளவுக்கு அவர்களின் பெயர் நிலைக்கவில்லை எனலாம். இவர்களுக்கு அடுத்து வந்த மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழ நாடு படிப்படியாக குறுகியது..

இவர்கள் சாம்ராஜ்யம் குறுகுவதற்கு காரணமாக அமைந்த இடங்களும் அங்குள்ள சுற்றுலாத் தளங்களும் பற்றி பார்க்கலாம்.

சோழப் பேரரசின் வீழ்ச்சி

 

சோழர்களின் அரசர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவனான முதலாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு அவனது மகன் விக்கிரம சோழன் ஆட்சி செய்தான்.

 

குலோத்துங்கன்

அவனுக்குப் பின் வந்த இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். எனினும் ஒவ்வொரு தலைமுறைக்கும் சோழர்கள் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர்.

இப்படிப்பட்ட தஞ்சாவூரில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நிறைய இடங்கள் உள்ளன.

 

தஞ்சாவூர்

 

சோழர்கள் ஆண்ட இடங்களுள் முக்கியமான இடம் தஞ்சாவூர். சோழ ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட பல இடங்கள் தற்போது வரலாற்றுச் சின்னங்களாக உள்ளன.

அவை இன்ப மற்றும் ஆன்மீரக சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.

PC: Girish Gopi

 

தஞ்சை பெருவுடையார் கோயில்

 

ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது

PC: vishwaant avk

 

மனோரா கோட்டை


தஞ்சாவூர் நகரத்திலிருந்து 65கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை நகரத்திற்கு அருகே இந்த மனோரா கோட்டை அமைந்திருக்கிறது. இது 1815ம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது.

PC: wiki

 

ஒய்சாளர்களின் செல்வாக்கு

 

நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர்.

பழங்கால மன்னர்கள் தங்கள் பெயர் வரலாற்றில் இடம்பெற வேண்டுமென பல விசயங்கள் செய்தனர். அவற்றில் ஒன்றுதான் ஆலயங்கள்.

 

காஞ்சிபுரம்

 

சோழநாட்டின் வடக்கில் பல ஊர்கள் இருந்தாலும், காஞ்சிபுரம் ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தளமாகும்.

முக்கியமாக ஆன்மீக பிரியர்களுக்கு ஏற்ற சுற்றுலா நகரம் இது.

Pc: tshrinivasan

 

காமாட்சி அம்மன் கோயில்

 

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த காமாட்சியம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றதாகும்.

காமாட்சி அம்மன், நின்ற கோலத்திலில்லாமல் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

PC: wikipedia

 

ஏகாம்பரேஸ்வரர் கோயில்


600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்கான முக்கியமான ஐந்து பஞ்சபூத கோயில்களுள், பஞ்ச பூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.

PC: Ssriram mt

https://en.wikipedia.org/wiki/File:Ekambareshwarar7.jpg

 

கைலாசநாதர் கோயில்

 

சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒளியில்லா ஒரு சிறு சந்நிதியின் நேர் மேலே அமையப்பெற்றுள்ள விமானம் ஆகியவற்றுக்காக பெரிதும் பேசப்படுகிறது.

PC: Aaroo

 

மதுரை - பாண்டியர்களின் எழுச்சி


தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன. இதனால் சோழ நாட்டை படையெடுத்துக் கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் பாண்டியர்கள்.

பாண்டியர்களின் தலைநகரம் மதுரை என்பது நம்மில் பலருக்குத் தெரியும். அங்கு புதியதாய் காண்பதற்கு என்ன இருக்கிறது தெரியுமா?

 

கோரிப்பாளையம் தர்க்கா

 

கோரிப்பாளையம் தர்க்கா மதுரையிலேயே மிகப்பெரிய மசூதியாக வீற்றுள்ளது. இது வைகை ஆற்றின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த மசூதி திருமலை நாயக்கரால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.


PC: Wasifwasif

 

காஜிமார் மசூதி

 

மதுரை ஜங்ஷன் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த காஜிமார் மசூதி அமைந்துள்ளது. பழமையான மசூதியான இது ஹஸ்ரத் காஜி சையத் தாஜுதீன் அவர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

PC: Wasifwasif

 

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

 

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் எனும் இந்த குளம் 1646-ம் ஆண்டில் வெட்டுவிக்கப்பட்டிருக்கிறது. திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டமான குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

PC: wikipedia

 

அதிசயம் கேளிக்கைப் பூங்கா (தீம் பார்க்)

 

அதிசயம் தீம் பார்க் எனும் இந்த தனியார் பொழுதுபோக்கு பூங்கா மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை எனும் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது.

ஆன்மீக மற்றும் வரலாற்று சுற்றுலாவையே பார்த்து பார்த்து போர் அடிப்பவர்களுக்கு விளையாடி மகிழ நல்ல பகுதி இதுவாகும்.

Pc: Thamizhu

 

 

கூடல் அழகர் விஷ்ணு கோவில்

 

தமிழகத்தின் வரலாற்றில் மதுரை மறக்கமுடியாத மற்றும் மறுக்கமுடியாத நினைவுகளை உள்ளடக்கிய நகரம். கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற பாண்டியர்களின் தலைநகரமான மதுரையில் பல்வேறு ஆன்மீகத் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இந்த கூடல் அழகர் விஷ்ணு கோவில். இது சங்ககால தமிழ் புலவர்களால் பாடப்பட்ட 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக உள்ளது. 2 ஏக்கருக்கு பரந்து விரிந்த இந்த கோவில், நடுவில் ஒன்றும், நான்கு திசைகளிலும் நான்கு என 5 கோபுரங்களைக் கொண்டுள்ளது. கோவிலின் கருவறையில் கூடல் அழகரின் சிலை உள்ளது.

PC: Ssriram mt

 

கங்கைகொண்ட சோழபுரம் - பேரரசு வீழ்ந்த இடம்

 

மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டான்.
எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.


இதுதான் தற்போதைய தரவுகளின்படி, சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்த இடமாகும். இதன்பின்னர் சோழ மன்னர்கள் குறுநில மன்னர்களாக வாழ்ந்தும், பல இடங்களுக்கு சிதறுண்டும் போய் பேரரசு முடிவுக்கு வந்தது. இந்த கங்கை கொண்ட சோழபுரம் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

காசியின் பல முகங்கள்!!!

கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கார போகர் மர்மமாக மறைந்த இடம் எது தெரியுமா?

Read more about: tanjore, travel
English summary

What happened to chozhas at the end

What happend to the great chozha's at the end
Please Wait while comments are loading...