உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

Written by: Udhaya
Updated: Friday, August 11, 2017, 11:59 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

பத்மநாபசுவாமிகோயில் பற்றிய பல செய்திகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைதான்.

ஐய்யப்பனான ஐயனார்... மறைந்துபோன உண்மைகள் !

கலியுகம் தொடங்கி சரியாக 964 நாள்கள் கழித்து இந்த கோயில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அப்படி பார்க்கையில் இந்த கோயில் நமக்கு சொல்லவருவது என்ன என்பது கேட்பவருக்கு மர்மமாகவும், அச்சமாகவும் உள்ளது.

இந்த கோயில் பற்றி கேள்விப்படுபவர்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதி கொள்கின்றனர்.

கோயிலின் ரகசிய அறைகள் 5ல் மூன்று மட்டுமே திறக்கப்பட்டது. அதில் இருந்த தங்கம், வெள்ளி, வைர வைடூரிய நகைகளின் மதிப்புகள் கணக்கிட்டபோது அதன் மொத்த மதிப்பு அனைவரையும் தள்ளாடச் செய்தது.

கிட்டதட்ட 2 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஒரு கோயிலில் முடங்கியுள்ளது தெரிந்தது பல்வேறு தரப்பினர் இதை நாட்டுக்காக பயன்படுத்தவேண்டும் எனவும், சிலர் இது மன்னர் சொத்து கோயிலுக்கு மட்டுமே சொந்தம் எனவும் கூறிவந்தனர்.

அப்போதுதான் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது கடைசி அறையில் கிடைக்கப்போகும் மொத்த மதிப்பு இந்த நான்கு அறைகளிலும் பல மடங்காகும். இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க... (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

இந்த மாதம் அதிகம் படிக்கப்பட்ட டாப் 5 கட்டுரைகள் கீழே

பத்மநாபசுவாமி கோயில்

 

பத்மநாபசுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும்.

இது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழர்களா? மலையாளிகளா?

சிலர் திருவிதாங்கூர் மன்னர்கள் சேரர்கள் எனவும், குலசேகர ஆழ்வாரின் வழித்தோன்றல்கள் எனவும் கூறுகின்றனர்.

இருப்பினும் தற்போதைய மன்னர் குடும்பத்தினர் கேரள தமிழ் கலந்த முறையே பின்பற்றுகின்றனர்.

 

 

 

இளைஞர்களே இளம்பெண்களே! கேரளாவில் நீங்கள் கட்டாயம் போகவேண்டிய அந்த 26 இடங்கள் சும்மா ஜமாய்ங்க

திருவனந்தபுரம் பெயர்க்காரணம்

 

இந்த பத்மநாபசுவாமி கோயில் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலுடன் அதிக அளவில் ஒத்துள்ளது.

இந்த கோயிலின் பெயரிலேயே கேரள மாநிலத்தின் தலைநகருக்கு திருவனந்தபுரம் என்று பெயர் வந்தது.

Pc: Arvindh sivaraj

 

பத்மநாபசுவாமி தூங்குகிறாரா

 

இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை தூங்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து உண்டு. அதாவது அந்த சிலை விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதை போன்று இருக்கிறது.


Pc: Arvindh sivaraj

 

ஸ்ரீ பத்மநாபதாசா யார் தெரியுமா


திருவிதாங்கூர் மன்னர் தன் குடும்பத்தை பத்மநாபரின் சேவகர்களாக கருதினார்.

அதனால் அவருக்கு ஸ்ரீ பத்மநாபதாசா எனும் பெயர் கிடைத்தது.

Pc: Arvindh sivaraj

 

 

 

 


கஜுராஹோ - இது அந்த விசயத்துக்கான கோயில்

கட்டுப்பாட்டிலும் அதீத கட்டுப்பாடு

 

இந்த கோயிலில் உடைக் கட்டுப்பாடு மிகவும் கட்டுப்பாடாக இருக்கும். வேட்டி சட்டைகள், புடவை, தாவணிகள் மட்டுமே அணிந்து செல்லவேண்டும் என்ற கட்டப்பாடு உண்டு.

பேண்ட் கூட போடக்கூடாது தெரியுமா?

Haros

 

 

 

 

குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!

108ல் ஒன்று

 

இந்த கோயில் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் இன்னும் பல மர்மங்கள் நிறைந்துள்ளன.

Ashcoounter

 

12 ஆயிரம் சாலிகிராமம்

 

இந்த கோயிலின் சிலை 12 ஆயிரம் சாலிகிராம் கொண்டு செய்யப்பட்டுள்ளது. அதன் சக்தி அளவில்லாதது.

P.K.Niyogi


வாரவிடுமுறையில் லாங் பைக் ரைடு போக மிகச்சிறந்த 15 இடங்கள் இவைதான்!

சாலிகிராமம்னா என்ன


பொதுவாக சாலிகிராமம் னா சென்னையில் இருக்குற ஒரு பகுதினு நினைச்சிடப்போறீங்க.. சாலிகிராமம் என்பது கண்டகி நதியில் கிடைக்கப்பெறும் ஒரு வகை கூலாங்கள் போன்றது. இது மிகவும் சக்தி வாய்ந்தது.

விஷ்ணு வரைகிறாரா

 

விஷ்ணு இந்த கற்களில் தன் சக்கரத்தையும்,சங்கின் வடிவத்தையும் வரைவதாக ஐதீகம்.

 

விமானம் நடைமேடை

 

விமானத்துக்கு முன்னதாக இருக்கும் நடைமேடை ஒரே ஒரு கல்லால் ஆனது. மூன்று கதவுகள் வழியாக பத்மநாபனின் சிலையை தரிசிக்கமுடியும்.

 

மர்ம அறை

 

சேம்பர் பி என அழைக்கப்படும் மர்மஅறை மற்ற அறைகளைப் போலல்லாது பத்மநாபசுவாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

வெளியாகுமா மர்மம்


மற்ற அறைகளில் என்ன இருக்கிறது என்று மதிப்பிட்டு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி மதிப்புடைய பொருள்கள் என கண்டறிந்தவர்கள் ஏன் இந்த மர்ம அறையை திறக்கவில்லை என சந்தேகம் வருகிறதல்லவா

 

தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க

திறக்கப்படாத மர்ம அறை

 

திறக்கப்பட்ட அறைகளில் 500 கிலோ நகைகள், 18 அடி உயர பை ஒன்றில் முழுவதும் தங்க நாணயங்கள் என பிரம்மிக்க வைத்துள்ளது.

இதைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படும் மர்ம அறை திறக்கப்படாததன் மர்மம் என்ன தெரியுமா


இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?

 

 

உலகம் அழியும்

 

இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இதனால்தான் திறக்க மறுக்கின்றனர் அவர்கள்.

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா? பகுதி 1

Read more about: travel, temple
English summary

What is the mystery behind the last door at Padmanabhaswamy temple?

What is the mystery behind the last door at Padmanabhaswamy temple?
Please Wait while comments are loading...