Search
  • Follow NativePlanet
Share
» »லீவு லெட்டர் கொடுத்துவிட்டு டூர் போயிருக்கார் ராகுல் காந்தி. அவர் எங்க போயிருக்கார் தெரியுமா ?

லீவு லெட்டர் கொடுத்துவிட்டு டூர் போயிருக்கார் ராகுல் காந்தி. அவர் எங்க போயிருக்கார் தெரியுமா ?

பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் காய்ச்சல் வந்ததால் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்பதை போல கட்சிப்பணிகளில் இருந்து இரண்டு வாரங்கள் விடுப்பு வேண்டும் என்று கேட்டு காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு லீவு லெட்டெர் எழுதிவிட்டு மாயமாகியிருக்கிறார் ராகுல் காந்தி. முதலில் அவர் தாய்லாந்து சென்று விட்டதாக செய்திகள் வந்தன. அதை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக மறுத்தனர். பின்னர் அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒருவேளை அவர் உண்மையாகவே உத்தரகண்டில் தான் இருக்கிறார் என்றால் ராகுல்காந்தி அங்கே எந்தெந்த சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது தெரியுமா ?

வருட இறுதி சிறப்பு விற்பனை : ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 50% சிறப்பு தள்ளுபடி பெற்றிடுங்கள்

முன்ஷியாரி :

முன்ஷியாரி :

கோரி கங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் முன்ஷ்யாரி எனும் இந்த பனிமலை பிரதேசம் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. இங்கு அமையப்பெற்றுள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் பயணிகளை வெகுவாக கவர்கிறது. கட்சி மீடிங்குகளில் நடக்கும் கலவரத்தில் இருந்த தப்பிக்க ஒருவேளை ராகுல் இங்கே வந்திருப்பாரோ?

Photo

ரிஷிகேஷ் :

ரிஷிகேஷ் :

தான் முன்னின்று பிரச்சாரம் செய்யும் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியையே தழுவுவதால் ராகுல் ஒருவேளை
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷுக்கும் கூட சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது.

கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் இந்துக்களின் மிக முக்கிய ஸ்தலமான ரிஷிகேஷுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் ரிஷிகேஷில் குவிகிறார்கள்.

Photo:Tony Leon

கேதார்நாத் :

கேதார்நாத் :

இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில், கடல் மட்டத்திலிருந்து 3584 மீ உயரத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது. கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் இருக்கிறதாக நம்பப்படுகிறது.

Photo: Paul Hamilton

பித்தோராகர் :

பித்தோராகர் :

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக கருதப்படுகிறது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும், மறுபுறம் அழகிய அல்மோரா மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. அதோடு இங்கு பாய்ந்தோடும் காளி ஆறு பித்தோராகர் மாவட்டத்தையும், நேபாள் பகுதியையும் பிரிக்கிறது.

Photo:Shyamal

தார்சூலா :

தார்சூலா :

பனியை உடுத்திக் கொண்டிருக்கும் பஞ்ச்சூலி சிகரங்கள் தார்சூலாவை ஜோஹர் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கின்றன. இந்நகரத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் புகழ் பெற்றதாக மானசாரோவர் அல்லது மனாஸ் ஏரி அறியப்படுகிறது.

Photo:rajkumar1220

அல்மோரா :

அல்மோரா :

அல்மோரா மலையிலிருந்து அழகு கொஞ்சும் பனிமூடிய இமயமலையின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். கசார் தேவி கோவில், நந்தா தேவி கோவில், சித்தை கோவில், மற்றும் கதர்மல் சூரியக் கோவில் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிரபலமான கோயில்களாகும்.

Photo:Travelling Slacker

தனௌல்டி :

தனௌல்டி :

ஓவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள் இதன் அருகில் இருக்கும் டூன் பள்ளத்தாக்கின் மதிமயங்கும் அழகில் சொக்கி விழுவது நிச்சயம்.

Photo:Alokprasad

முசூரி :

முசூரி :

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. சமயச் சிறப்பு வாய்ந்த இடங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம்.

Photo:Harshanh

நைனித்தால் :

நைனித்தால் :

‘இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மலைவாசஸ்தலமாகும்.

Photo:Enjoymusic nainital

டேராடூன் :

டேராடூன் :

கங்கை ஆறு டேராடூன் பகுதியின் கிழக்குப்பகுதியிலும் யமுனை ஆறு மேற்குப்பகுதியிலும் ஓடுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த டேராடூன் பிரதேசம் கவர்ந்து இழுக்கிறது. இனிமையான பருவநிலை மற்றும் இயற்கை எழில் நிரம்பிய சுற்றுச்சூழல் ஆகியவை இங்கு பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

Photo:Paul Hamilton

சோப்தா :

சோப்தா :

சோப்தா உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம் ‘குட்டி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

Photo: Vvnataraj

நௌகுசியாடல் :

நௌகுசியாடல் :

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான நௌகுசியாடலில் உள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்காகும். இவ்வாறு மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம்.

ராணிக்கேத் :

ராணிக்கேத் :

ராணிக்கேத் மலைவாசஸ்தலம் நைனித்தால் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும், அல்மோரா நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்திலும் இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதைக் கழிப்பதற்கேற்றவாறு பைன், ஓக் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த பசுமையான இயற்கை எழிற்சூழலை கொண்டுள்ளது. இது செழிப்பான புல்வெளிகள் மற்றும் இயற்கை எழில் ததும்பி வழியும் வனப்பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது

கௌஸனி :

கௌஸனி :

உத்தரகண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 6075 அடி உயரத்தில் கௌஸனி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி இப்பகுதியின் அழகில் மயங்கி, கௌஸனியை `இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என வியந்து கூறியுள்ளார்.

பவுரி :

பவுரி :

உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் மாவட்டத்தில் பவுரி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. பனியால் போர்த்தப்பட்டிருக்கும் பந்தர்புன்ச் மலை, ஜனலி மலை, கங்கோதரி குரூப், நந்ததேவி மலை, திரிசூல் மலை, சவுக்கம்பா மலை, கோரி பர்வத் மலை, ஹதி பர்வத் மலை, சுவர்க்கரோகினி மலை, ஜோகின் குரூப், தலாய சாகர் மலை, கேதர்நாத் மலை, சுமேரு மலை மற்றும் நீல்காந்த் மலை போன்றவற்றின் அழகுக் காட்சிகளை பவுரியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

முக்தேஸ்வர் :

முக்தேஸ்வர் :

நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்தேஸ்வர் நகரம் 350 பழமையான சிவன் கோயிலுக்காக புகழ்பெற்றது. அதுமட்டுமல்லாமல் முக்தேஸ்வர் நகரம் கவின் கொஞ்சும் இயற்கை சுற்றுலாத் தலமாகவும் அறியப்படுகிறது.

கார்பெட் தேசிய பூங்கா :

கார்பெட் தேசிய பூங்கா :

உத்தரகண்ட்டின் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான கார்பெட் தேசிய பூங்கா, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த புலி வேட்டை மன்னன் ஜிம் கார்பெட்டின் பெயரால் அழைக்கப்படுகிறது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட இந்தியாவில், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன.

ஆலி :

ஆலி :

உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.

ஹரித்வார் :

ஹரித்வார் :

'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமான ஹரித்வார் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய உத்தராகாண்டின் பிற புண்ணியஸ்தலங்களுக்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X