Search
  • Follow NativePlanet
Share
» »தமிழர் திருநாள் சிறப்பு: எந்தெந்த இடங்களில் எங்கெங்கு ஷாப்பிங் செய்யலாம்?

தமிழர் திருநாள் சிறப்பு: எந்தெந்த இடங்களில் எங்கெங்கு ஷாப்பிங் செய்யலாம்?

By Staff

ஏதேனும் ஒரு ஊருக்கு சுற்றுலாச் செல்லும்போது எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்து ஷாப்பிங் செய்வதற்கே எல்லோரும் விரும்புவர்.

அதாவது அந்த ஊருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதின் நினைவாகவோ அல்லது அந்தந்த இடங்களில் பிரபலமாக உள்ள பொருட்களை வாங்கவேண்டுமென்ற ஆர்வத்தின் காரணமாகவோ ஷாப்பிங் என்பது சுற்றுலாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது.

அப்படி நீங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் அதற்கான இடங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றின் ஷாப்பிங் பகுதிகளும், அங்கு கிடைக்கும் பொருட்களின் விவரங்கள் குறித்தும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை - ரங்கநாதன் தெரு, ரிச்சி ஸ்ட்ரீட், பாரிஸ் கார்னர்

சென்னை - ரங்கநாதன் தெரு, ரிச்சி ஸ்ட்ரீட், பாரிஸ் கார்னர்

சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகவும் புகழ்வாய்ந்த ஷாப்பிங்க பகுதியான ரங்கநாதன் தெருவில் உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ அத்தனையையும் குறைந்த விலையில் அள்ளிச் செல்லலாம். அதோடு மவுண்ட் ரோடில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள பாரிஸ் கார்னர் (பாரி முனை) ஆகிய பகுதிகள் எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க மிகச் சிறந்த இடங்கள்.

படம் : Yoga Balaji

பெங்களூர் - கமர்ஷியல் ஸ்ட்ரீட்

பெங்களூர் - கமர்ஷியல் ஸ்ட்ரீட்

பெங்களூரை சுற்றிப் பார்த்தபின் ஷாப்பிங் செய்யவேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் வரவேண்டிய இடம்தான் கமர்ஷியல் ஸ்ட்ரீட். இங்கு பிரபல பிராண்டுகளின் ஷோரூம்களுடன் உள்ளூர் காலணிகள், ஆடைகள், கலைப்பொருட்கள், பலவிதமான வீட்டுபயோகப்பொருட்கள் போன்றவற்றை விற்கும் கடைகள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான ஆடைகள் அதிக அளவில், பல வகைகளில் இங்கு கிடைக்கின்றன. ஒரு நாள் முழுக்க இந்தத் தெருவில் சுற்றி ஷாப்பிங் மற்றும் பேரத்தில் ஈடுபட்டு தெருவோரக்கடைகளிலும் சுவாரஸ்யமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு பொழுதைக்கழித்து திரும்புவது களைப்பை தருமானாலும், திரும்பவும் இங்கு வருவதற்கு ஆசைப்படுவீர்கள்!

மும்பை - கொலாபா காஸ்வே, லிங்கிங் ரோடு, ஃபேஷன் ஸ்ட்ரீட்

மும்பை - கொலாபா காஸ்வே, லிங்கிங் ரோடு, ஃபேஷன் ஸ்ட்ரீட்

இந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இந்தப் பகுதி கேட்வே ஆஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ், ரீகல் சினிமா மற்றும் லியோபோல்ட் கஃபே போன்ற மும்பையின் முக்கிய அடையாளங்களுக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கிறது.கொலாபா காஸ்வே வரும் பயணிகள் கால் நடையாக ஷாப்பிங் செல்வதே சிறந்தது. குறிப்பாக பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு பல வகைகளில் கிடைக்கும். மேலும், மும்பையின் பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருட்களெல்லாம் கொலாபா காஸ்வயிலிருந்தே மொத்தக் கொள்முதலில் வாங்கப்படுவதாக சொல்லபடுகிறது. இதுதவிர பாந்தராவில் உள்ள லிங்கிங் ரோடு, புறநகர் பகுதியில் உள்ள ஃபேஷன் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களும் பிரபலமான ஷாப்பிங் பகுதிகள்.

டெல்லி

டெல்லி

ஷாப்பர்ஸ் பாரடைஸ் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் ஜன்பத், திபெத்தியன் மார்க்கெட், சோர் பஜார், தார்யாகஞ்ச் புக் மார்க்கெட், கான் மார்க்கெட், கன்னாட் பிளேஸ், பாலிகா பஜார், சாகேத் ‘மால்' பகுதி, பஹார்கஞ்ச் மார்க்கெ, கமலா நகர், ராஜௌரி கார்டன் மார்க்கெட், சென்ட்ரல் மார்க்கெட் (லஜ்பத் நகர்), சரோஜினி மார்க்கெட், கரோல் பாக், சாந்தினி சௌக், காரி பாவ்லி போன்ற எக்கச்சக்கமான ஷாப்பிங் பகுதிகள் டெல்லியில் அமைந்துள்ளன. நீங்கள் என்ன வாங்க வேண்டுமோ அந்த பொருளுக்கென்றே ஒரு விசேஷ பஜார் டெல்லி நகரத்தில் இருக்கும். ஆடைவகைகள் முதல் மின்னணு சாதனங்கள் வரை டெல்லியில் கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லலாம்.

ஹைதராபாத் - லாட் பஜார், ஷில்பராமம்

ஹைதராபாத் - லாட் பஜார், ஷில்பராமம்

லாட் பஜார் அல்லது சூடி பஜார் என்று அழைக்கப்படும் இந்தக் கடைத்தெரு ஹைதராபாத் பழைய நகரப்பகுதியில், சார்மினாருக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. வலையல்களுக்காக நாடு முழுவதும் பிரபலமான லாட் பஜாரில், லாட் வளையல்கள் என்று அழைக்கப்படும் ‘அமெரிக்கன் டைமண்ட்' பதிக்கப்பட்ட பூச்சு வளையல்களை நிறைய சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனர். அதோடு திருமணத்திற்கு முன் மணமகளுக்கான நகைகளை வாங்க எண்ணற்றோர் இங்கு விஜயம் செய்கின்றனர். திருமணத்தை சிறப்பிப்பதற்கு இந்த லாட் பஜாரில் இல்லாத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். மேலும் ஹைதராபாத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஷில்பராமம் எனும் கலைக்கிராமத்தில் பாரம்பரிய ஆபரணங்கள், தையல் வேலைப்பாடு செய்யப்பட்ட உடைகள், கையால் செதுக்கப்பட்ட பல்வேறு மர அலங்கார பொருட்கள் ஆகியவற்றை வாங்கலாம்.

ஊட்டி

ஊட்டி

ஊட்டியில் டீ இலைகள் அல்லது காபி பீன்ஸ் வாங்காமல் ஊர் திரும்பினால் அந்தப் பயணமே வீண் என்றுதான் சொல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல் டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட், கசப்பான சாக்லேட், உலர் பழங்கள் சாக்லேட் போன்ற வீட்டில் செய்யப்படும் எண்ணற்ற சாக்லேட் வகைகளை ஊட்டியில் நீங்கள் வாங்கிச் செல்லலாம். மேலும் தோடர் பாணி எனப்படும் பழங்கால நகைகள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஷாப்பிங் மையங்களிலும் கிடைக்கின்றன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X