Search
  • Follow NativePlanet
Share
» »ஜல்லிக்கட்டு போன்றே பாரம்பரிய விளையாட்டுக்கு பெயர் பெற்ற இந்த இடங்களில் என்ன நடக்கிறது தெரியுமா?

ஜல்லிக்கட்டு போன்றே பாரம்பரிய விளையாட்டுக்கு பெயர் பெற்ற இந்த இடங்களில் என்ன நடக்கிறது தெரியுமா?

ஜல்லிக்கட்டு போன்றே பாரம்பரிய விளையாட்டுக்கு பெயர் பெற்ற இந்த இடங்கள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்

By Udhaya

தமிழர்களின் உரிமை மீட்டல் போராட்டத்தை இளைஞர்கள் கையிலெடுக்க ஊரே போராட்டத்தில் குதித்துள்ளது. தமிழர்களின் உரிமை , பாரம்பரியம் ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல, அதுபோன்ற பல விளையாட்டுக்களிலும் உள்ளது என்கின்றனர் பாரம்பரிய விளையாட்டு பிரியர்கள். அந்த வகையில் நாம் இன்று இன்னொரு விளையாட்டு பற்றியும், அவை வெகு விமர்சையாக விளையாடப்படும் இடங்களை குறித்தும் பார்க்கலாம்.

தாடை முடிகள் அனைத்தும் சிலுப்பிக் கொண்டு நிற்க, வலது காலில் பதம் தீட்டப்பட்ட கத்தியை போர் வீரனைப் போல் ஏந்திக் கொண்டு, கூர்மையான அலகால் கொத்துவதற்கு தயாராக நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் சேவல்களின் சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?

என்னங்க இதெல்லாம், கிராமத்திலும், சினிமாவிலும் மட்டும்தான் பாக்க முடியும்னு நீங்கள் சொன்னால், தயவு செய்து உங்கள் முடிவை மாற்றி விடுங்கள்.

அவிநாசி

அவிநாசி

அவிநாசி சேவல் சண்டைக்கு மிகவும் பெயர் பெற்ற பகுதியாகும். சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள தடையால், சேவல் சண்டை தடை பட்டாலும், தமிழர்களின் பாரம்பரியத்தை காப்போம் என்று சூளுரைத்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர் கோவை பகுதி மக்கள்.

இரண்டு வயதாகும்வரை சண்டை சேவலுக்கு பயிற்சி தரப்படுகிறது.

சேவலைத் தண்ணீரில் நீந்தவிட்டு மூச்சு பயிற்சி தருகிறார்கள். சேவல் களைத்துபோகுமளவுக்கு நீந்தச்செய்வார்கள். சேவல் அதிகம் எடை வைத்துவிடக்கூடாது என்பதோடு அது பாய்ந்து சண்டை போட வேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி.

PC: Amshudhanagar

தாராபுரம்

தாராபுரம்


கோவை மாவட்டத்தில் அடுத்தபடியாக தாராபுரத்திலும் சேவல் சண்டை நடத்தும் பழக்கம் பரவலாக இருந்துள்ளது. அநேக மக்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகள் ஆரம்பத்தில் தேவையற்ற ஒன்றாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் இதிலுள்ள சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் மக்களை விரும்பி பார்க்கச் செய்தது.

ஆட்டு ஈரல், முந்திரி, வேகவைத்த இறைச்சி என்று சேவலுக்கு அதிக சக்தி தரும் உணவுகளை வழங்குகிறார்கள். எந்த சேவலுடன் எந்த சேவல் போட்டியிடவேண்டும் என்பதிலும் கண்டிப்பான விதி ஒன்றை கடைபிடிக்கிறார்கள்.

PC: Karthickbala

காங்கேயம்

காங்கேயம்


காளைகளுக்கு பெயர் பெற்ற காங்கேயத்தில் சேவல் சண்டைகளும் நடைபெறும். தடை அமலில் இருப்பதால் மிகுந்த பாதிப்புக்குள்ளானதாக மக்கள் கருதுகின்றனர். எனினும் விரைவில் தங்கள் பாராம்பரியத்தை மீட்டெடுத்து தமிழ் விளையாட்டுக்களை விளையாடுவோம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

கோழிக் காலில் கத்தி கட்டி விளையாட விட்டும், கத்தி இல்லாமல் விளையாட விட்டும் வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். தமிழ்நாட்டில் இது பரவலாக அண்மைய காலம் வரையில் விளையாடப்பட்டு வருகிறது.


PC: Alex Castro

பல்லடம்

பல்லடம்

போட்டியாளர்கள் தம் சேவல்களின் கால்களில் கூர்மையான சிறுகத்தியைக் கட்டி, சேவலைக் கையில் ஏந்தியபடி எதிர் சேவலை மோதல் காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின் மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும்.

PC: Rudolph A furtado

உடுமலை

உடுமலை

சேவல் சண்டைக்கென்று பொது விதிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட எடை, குறிப்பிட்ட உயரம் உள்ள சேவல்களோடு தான் எதிர் சேவலை சண்டைக்கு நிறுத்த முடியும். சேவல்களுக்கு ஊக்க மருந்தோ, மதுபானமோ கொடுக்கப்பட்டது தெரிந்தால், போட்டியிலிருந்து நீக்கப்படும்.

PC: Alex castro

ராயபுரம்

ராயபுரம்


ராயபுரம், சூளைமேடு பகுதிகளில் ஆரவாரமாக நடத்தப்படும் இந்த சேவல் சண்டைக்கு, கிரிக்கெட், கால்பந்து போல நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

. சேவலின் காலில் கட்டி விடப்படுகின்ற கத்தி, இரண்டு அல்லது மூன்று இஞ்சு மட்டுமே இருக்க வேண்டும். சண்டை நடக்கும் பொழுது, சேவல்களை ஆசுவாசசப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்கிற நேரத்தை, " தண்ணிக்கு விடுவது ' என்பர்.

PC: Taro Taylor

பெரம்பூர்

பெரம்பூர்


ஆசுவாசத்தின் பொழுது, சேசவலுக்கு தண்ணீர் கொடுத்து, மேலும் உற்சாகப்படுத்துவர். தென்மாவட்டங்களில் ஆறு கட்டங்களாக நடைபெறும் சேவல் சண்டை, 20-20 கிரிக்கெட் போல் சென்னையில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டமும், "இருபது நிமிடம்' நடைபெறும்.

வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளிலும் சென்னையின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டுவந்த சேவல் சண்டைகள் மறைமுகமாகவே நடந்து வருகின்றன. உரிமை மீட்டெடுக்கும் இந்த போராட்டத்துக்கு பிறகு அரசு சேவல் சண்டைக்கும் அனுமதி அளிக்கும் என்றே கருதுகின்றனர்.

PC: Thessaly La Force

எண்ணூர்

எண்ணூர்

எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் இந்த சேவல் சண்டை ஜல்லிக்கட்டுக்கு நிகரான வேகத்தில் நிகழ்த்தப்படும்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டையை முழுநேர தொழிலாக கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து சேவலை தயார்படுத்துவதும், சண்டைக்கு விடுவதுமாக இருக்கிறார்கள். புழுதி பறக்கும் பூமியில், எதற்கென்றே தெரியாமல் எதிராளியுடன் தாடை முடிகளை விரித்தபடி, சேவல் சண்டை தொடரத்தான் செய்யும்


PC: Rudolph A furtado

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X