Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மோசமான விமான நிலையங்கள் இவைதான்!

இந்தியாவின் மோசமான விமான நிலையங்கள் இவைதான்!

பொறுப்பின்மையும் கவனக்குறைவும்தான் இந்த விமான நிலையங்களை இந்தப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.

விமான நிலையம் என்பது விமானங்கள் வந்து இறங்கி பயணிகளை ஏற்ற இறக்க பயன்படுத்தப்படும் இடம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த விமான நிலையம் அதற்குரிய தரத்துடனும், வசதிகளுடனும் இருப்பது தானே முறை. உலகின் பல்வேறு பகுதிகளில் என்னென்னவோ காட்சிபடுத்தப்பட்டு அழகழகாக கட்டப்பட்டுள்ள விமான நிலையங்களை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். அல்லது தெரிந்துவைத்திருக்கலாம். ஆனால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான நம் இந்தியாவில், கட்டுமானங்களுக்குப் பெயர் போன அரச பெருமக்கள் வாழ்ந்த நம் நாட்டில் மிக மோசமான விமான நிலையங்கள் என சில உள்ளன. அவை ஏன் மிக மோசமான நிலையங்கள் என்று பார்க்கலாமா?

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

இந்தியாவின் நான்காவது அதிக பயணிகள் வரும் விமான நிலையம் இதுவாகும்.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் ஒருங்கே அமையப்பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையம் இது.

விமான நிலைய பயணிகளின் கருத்துப்படி, சென்னை விமான நிலையம் சுத்தமாக இருக்கவில்லை.

அதிகம் பேர் வரும் அளவுக்கு வசதிகள் அவ்வளவாக இல்லை

கடைகளும் அதிகம் இல்லை என்கின்றனர் பயணிகள். அடிக்கடி கண்ணாடி உடைந்து விழும் சம்பவத்தால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது என்கின்றனர் அவர்கள்.

எனினும் இங்கு வரும் பயணிகள் மற்ற விமான நிலையங்களை ஒப்பிட்டுத்தான் இந்த கருத்தை தெரிவித்தார்களா என்பதையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

PC: Tshrinivasan

ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையம்

ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் இதுவாகும். இந்திய விமான படையால் தொடர் கண்காணிப்புக்கு உள்ளாகும் இந்த விமான நிலையம் அதிக ஆபத்துமிக்கதாக கருதப்படுகிறது.

67 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் நகரின் மையத்திலிருந்து 12 கிமீ வெளியே அமைந்துள்ளது

இந்த விமான நிலைய பயணிகளின் கருத்துப்படி, இங்குள்ள உணவகங்கள் சரியில்லை. உணவு தரம் மேம்படுத்தப்படவேண்டும் என்கின்றனர்.

அதிக கூட்டம், கூட்ட நெரிசலால் எரிச்சல் முதலியன உண்டாவதாக கூறுகின்றனர் பயணிகள்.


PC: Malekhanif

பக்தோக்ரா விமான நிலையம்

பக்தோக்ரா விமான நிலையம்


சிலிகுரியிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த விமான நிலையம். மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் மிகவும் பழமையான வசதிகளைக் கொண்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

இன்னும் மேம்படுத்தவேண்டிய வசதிகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விமான நிலையத்தின் வடிவமைப்பு மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்கின்றனர் சிலர்.


PC: Abymac

ஜெய்பிரகாஷ் நாராயணன் விமான நிலையம், பாட்னா

ஜெய்பிரகாஷ் நாராயணன் விமான நிலையம், பாட்னா

பீகாரின் பாட்னாவிலிருந்து 5 கிமீ தொலைவில் தெற்கில் அமைந்துள்ளது.

புதியதாக தொடங்கப்பட்ட விமான நிலையம் இது என்பதால் இன்னும் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

டாக்ஸி வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.

இங்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விமான விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவா சர்வதேச விமான நிலையம்

கோவா சர்வதேச விமான நிலையம்

கோவா மாநிலம் டோபாலிகம் அருகே அமைந்துள்ளது இந்த விமான நிலையம்.

ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பது பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாகும்.

குழந்தைகளுக்கென்று தனியாக அமைக்கப்பட்டிருக்கும் பேபி கேர் கூட இந்த விமானநிலையத்தில் இல்லை என்கிறார்கள்.

PC: A.Savin

லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம்

லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம்


கவுகாத்தியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இல்லை என்கின்றனர் பயணிகள்.

வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் ஒரே சர்வதேச விமான நிலையம் இதுமட்டும்தான்.

பயணிகள் இங்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதாக குறை கூறுகின்றனர்.

PC: Subhashish Panigrahi

சிம்லா விமான நிலையம்

சிம்லா விமான நிலையம்


ஜபார்கட்டியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் சிம்லாவிலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இதன் டெர்மினல் மிகவும் குறுகியது. 50 பேருக்கும் குறைவாகத் தான் கையாளமுடியும் என்கிறார்கள் பயணிகள்

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X