Search
  • Follow NativePlanet
Share
» »அப்பப்பா மழைச் சாரலில் நனைந்துகொண்டே கெம்மணகுண்டியை நோக்கி பயணிப்பது எத்தனை சுகம்!

அப்பப்பா மழைச் சாரலில் நனைந்துகொண்டே கெம்மணகுண்டியை நோக்கி பயணிப்பது எத்தனை சுகம்!

அப்பப்பா மழைச் சாரலில் நனைந்துகொண்டே கெம்மணகுண்டியை நோக்கி பயணிப்பது எத்தனை சுகம்!

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த காடுகள், பசுமையான பச்சை புல்வெளிகள் யாவற்றையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.

கெம்மனகுண்டி நகரம் ஒரு காலத்தில் கிருஷ்ணராஜ வடியார் மன்னருக்கு கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தது. அதன் காரணமாகவே இதற்கு கே.ஆர் குன்று என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் கெம்மனகுண்டியில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் உருவாக்க்கப்பட்டு அந்த நகரமே ஆடம்பரமான உல்லாச நகரமாக காட்சியளித்தது.

அதன் பின்னர் கிருஷ்ணராஜ வடியார், கெம்மனகுண்டியை கர்நாடக அரசுக்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்போது இந்த நகரம் கர்நாடக தோட்டக்கலை துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நகரம் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் முழுவதுமாக காணலாம் வாருங்கள்.

கெம்மனகுண்டி சுற்றுலா

கெம்மனகுண்டி சுற்றுலா

கெம்மனகுண்டி நகரம் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை அனைத்தையும் நீங்கள் ஒரே நாளில் காண்பதென்பது முடியாத காரியம்.

Srinivasa83

கெம்மனகுண்டி சுற்றுலா

கெம்மனகுண்டி சுற்றுலா

செங்குத்தான குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இசட் முனையை அடைய 30 நிமிடங்கள் ஆகும்.

Harshith S

கெம்மனகுண்டி சுற்றுலா

கெம்மனகுண்டி சுற்றுலா

இதன் உச்சியிலிருந்து கெம்மனகுண்டி நகரை சுற்றியுள்ள பகுதிகளின் அழகிய காட்சிகளை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

Bdeepu

கெம்மனகுண்டி சுற்றுலா

கெம்மனகுண்டி சுற்றுலா

ஹெப்பே அருவி, காலஹஸ்தி மற்றும் கல்லதிகிரி என்ற பெயர்களில் அறியப்படும் கல்ஹட்டி நீர்வீழ்ச்சி போன்றவை கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

Srinivasa83

ஹெப்பே அருவி

ஹெப்பே அருவி

கெம்மனகுண்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காப்பித் தோட்டத்துக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஹெப்பி அருவியின் அழகை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த அருவி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பெரிய பகுதி தொட்டா ஹெப்பி என்றும், சிறியது சிக்கா ஹெப்பி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் நீராடுபவர்களுக்கு தோல் நோய் சம்பந்தமான நோய்கள் குணமாகுமேன்று சொல்லப்படுகிறது.

Srinivasa83

 காலஹஸ்தி

காலஹஸ்தி

கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கல்ஹட்டி நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம். இது காலஹஸ்தி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகஸ்திய முனிவர் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

Vinayak wiki

கெம்மனகுண்டி சுற்றுலா

கெம்மனகுண்டி சுற்றுலா


அதோடு விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்றும் இங்கு உள்ளது. முல்லயநாகிரி மற்றும் பத்ரா புலிகள் பாதுகாப்பு காடுகள் ஆகியவையும் கெம்மனகுண்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

Chaitra Banakar

Read more about: travel rain bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X