Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

பருவ மழைய கொண்டாடனும்னா இதுதானுங்க சரியான இடம்

பெங்களூரு அப்படி ஒரு அட்டகாசமான காலச்சூழல் நிறைந்த நகரம். வெயில்காலம் தவிர்த்து மற்ற ஏனைய காலங்களில் பெங்களூரு சொர்க்கம் என்றே சொல்லலாம். மழைக்காலங்களில், சுற்றித் திரியும் பட்டாம்பூச்சி போல நாமும் பெங்களூரிலிருந்து லாங் டிரைவ், பைக் ரைடு போய் வரலாம். ஜாலியா மழைச்சாரலில் நனஞ்சிட்டே..

உங்களுக்கு மழை பிடிக்குமா? நெடுந்தூரம் பயணம் பிடிக்குமா? அப்ப உடனே முடிவெடுங்க இந்த மழைக்காலத்த நீங்க அனுபவிக்கவேண்டிய அந்த 10 டாப் பகுதிகள். நிச்சயம் உங்களுக்கு சிறந்த அனுபவம் காத்திருக்கு....

குடகு மலை பயணம்

குடகு மலை பயணம்

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் இது மிகவும் அழகான, அமைதியான இயற்கையை ரசிக்க ஏதுவான பகுதியாகும்.

குடகுமலையில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய பகுதிகளாக திபெத்தியன் மடம், அபெய் நீர்வீழ்ச்சி, குசால்நகர் முதலியன உங்களை சொக்கவைக்கும் அழகுடன் திகழ்கின்றன.

Kalidas Pavithran

 கூர்க் எனும் குடகு மலை

கூர்க் எனும் குடகு மலை

பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 5.30 மணி நேரத்தில் செல்லும் அளவுக்கு 243 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குடகுமலை.

சென்னையிலிருந்து குடகு செல்ல குறைந்தது 10 மணி நேரம் ஆகின்றது.

நந்தி மலை அல்லது குன்றுகள்

நந்தி மலை அல்லது குன்றுகள்

பெங்களூரு அருகிலுள்ள நந்தி மலை, இந்தியாவின் முக்கிய மழைக்கால சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும்.

இங்கு சூரிய உதயம் மற்றும் மறைவு ஆகியவை அட்டகாசமான காட்சிகளாக இருக்கும். உண்மையில் உங்களை மெய்மறக்கச் செய்யும் இந்த நந்தி மலைத்தொடரை காணத் தவறாதீர்கள்.

Shyamal

நந்தியில் ஓர் அந்தி மழை

நந்தியில் ஓர் அந்தி மழை

அதிகபட்சம் சென்னையிலிருந்து 7 மணி நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில் அமைந்துள்ளது நந்தி குன்றுகள்.

பெங்களூரிலிருந்து இது மிகவும் அருகில் உள்ளது. அதிகபட்சம் 1.30 மணி நேரத்தில் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஜாக் அருவி

ஜாக் அருவி


மலையிலிருந்து கீழே அருவி பாயும் அழகை ரசிக்க இரண்டு கண்கள் பத்துமா.. இல்லை தானே என்னை விட்டால் நாள் முழுக்க ரசித்துக் கொண்டிருப்பேனே.. உண்மைதானே ... பெங்களூருக்கு அருகில் இவ்வளவு அழகான நீர்வீழ்ச்சியா இன்னும் நாம் செல்லவில்லையே என்று ஆதங்கப் படவேண்டாம்.. இப்போது முடிவெடுத்தாலும் போய்ட்டு வந்துடலாம்.

Vmjmalali

பெங்களூருவில் ஒரு தங்க அருவி

பெங்களூருவில் ஒரு தங்க அருவி


சென்னையிலிருந்து செல்ல கொஞ்சம் கூடுதல் தொலைவு என்றாலும், நீங்கள் செய்யும் பயணம் துளியளவும் வீணாவதில்லை. அந்த அளவுக்கு சிறப்பான பயணமாக அமையும்.

சென்னையிலிருந்து 13 மணி நேரமும், பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 7 மணி நேரமும் ஆகும்.

டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?

மூணாறு

மூணாறு

மூணாறுக்கு பொதுவாக தேனிலவு கொண்டாடத்தான் செல்வார்கள் என்ற எண்ணம் அநேக பேருக்கு இருக்கிறது. அட மூணாறு இதுக்கு கூட ஏற்றதா என்று நீங்கள் உங்கள் கல்லூரி தோழர்களுடன் சென்று வந்தால் கூறுவீர்கள். உண்மையாக கல்லூரி கால சுற்றுலாவுக்கு சிறந்த இடம் இதுவாகும்.

Bipinkdas

இந்தியாவில் எங்கெல்லாம் மிகச்சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் தெரியுமா?

ஊட்டி

ஊட்டி

ஊட்டி.. அடிக்கடி போய்ட்டு வரும் பகுதிதானே என்கிறீர்களா.. பெங்களூருவிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்தாலும், சிறப்பான இடம் இதுவாகும். சென்னையிலிருந்தும் சற்று தொலைவுதான். ஆனால் உங்கள் கோடை விடுமுறைக்கு மட்டுமல்லாமல்,, இங்கு மழையையும் ரசிக்க மிக அழகான இடங்களும் உள்ளன என்பதை மறவாதீர்கள்.

ChefAnwar1

சிக்மகளூர்

சிக்மகளூர்


கபைஃன் எனப்படும் ஒருவித மூலக்கூறுவின் வாசம் உங்களுக்கு பிடிக்குமா. அதுதானுங்க காஃபிக்களின் ஒரு விதவாசம். அது ஒரு பகுதிமுழுவதும் பரவி இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க. அதுதான் கர்நாடகத்தின் மிக உயரமான சிகரமான சிக்மகளூர்.

Kishrk91

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சென்னையிலிருந்து 609 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிக்மகளூரு நீங்கள் கட்டாயம் பார்த்துவிட்டு வரவேண்டிய பகுதியாகும்.

இது பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 5 மணி நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில் உள்ளது.

மைசூர்

மைசூர்


சென்னையிலிருந்து 477 கிமீ தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 150 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது மைசூரு.

கர்நாடகத்தின் கலை நகரமான இந்த மைசூரு தென்னிந்திய மக்களுக்கு சூப்பரான ஒரு வாரஇறுதி விடுமுறைகால கொண்டாட்டம் தரும் இடமாகும். இரவு நேரத்தில் மினுமினுக்கும் கோட்டையை கண்டு மகிழுங்கள்.

Raghuapara

வயநாடு

வயநாடு

மூன்று மாநிலங்களை எல்லையாகக் கொண்ட இந்த இடம் இந்தியாவின் மிக முக்கிய கோடைகால சுற்றுலாத் தளமாகும். அதே நேரத்தில் மழைக் காலங்களிலும் இங்கு அனுபவிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

டிரெக்கிங் செல்வதற்கும், காடுகளில் பயணம் செல்ல விரும்புவபர்களுக்கும் ஏற்ற இடம் இதுவாகும்.

Nitin Pai

ஏற்காடு

ஏற்காடு

சென்னையிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஏற்காடு, ஏழைகளுக்கு ஏற்ற இடமாக கருதப்படுகிறது. இங்கு செல்லவேண்டுமென்றால் பயணச் செலவு தவிர பெரியதாக வேறெந்த செலவும் இல்லை. அதனால் தான் இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.

Swarthika Palanisamy

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி

பெங்களூரு அருகிலேயே ஆனால் பெரிதாக யாரும் கேள்விப்பட்டிராத இந்த நீர்வீழ்ச்சி ஒரு இயற்கையின் கொடை என்றே சொல்லலாம்.

கர்நாடகத்தின் மிக மிக அட்டகாசமான நீர்வீழ்ச்சி என்றால் அது இதுதான்.

Goutamsubudhi

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


பெங்களூருவிலிருந்து 138 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு குறைந்த பட்சம் 3 மணி நேரம் ஆகிறது.

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

Read more about: travel monsoon
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X