உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

ஜகத்தீஷ் கோயில், உதய்பூர்

பரிந்துரைக்கப்பட்டது

முன்னர் ஜகன்னாத் ராய் கோயில் என்றழைக்கப்பட்ட இந்த ஜகத்தீஷ் கோயில் உதய்பூரிலுள்ள சிட்டி பேலஸ் எனும் அரண்மனையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. விஷ்ணுக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் உதய்பூர் நகரத்தில் இருப்பதிலேயே பெரிய கோயிலாகும்.

உதய்பூர் புகைப்படங்கள் - ஜகத்தீஷ் கோயில்
Image source:www.itslife.in
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

இந்தோ ஆரிய கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கும் இந்த கோயில் மஹாராணா ஜகத்சிங் மன்னரால் 1651ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள விஷ்ணு சிலை நான்கு கரங்களுடன் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.இந்த கோயிலானது மூன்று அடுக்குகளுடனும், அலங்கார வடிப்புகளைக்கொண்டுள்ள தூண்களுடனும் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மேற்கூரைகளுடனும் காட்சியளிக்கின்றது.

முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் ஒவ்வொன்றிலும் 50 தூண்கள் அமைந்துள்ளன. கோயிலின் கோபுரம் 79 அடி உயரம் கொண்டதாய் உள்ளது. இதில் இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கருடபகவானின் சிலை இந்த விஷ்ணு கோயில் நுழைவாயிலை பாதுகாவல் செய்வது குறிப்பிடத்தக்கது.ஜகத்தீஷ் கோயிலுக்கு அருகிலேயே வேறு நான்கு சன்னதிகளும் அமைந்துள்ளன. இவை சூரியக்கடவுள், கணேசக்கடவுள், சிவபெருமான் மற்றும் சக்தி தேவி போன்ற கடவுளர்களுக்காக எழுப்பப்பட்டுள்ளன.

Please Wait while comments are loading...