உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

சஜ்ஜன்கர், உதய்பூர்

பரிந்துரைக்கப்பட்டது

சஜ்ஜன்கர் அல்லது மழை அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை உதய்பூரின் அற்புத மாளிகைகளில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 944 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரிலுள்ள பன்ஸ்தாரா சிகரத்தின்மீது இந்த அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேவார் வம்சத்தின் மஹாராணா சஜ்ஜன் சிங் இந்த அரண்மனையை 1884ம் ஆண்டில் மழை மேகங்களை பார்வையிடுவதற்காக உருவாக்கியுள்ளார்.இந்த அரண்மனை முழுவதும் வெள்ளை பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பயணிகள் பிச்சோலா ஏரி மற்றும் சூழ்ந்துள்ள பிரதேசத்தின் அழகை நன்கு பார்த்து ரசிக்கலாம். அரண்மனையிலுள்ள தாங்கு தூண்களில் பலவிதமான இலைகள் மலர்கள் போன்ற புடைப்பு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஒன்பது அடுக்குகளை இந்த அரண்மனை அக்காலத்தில் ஒரு வான சாஸ்திர மையமாக மன்னரால் மழைக்கால மேகங்கள் மற்றும் இயல்புகளை ஆய்வு செய்ய பயன்பட்டிருக்கிறது.

உதய்பூர் புகைப்படங்கள் - சஜ்ஜன்கர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

இருப்பினும் மன்னரின் அகால மரணம் இந்த அரண்மனைக் கட்டுமானத்தை பாதியில் நிற்க வைத்திருக்கிறது. பின்னர் வந்த மன்னரான மஹாராணா ஃபதேஹ் சிங் இந்த அரண்மனையை பூர்த்தி செய்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...