உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

உத்வாடா - பாரசீகர்களின் மையம்!

உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில் மக்கள் குடியேறுவதற்கு முன் ஒட்டகம் மேய்க்கப்பட்டதால் உத்வாடா என்ற பெயரை இந்த இடம் பெற்றது.

உத்வாடா புகைப்படங்கள் - அடஷ் பெஹ்ரம் - அரண்மனை 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

பெர்சியாவில் (தற்போது ஈரான்) வாழ்ந்த மக்கள் (பாரசீகர்கள்), இஸ்லாமியர்களின் தாக்குதலினால் இந்தியவிற்கு 10-ஆம் நூற்றாண்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இந்தியாவிற்குள் வல்சாத் வழியாக வந்து பின்னர் சஞ்சன் என்ற துறைமுகத்தை உருவாக்கினார்கள்.

ஈரானிலிருந்து அடஷ் பெஹ்ரம் எனப்படும் புனித ஜோதியை அவர்கள் தங்களுடன் எடுத்து வந்தார்கள். இது உத்வாடாவில் முக்கிய ஈர்ப்பாக இன்றும் விளங்குகிறது.  துறைமுகம் கண்டுபிடித்த பின்னர் இதனை சஞ்சன் வழியாக அவர்கள் எடுத்துக் கொண்டு வந்தனர்.

பின்னர் முகமது பின் துக்ளக் சஞ்சன் மீது படை எடுத்ததால், அங்கிருந்து தப்பி உத்வாடாவில் உள்ள அடஷ் பெஹ்ரம்மில் புனித சின்னமாக வைக்கப்பட்டது. உலகில் உள்ள ஒன்பது அடஷ் பெஹ்ரம்மில் ஒன்றாக விளங்குகிறது உத்வாடா அடஷ் பெஹ்ரம். இந்த கட்டடம் பல முறை புதுபிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அடஷ் பெஹ்ரம் உலகிலேயே பழமையான கோவில் ஜோதியை கொண்டது. இது தொடர்ந்து எரிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அடஷ் பெஹ்ரத்தை ஈரான்ஷா என்றும் அழைக்கின்றனர்.

இது உருவான தினத்தை ஒவ்வொரு வருடமும் ஷாஹென்ஷாஹி அல்லது இம்பீரியல் சோரோஸ்ட்ரியன் நாட்குறிப்பில் உள்ள ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாள் பெரிதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடம் 20-ஆம் நாள் பல சடங்குகளும் நடைபெறும். இது வெரெத்ரக்னா எனப்படும் வெற்றியின் மேலாதிக்கத்துக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது. உத்வாடா கடற்கரை மற்றும் பாராசீகரின் உணவு வகைகளும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக விளங்குகிறது.

Please Wait while comments are loading...