`அச்சுவா மேகி' மலையின் சரிவுகளில் அமைந்துள்ள காசெளபுங்க் ஏரி உக்ருளுக்கு மிக அருகே அமைந்துள்ளது. இது ஒரு இயற்கையான ஏரி ஆகும். இது ஹயாங் நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சுமார் 9 ஏக்கர் அளவிற்கு பரவியுள்ள இந்த ஏரியின் தோற்றம் தோராயமாக இந்திய வரைபடத்தை ஒத்துள்ளது. பொதுவாக மழை காலங்களில் ஏரியின் அளவு அதிகரிக்கிறது, அத்துடன் நைலி நதியின் நீரும் சேரும் பொழுது, இந்த ஏரி மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.
காசெளபுங்க் ஏரியானது, அதன் அனைத்து பக்கங்களிலும் குன்றுகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த ஏரி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காகன அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இங்கு பல வண்ணமயமான மீன்கள் காணப்படுகின்றன. ஆகவே செயற்கை முறையிலான மீன் வளர்பிற்கு இது ஏற்ற இடமாகும்.
இந்த ஏரியானது `அசோ ஜெனெப்யு மேகி' ஏரி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் சுத்தமான நீர் மற்றும் இதனைச் சுற்றியுள்ள அழகான குன்றுகள் ஆகியன இந்த ஏரியை ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுகின்றன. இங்குள்ள சிறிய மலைக்குன்றுகளில் ஏறிச் செல்வது ஒரு அற்புதமான உடற்பயிற்சியாகும்.