லுங்ஹார் ஸிஹாய் ஹங்ரெய், உக்ருள் மாவட்டத்தில் உள்ள ஒரு நீண்ட, தட்டையான மலை என்பதுடன் சுற்றுலா பயணிகள், மற்றும் உள்ளூர் மக்கள் அடிக்கடி செல்லும் ஒரு முக்கியமான சுற்றுலா தலம் ஆகும். இது ஸிஹாய் ஹங்ராய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இடம் சிரொய் மலை உச்சியுடன் இணைகிறது.
லுங்ஹார் ஸிஹாய் ஹங்ரெய்யில், தாவரங்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதோடு இங்கு பல்வேறு வகையான பூக்கள், மற்றும் பழங்கள் விளைகின்றன. அவற்றுள், அரிய மல்லிகை, திராட்சை, பேஷன் பழம், ஆப்பிள், பேரிக்காய், பிளம், பீச் போன்றவை முக்கியமானவை.
இந்த இடத்தின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக, ஒரு அழகான மற்றும் அமைதியான நீர் வீழ்ச்சி ஒன்று இங்கு அமையப்பெற்றுள்ளது. மாசடையாத ஸிஹாய் ஹங்ரெய் யின் அழகு, நாம் இவ்விடத்தில் செலவு செய்த நாட்களின் நினைவை என்றும் நினைவில் வைத்து போற்றத்தக்க வகையில் இருக்கும்.
ஸிஹாய் என்கிற வார்த்தை ஒரு பொதுவான வார்த்தையாகும். அது உக்ருள் மாவட்டத்தில் அமைந்துள்ள `ஸிஹாய் ஹுல்லென்',` ஸிஹாய் ஹுனொவு', மற்றும் `ஸிஹாய் கஹப்ஹுங்க்' உட்பட பல கிராமங்களை குறிக்கும் ஒரு பொதுவான குறிப்புச் சொல் ஆகும்.