Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உணா » ஈர்க்கும் இடங்கள் » தரம்சாலா மஹன்தா

தரம்சாலா மஹன்தா, உணா

17

ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள உணா மாவட்டத்திலிருந்து 62கிமீ தொலைவில் உள்ள தரம்சாலா மஹன்தா இம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஐந்து கடவுள்களை வழிபடுபவர் அல்லது 'பஞ்ச தேவா உபாசகா' என்றழைக்கப்பட்ட பாபா நகோடார் தாஸ் அவர்களால், முகலாய மன்னர் மகா அக்பரின் காலத்தில், இந்த இடம் அமைக்கப்பட்டது.

இதன் நிறுவனர் மகா விஷ்ணுவின் மீது மிகவும் பக்தியுடையவர் ஆவார். இங்கிருக்கும் இரண்டு கட்டிடங்கள் அவற்றில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்களுக்காக மிகவும் புகழ் பெற்றவையாகும். 'பைதக்' அல்லது 'அமரும் அறை'யில் காணப்படும் பழமையான ஓவியங்களின் தொகுப்பும் இவற்றில் அடங்கும்.

மஹன்தா லட்சுமி தாரின் கருத்துப்படி, 'மிஸ்ட்ரி' அல்லது கட்டிட வேலை செய்பவர்களைக் கொண்டு இந்த ஓவியங்களை அவருடைய பாட்டனார் காலத்தில் உருவாக்கினார்கள். சுவரோவியங்கள் மட்டுமல்லாமல், இதன் சுவர்களில் வரையப்பட்டுள்ள நாட்டுப்புற ஓவியங்களும் பார்வையாளர்களின் கருத்தைக் கவருவதாக இருக்கும்.

எழுத்தாளர் மீரா சேத் எழுதியுள்ள 'மேற்கு இமாலயப்பகுதிகளின் சுவரோவியங்கள் (Wall Paintings of the Western Himalayas)' என்னும் நூலில், இப்போதைய மஹன்தாவின் தந்தையான மஹன்தா லட்சுமி தாரைப் பற்றி குறிப்பிட்டு, அவருக்கு 'சனாட்' அல்லது 'மானியம்' இருந்தது என்கிறார். இந்த மானியம் அவருக்கு முன் பதவியிலிருந்தவர்களுக்கு முகலாய பேரரசர் அல்லது அவுரங்கசீப்பினால் 1667-ல் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu