விஸ்வநாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான ஆன்மீக மையமான ஷக்தி கோயில், அதன் 6 அடி உயர திரிசூலத்துக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த திரிசூலத்தின் அடிப்பகுதி சுமார் 90 செ.மீ. சுற்றளவு கொண்டதாகக் காணப்படுகிறது.
இத்திரிசூலத்தின் மேல்புறம் இரும்பாலும், கீழ்புறம் செம்பினாலும் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பண்டைய புராணக் கதைகளின் படி, இந்து தெய்வமான துர்கா தேவி, திரிசூலத்தை உபயோகித்து அசுரர்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.
மார்க்கண்டேய ரிஷி கோயில், சாக்ஷி கோபால் கோயில், குதேதி தேவி கோயில், கணேஷ் கோயில், கோபேஷ்வர் மஹாதேவ் கோயில் மற்றும் கோட்டேஷ்வர் மஹாதேவ் கோயில் ஆகியன இதற்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான ஏனைய கோயில்களாகும்.