Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வதோதரா » வானிலை

வதோதரா வானிலை

கோடைகாலம்

வதோதராவின் கோடைக்காலம் மிகவும் வெப்பமாகவும், வறட்சியாகவும் இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை அதிகபட்சம் 36°C அல்லது 97°F மற்றும் குறைந்தபட்சம் 23°C அல்லது 73°F வரையிலும் இருக்கும்.

மழைக்காலம்

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக ஈரப்பதமான பருவநிலையைக் கொண்டிருக்கும் இந்நாட்களில் 93 செமீ அல்லது 36.7 அங்குல அளவு மழைப்பொழிவை வதோதரா பெறும். ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டங்களில் நிலவும் சராசரி வெப்பநிலையாக குறைந்தபட்சம் 24°C அல்லது 75°F மற்றும் அதிகபட்சம் 36°C அல்லது 97°F வரையிலும் இருக்கும். விட்டு விட்டு மழை பெய்தாலும், கனமழையின் காரணமாக விஸ்வாமித்ரி நதி பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த காலத்தில் இந்நகரம் சற்றே சேறும், சகதியும் உள்ளதாக இருக்கும்.

குளிர்காலம்

வடக்கத்திய காற்றினால் சற்றே ஈரப்பதமாக ஜில்லென்றிருக்கும் இந்த பருவநிலையில் வெப்பநிலை குறைந்தபட்சம் 15°C அல்லது 59°F மற்றும் அதிகபட்சம் 30°C அல்லது 85°F வரையிலும் இருக்கும். நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் குளிர் பருவநிலை நிலவும் இடமாக இது உள்ளது.