Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வல்சாத் » வானிலை

வல்சாத் வானிலை

வல்சாத்தில் ஆண்டுமுழுவதும் இனிமையான காலநிலை நிலவுகிறது. கோடைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்து காணப்படுகிறது. குளிர்காலம் மிகச்சிறந்த காலமாகும். மழைக்காலத்தில் அதிகமழைப்பொழிவு இல்லாததால், இக்காலத்திலும், காலநிலை மிக இனிமையாகவே உள்ளது.

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை நிலவும் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம்  40°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பம் 22°C ஆகவும் உள்ளது.

மழைக்காலம்

வல்சாத்தில் மழைக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கிறது. இப்பருவத்தில் அதிக மழைப்பொழிவு இருப்பதில்லை. காலநிலை மிகவும் ரம்மியமாக இருக்கும்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் ஜனவரி வரையிலும் இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. இப்பருவத்தில் வெப்பநிலையானது 12°C முதல் 31°C வரை இதமாக இருக்கும். இங்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு தகுதியான காலநிலை இதுவாகும்.