Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » திபெத்திய உயர் படிப்புகளுக்கான மத்திய கல்வி நிறுவனம்

திபெத்திய உயர் படிப்புகளுக்கான மத்திய கல்வி நிறுவனம், வாரணாசி

60

திபெத்திய உயர் படிப்புகளுக்கான மத்திய கல்வி நிறுவனம் (சிஐஹெச்டிஎஸ்), தலாய் லாமாவுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின் 1967 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் நிறுவப்பட்டது.

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் திபெத்திய இளைஞர்கள் மற்றும் யுவதிகள், மற்றும் ஹிமாலயன் பகுதியின் எல்லையோரங்களில் வாழ்ந்து வருவோரின் கல்வி வேட்கையைத் தணிப்பதற்காகவே சிஐஹெச்டிஎஸ் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தன்னாட்சி நிறுவனமாக, இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சகத்தின் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வந்த இந்நிறுவனம் 1988 ஆம் ஆண்டில் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான இது, பௌத்தவியல், திபெத்தியவியல் மற்றும் ஹிமாலயன் பட்டப்படிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றது.

இது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகக் கருதப்படுகிறது. மேலும் கல்வித்துறையில் இந்நிறுவனம் ஆற்றி வரும் நிகரற்ற சேவையைப் பாராட்டி, நேஷனல் அசெஸ்மென்ட் மற்றும் அக்ரெடிட்டேஷன் கவுன்சில் (என்ஏஏசி), இதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தில் அமைந்துள்ள ஷாந்தாரக்ஷிதா நூலகமானது, ஏராளமான புத்தகங்களோடு, இந்திய மற்றும் பௌத்த இலக்கியங்களைச் சேர்ந்த பல அரிய நூல்களின் கையெழுத்துப்பிரதிகள் மற்றும் மொழிபெயர்ப்புகளையும் கொண்ட விசாலமான களஞ்சியமாகத் திகழ்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu