Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேலூர் » வானிலை

வேலூர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையான காலம் வேலூர் பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலை நடுநிலையாக காணப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் வேலூருக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளன.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் வேலூர் பகுதியில் சுட்டுப்பொசுக்கும் உஷ்ணம் நிலவுகிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலை 38.5°C என்ற அளவில் காணப்படுவதோடு45°C வரை உச்சத்துக்கு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 40 முதல் 63 சதவீதம் வரையில் கடும் ஈரப்பதமும் காணப்படும். எனவே கோடைக்காலத்தில் வேலூர் நகரத்துக்கு விஜயம் செய்வது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் வேலூர் பகுதி மிகக்குறைவான அல்லது மிதமான மழைப்பொழிவை பெறுகிறது. வடகிழக்கு பருவமழை இப்பகுதிக்கு 996.7 மி.மீ மழையை அளிக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இங்கு வடகிழக்குப்பருவ மழைக்காலம் நீடிக்கிறது. தென்மேற்கு பருவமழையையும் இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் வேலூர் பகுதி இனிமையான சூழலுடன் காட்சியளிக்கின்றது. இக்காலத்தில் 10°அளவில் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெரும்பாலான பயணிகள் வேலூருக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர்.