விதாஷாவிற்கு அப்பால் 84 கிலோ மீட்டர் தொலைவில் கதர்மல் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை விதிஷாவிலிருந்து எளிதாக அடையலாம். விதிஷாவிலிருந்து பதாரிக்கு பல பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் கதர்மல் கோவிலை அடைய முடியும். இங்கு காணப்படும் பல இடைக்காலத்து கோவில்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அதில் ஒன்று கதர்மல். இதன் உயரம் இதனை எங்கு நின்றாலும் காணச் செய்யும்.
இக்கோவில் இரண்டு வித ஆமைப்பில் தெரியும் காரணம் இது இரண்டு வித அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடித்தளங்களும் இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தை குறிக்கும்.
இக்கோவில் 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இது ஜெயின் மற்றும் இந்து கோவில்களின் பல்வேறான துண்டுகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குவாலியர் நகரத்தில் உள்ள தெலி கா மந்திரின் நினைவாக இவ்விடம் உருவாக்கப்பட்டுள்ளது.