லோஹாங்கி பிர் என்ற இடம் உள்ளடக்கிய பாறையாலான இடம். உள்ளூரில் லொஹாங்கி பிர் என்றழைக்கப்படும் ஷேக்ஸ் ஜலால் கிரிஷ்டி துறவியின் பெயரை இவ்விடத்திற்கு வைத்திருக்கின்றனர். ஊரின் அனைத்து பகுதிகளிலும் இந்த மலையின் மேல்தளத்தை பார்க்கலாம்.
இந்த பாறை 7 அடி உயரத்துடன் 10 மீட்டர் பரப்பளவு கொண்ட மேல்தளத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றது. லோஹாங்கி பிரின் பெயரை கொண்ட கல்லரை ஒன்று பல சிதிலமடைந்த சிற்பங்களுடன் காணப்படுகின்றது.
பெர்ஸியன் மொழியில் இரண்டு கல்வெட்டுகளை இங்கு காண முடியும். கல்வெட்டுகளில் ஒன்று, 1460 கி.பி. காலத்தில் முஹமது முதலாம் மன்னரின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது, மற்றொன்று அக்பரின் ஆட்சி காலத்தில் 1583-ல் அமைக்கப்பட்டது.
கிமு 1-ம் நூற்றாண்டு தேதியிட்ட கிணறு மற்றும் ஒரு பெரிய மணியை இங்கு பார்க்க முடியும். இடைக்காலத்தில் கட்டப்பட்ட தேவி அன்னபூர்ணாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பாதி சிதிலமடைந்த கோவிலை இங்கு பார்க்கலாம்.