Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விஜயவாடா » வானிலை

விஜயவாடா வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே விஜயவாடாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளன. மிதமான, குளுமையான சூழல் நிலவும் இந்த மாதங்கள் பயணத்துக்கு மிகவும் உகந்தவையாகும். அது மட்டுமன்றி, இந்த மாதங்களில் டெக்கான் திருவிழா, லும்பினி திருவிழா, துசேரா மற்றும் தீபாவளி போன்ற முக்கியமான திருவிழாக்களும் கோலாகலமாக விஜயவாடா நகரத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே இம்மாதங்களில் விஜயவாடாவுக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.

கோடைகாலம்

ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை விஜயவாடா நகரத்தில் கோடைக்காலம் நிலவுகிறது. குறைந்தபட்சம் 20° C முதல், அதிகபட்சம் 47° C வரை வெப்பநிலை நிலவும் இக்காலத்தில் உஷ்ணமும், ஈரப்பதமும் மிக கடுமையாக இருக்கும். எனவே கோடைக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வது மிகுந்த அசௌகரியத்தை தரக்கூடும்.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி அக்டோபர் மாதம் வரை விஜயவாடா நகரம் கடுமையான மழைக்காலத்தைப்பெறுகிறது. மழைப்பொழிவினால் காரணமாக நகரின் வெப்பநிலை குறைந்து இதமான சூழலுடன் விஜயவாடா காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

குளிர்காலமே விஜயவாடா நகரத்துக்கு விஜயம் செய்ய உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் சராசரியாக வெப்பநிலை10° C முதல் 30° C வரை காணப்படுகிறது. இனிமையான மற்றும் இதமான சூழல் குளிர்காலத்தில் நிலவுகிறது.