Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரங்கல் » வானிலை

வாரங்கல் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட மாதங்கள் வாரங்கல் சுற்றுலாவுக்கு மிகவும் உகந்ததாக விளங்குகின்றன. இவை கோடையின் வெப்பம், மழையின் சொதசொதப்பு போன்றவற்றை நீக்கிய, இதமான சூழலைக்கொண்ட மாதங்களாகும். அதுமட்டுமல்லாமல் ஈத் பண்டிகை, துசேரா மற்றும் தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகைகளும் இம்மாதங்களில் இடம் பெறுவதால் சுற்றுலாவுக்கு ஏற்ற மாதங்களாக இவை பரிந்துரைக்கப்படுகின்றன.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் வாரங்கல் பகுதியில் மிகக் கடுமையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவுகிறது. இக்காலத்தில் சராசரியாக 20° C முதல் 40° C வரை வெப்பநிலை காணப்படுகிறது. வெளிச்சுற்றுலாவுக்கு ஏற்றதில்லை என்பதால் கோடைக்காலம் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். அப்படியே பயணித்தாலும் மெலிய பருத்தி உடைகளுடன் செல்வது நல்லது.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை வலிமையான தென்மேற்கு பருவக்காற்றுகளின் மூலம் வாரங்கல் பகுதி மழைப்பொழிவை பெறுகிறது. மழையோடு பலத்த காற்றும் சேர்ந்து வீசுகிறது. மழைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்ளும்போது மழை அங்கி, குடை மற்றும் கனமான ஆடைகளுடன் பயணிப்பது நல்லது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் வாரங்கல் பகுதியில் சராசரியாக வெப்பநிலை13° C முதல் 32° C வரை காணப்படுகிறது. இக்காலத்தில் சிறு மழைத்தூறல்களும் காணப்படலாம். அதிகமான சுற்றுலா பரபரப்புகள் இக்காலத்தில்தான் காணப்படுகின்றன. பல இடங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் இந்த குளிர்காலத்தில் வாரங்கல் நகருக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.