Want to share your reaction with friends?
ஃபாண்டம் ராக், வயநாடு
‘ஃபாண்டம் ராக்’ எனும் இந்த சுற்றுலா அம்சம் வயநாடு பகுதியில் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஃபாண்டம் ராக் என்பது இயற்கையாகவே மண்டையோட்டு வடிவத்தில் உருவாகியிருக்கும் ஒரு பாறை அமைப்பாகும். உள்ளூர் மக்கள் இதனை ‘சீங்கேரி மலா’ அல்லது ‘தலைப்பாறை’ என்று அழைக்கின்றனர்.
தத்ரூபமான ஒரு மனித மண்டையோடு நம்மை உற்று பார்ப்பது போன்று உருவாகியிருக்கும் இந்த மலைப்பாறை அமைப்பானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்கிறது. செதுக்கப்பட்டாற் போன்ற மண்டையோட்டு அமைப்பை ஒத்திருப்பதால் ‘ஃபாண்டம் ராக்’ என்ற பெயரை பெற்றுள்ளது.
ஃபாண்டம் ராக்’ பாறை அமைப்பு அமைந்துள்ள பிரதேசம் மலையேற்றத்துக்கும் கூடார வாசத்துக்கும் ஏற்ற இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதற்கான உபகரணங்கள், பாதைகள் மற்றும் முன் தயாரிப்புகளை பயணிகள் தங்கள் சொந்த முயற்சியில் தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
ஃபாண்டம் ராக் ஸ்தலத்துக்கு அருகிலேயே கல்பெட்டா மற்றும் சுல்தான் பேட்டரி போன்ற இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களும் காணப்படுகின்றன. இந்த இரண்டு இடங்களும் ரம்மியமான இயற்கை எழில் காட்சிகள் பரந்து காட்சியளிக்கின்றன.
கண்ணில் படும் இடமெல்லாம் இயற்கைக்காட்சிகள் என்பதால் கையில் கேமெராவுடன் பயணிப்பது நல்லது. கல்பெட்டாவிலிருந்து ஃபாண்டம் ராக் பகுதி 25 கி.மீ தூரத்திலும், அங்கிருந்து சுல்தான் பேட்டரி 10 கி.மீ தூரத்திலும் உள்ளது.



