Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வயநாடு » வானிலை

வயநாடு வானிலை

குளிர்காலமே வயநாடு பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. அதிக வெப்பம் இல்லாத பகல் மற்றும் குறைவான ஈரப்பதம் போன்ற இயல்புடன் காணப்படுவதால் இப்பருவம் வெளியில் இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது. அதிக குளிர் இல்லை என்பதால் மாலை மற்றும் இரவு நேரத்திலும் உலாவல் போன்ற செயல்பாடுகளுக்கும் குளிர்காலம் பொருத்தமாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் வயநாடு பகுதியில் அதிகபட்சமாக 37° C வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் வெளியில் சுற்றிப்பார்ப்பது இயலாத ஒன்றாக இருக்கும். இருப்பினும் மாலை நேரத்தில் வெப்பநிலை குறைந்து இதமான தென்றல் இரவு வரை வீசுகிறது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரை வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காணப்படும். எனவே இக்காலத்தில் வயநாடு பகுதியின் வாழ்க்கை மற்றும் இயக்கம் போன்றவை மிகவும் அசௌகரியமானதாக மாறிவிடுகின்றன. 25° C வரை வெப்பநிலை குறைந்து காணப்பட்டாலும் வெளிச்சுற்றுலாவில் ஈடுபடமுடியாமல் மழையும் கடுமையான காற்றும் இடைஞ்சலாக இருக்கும். வயநாடு பகுதியானது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காற்றுகளின் பாதையில் புவியியல் ரீதியாக இடம்பெற்றுள்ளது.

குளிர்காலம்

டிசம்பர் மாத துவக்கத்திலேயே துவங்கி பிப்ரவரி மாத பாதி வரை குளிர்காலம் நீடிக்கிறது. சராசரி வெப்பநிலை 18° C முதல் 28° C வரையிலான இடைப்பட்ட அளவுகளில் கூடியும் குறைந்தும் காணப்படுகிறது. இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவுவதால் கனமான ஜாக்கெட் மற்றும் குளிருக்கான வுல்லன் சால்வை போன்றவற்றை கொண்டு செல்வது அவசியம்.