Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » வானிலை

மேற்கு கரோ ஹில்ஸ் வானிலை

கோடைகாலம்

மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில்  கோடைக்காலம் அதிகம் ஈரப்பதம் மற்றும் வெப்பத்துடன் காட்சியளிக்கிறது.  இக்காலத்தில் அதிகபட்சமாக 33°C க்கு மேல் வெப்பநிலை உயரக்கூடும். அதிக ஈரப்பதம் காரணமாக கோடைக்காலத்தின் வெப்பம் மிகுந்த அசௌகரியத்தை தரக்கூடும். இருப்பினும் தென்மேற்கு மழைக்காற்றுகள் மழைக்காலத்தை முன்னதாக துவக்கி வைத்து இப்பகுதியின் கோடைக்காலத்தை குறுகியதாக ஆக்கி விடுகின்றன.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் கரோ மலை (மாவட்டம்) கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. இருப்பினும் இப்பகுதியில் ஈரப்பதம் குறைவதில்லை. எனவே இக்காலம் சுற்றுலாவுக்கு ஏற்றதல்ல.  

குளிர்காலம்

டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலையாக  9°C  முதல் 17°C  வரை நிலவுகிறது. அதிக குளிர் இல்லாத இதமான சூழலை குளிர்காலம்அளிக்கிறது.