காளிமட் எனும் பிரசித்தி பெற்ற கற்கோயில் எல்லாபூரிலிருந்துன் 3 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயிலில் உள்ள தூண்களில் நுட்பமான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதுடன் கன்னடத்தில் சில கல்வெட்டுக்குறிப்புகளும் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் உள்ளே மென்மையான கல்லால் ஆன ஒரு சிவலிங்கமும் ஒரு நந்தி சிலையும் உள்ளன.