எல்லாபூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும், மகோட் நீர்வீழ்ச்சியிலிருந்து 9 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கும் இந்த ஏரி 62 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாய் காணப்படுகிறது.
கவடிக்கேரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் அதை சுற்றிலும் உள்ள மலைகளையும் சுற்றிப் பார்க்கலாம். கவடிக்கேரி ஏரி அருகில் ஒரு புராதன துர்க்காதேவி கோயில் ஒன்றும் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.
இந்த ஏரிக்கு செல்லும் பயணிகள் ராட்சத வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் கருப்பு சிவப்பு நிறத்துடன் கூடிய அழகான புல்புல் பறவை போன்ற மிக அரிதான இனங்களை இங்கு காணலாம்.