Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் அவசியம் மிஸ் பண்ணவே கூடாத 10 இடங்கள் !!

இந்தியாவில் அவசியம் மிஸ் பண்ணவே கூடாத 10 இடங்கள் !!

இந்தியாவில் அவசியம் மிஸ் பண்ணவே கூடாத 10 இடங்கள் !!

By Bala Karthik

எண்ணற்ற பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற இந்தியா, நல்லதோர் முறையில் இணைந்து, அமைதியுடன் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதியும்,சுயமான தனித்துவமிக்க கலாச்சாரத்தை கொண்டிருக்க, இந்தியா போன்ற ஒரு நாட்டில் நாம் ஆராய்வதென்பது கண்கவர் காட்சியாக அமைகிறது. நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு கடந்து கால ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை கொண்டிருக்கிறது.

இந்த சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள், எண்ணற்ற நினைவுச்சின்னங்களையும், அமைப்புகளையும் கட்டிட, தற்போது அது இருந்தமைக்கான அடையாளத்துடன் இங்கே காணப்படுகிறது. பல்வேறு வம்சங்கள் இந்தியாவை ஆள, பாரம்பரிய தளங்கள் நிறைந்த நாடாகவும், பல்வேறு பேரரசை கொண்டிருக்கிறது. இப்போது நம் நாட்டின் வரலாற்றை தாங்கிக்கொண்டு விளங்கும் தலை சிறந்த பத்து பாரம்பரிய இலக்குகள் எவை என்பதை நாம் பார்க்கலாம்.

ஆக்ரா:

ஆக்ரா:


மாபெரும் தாஜ்மஹாலானது பெயர் பெற்ற ஆக்ரா நகரத்தில் காணப்பட, உலக அதிசயங்களுள் ஒன்றன் வீடாகவும் இது விளங்குகிறது. முகலாய பேரரசின் தலைநகரமாக ஆக்ரா நீண்ட காலமாக விளங்க, இவ்விடத்தை அற்புதமான கட்டமைப்புகளும் சூழ, அக்பர், ஷாஜஹான் மற்றும் ஜஹாங்கிர் போன்ற ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டும் இருக்கிறது.

முகலாய பாரம்பரிய நடையை கொண்டு நாம் செல்ல, நெகிழ வைக்கும் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பத்தேஹ்பூர் சிக்ரி நகரம், ஜாமா மஸ்ஜித் என பலவும் இங்கே காணப்படுகிறது..

PC: Unknown

 ஜெய்ப்பூர்:

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் தலைநகரமான ஜெய்ப்பூரை இளஞ்சிவப்பு நகரமென அழைக்க, பல நெகிழ்ச்சியூட்டும் நினைவிடங்களையும் நிலமாய் கொண்டு விளங்குகிறது. இதனை இளஞ்சிவப்பு நகரமென நாம் அழைக்க, 1876ஆம் ஆண்டில், மகாராஜரான ராம் சிங்கினால் ஒட்டுமொத்த நகரத்துக்கும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டது எனவும் தெரியவர, இந்த விருந்தோம்பலின் வண்ணமானது விக்டோரியா இராணியின் வருகையை குறிப்பதாகவும் தெரியவருகிறது.


நாட்டுப்புற தெருக்களைக்கொண்ட ஜெய்ப்பூர் வழியாக நாம் நடக்க, மாளிகையின் அழகிய கட்டிடக்கலையும், அரண்மனைகளும், கோட்டைகளுமென, ஹவா மஹால், நகர அரண்மனை, நாஹர்கார்ஹ் கோட்டை, என பெயர் சொல்லும் பலவும் இங்கே காணப்படுகிறது.

PC: Unknown

தில்லி:

தில்லி:

முகலாய பேரரசின் தலைநகரமாக ஆக்ராவிலிருந்து தில்லியை பல தசாப்தங்களுக்கு பிறகு மாற்றிட, முகலாய கட்டிடக்கலையின் ஆக்கப்பூர்வமும் தில்லியில் காணப்பட தவறவில்லை.

நம் நாட்டின் தலைநகரமாக பல்வேறு கலாச்சாரங்களுடன் இது விளங்க; ஆகையால், தில்லியில் நாம் காணும் காட்சியானது மந்தமாக நமக்கு தெரிவதுமில்லை. குதுப் மினார் கட்டிடம், செங்கோட்டை, அக்சர்தம் ஆலயம், ஜாமா மஸ்ஜித் என ஒரு சில நினைவு சின்னங்களும் தில்லியில் நாம் பார்க்க ஏதுவாக அமைகிறது.

PC: Pi6el

 அஹமதாபாத்:

அஹமதாபாத்:

உலக பாரம்பரிய நகரங்களுள் ஒன்றாக இந்தியாவில் இது மட்டுமே இருக்க, சமீபத்தில் தான் அஹமதபாத்தை அவ்வாறு பல்வேறு காரணங்களால் முடிவு செய்யவும்பட்டதென சொல்ல, தலை சிறந்த இந்தோ - இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு வீடாகவும் விளங்கும் இவ்விடம், காந்தி சுதந்திர போராட்டம் என பலவற்றையும் மையமாக கொண்டிருக்கிறது.

அஹமதாபாத்தில் பாரம்பரிய நடையை நாம் நடக்க, அழகிய நாட்டுப்புற தெருக்கள் வழியாக அது நம்மை அழைத்துசெல்ல, கடந்த காலத்து கோடுகளையும் கட்டிடம் தாங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒரு சில இடங்கள் கண்கொள்ளா காட்சியை தந்திட, அஹமதாபாத்திற்கு நாம் செல்ல வேண்டியதும் அவசியமாக அவற்றுள் சுவாமி நாராயணன் ஆலயம், சபர்மதி ஆசிரமம், சிதி சையத் மசூதி என பலவும் அடங்கும்.

PC: Spundun

 கொல்கத்தா:

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் தலைநகரமாக கொல்கத்தா காணப்பட, உலக பழமையான அழகையும் கொண்டிருக்க, இதன் மீது காதல் கொள்ளாமல் நம் மனம் எப்படித்தான் இருக்கும்...? இதனை இந்தியாவின் கலாச்சார தலைநகரமெனவும் அழைக்க, அறிவுப்பூர்வமான விக்டோரிய கட்டிடக்கலை பாணியையும் இது கொண்டு, இந்து - ஆங்கிலேய கலாச்சாரத்துடனும் காணப்படுகிறது.

விக்டோரியா நினைவிடத்தின் அழகுக்கு ஆதாரமாய் இது இருக்க, பிடித்தமான ஹௌராஹ் பாலத்தையும் காண, மேலும் பெளூர் மடம், போர்ட் வில்லியம் என பலவற்றையும் நாம் தவறாமல் பார்க்க, பல்வேறு இனிப்பு உணவுகளான கொல்கத்தாவின் ரசகுல்லா, மிஷ்தி தோய் என பலவற்றையும் நாவாற சுவைத்து மகிழ்கிறோம்.

PC: Tapas Biswas

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

இந்தியாவின் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி, ஒருப்பக்கம் அமைதியான கடற்கரையையும், அழகான பிரன்ஞ்ச் காலனிகளையுமென மற்றுமோர் பக்கம், விரிவான பிரஞ்ச் ஆட்சியை நினைவுப்படுத்தும் பாண்டிச்சேரியின் வெற்றியையும் பிரதிபலித்தபடி காணப்படுகிறது.

இங்கே கடற்கரையில் நாம் தாவி மகிழ, கண்கொள்ளா காட்சியை தரும் பாண்டிச்சேரி, சொர்க்க கடற்கரை, ஆரோவில்லி கடற்கரை, என பலவற்றையும் கொண்டிருக்க, ஆரோவில்லி ஆசிரமம் அல்லது கண்கவரும் பாண்டிச்சேரியின் பிரன்ஞ்ச் காலனியையும் கொண்டிருக்கிறது.

PC: Dey.sandip

ஜோத்பூர்:

ஜோத்பூர்:


அரசர்களின் நிலத்தில் ஜோத்பூர் நகரமானது காணப்பட, ராஜஸ்தானை நீல நகரமெனவும் நாம் புகழ் ஓங்க அழைக்கிறோம். ஜோத்பூரின் உள்ளூர் வாசிகளால் இங்கே காணப்படும் வீடுகள் நீல நிற வண்ணம் தீட்டப்பட, வியர்த்து வடியும் கோடைக்காலத்தில் ராஜஸ்தானில் இது வீடுகளாகவும் குளுமைப்பொங்க வைத்துக்கொள்ளப்படுகிறது.

பல கோட்டைகளையும், அரண்மனைகளையும் வீடாக கொண்டிருக்கும் இவ்விடம், ராஜ்புட்டின் தலைமையான இரத்தோர் கிளான், ராவோ ஜோதாவால் நிறுவப்பட்டது. புகழ்பரப்பும் மெக்ரன்கார்ஹ் கோட்டை, நகரத்தின் மகுடமாக காணப்பட, உமைத் பவன் அரண்மனை, பல்சமந்த் ஏரி, என பலவும் ஜோத்பூரில் காணப்படுகிறது.

PC: Ajajr101

 ஹம்பி:

ஹம்பி:


இந்த அழகிய ஆலய நகரமான ஹம்பி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அமைய, எண்ணற்ற கண்கொள்ளா காட்சி நிறைந்த ஆலயங்களையும் நகரம் முழுவதும் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க கலையை கொண்டு விஜய நகர பேரராசனது காணப்பட, இந்த ஆலயமானது விஜய நகர கட்டிடக்கலையின் வேலைப்பாடுகளுக்கு தலை சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

இங்கே மூழ்கிக்கிடக்கும் பொக்கிஷமதில் நாம் தாவ, அழகிய விருபக்ஷா ஆலயம், வித்தாலா ஆலயம், தாமரை அரண்மனை மற்றும் ஹம்பி கடைத்தெருவென பலவற்றின் புதிரான நினைவுகளையும் மனதில் தேக்க முடிகிறது.

PC: Joel Godwin

ஓர்ச்சா:

ஓர்ச்சா:

மத்திய பிரதேசத்தின் ஓர்ச்சாவை வரலாற்று நகரமென நாம் அழைக்க, பெட்வா நதிக்கரையினை தழுவியும் காணப்பட, ஆலயங்களும், அரண்மனைகளுமென நாட்டுப்புற அழகு சூழ, நம்மை இடைக்காலம் நோக்கியும் அழைத்து செல்லக்கூடும். பாரம்பரியத்தின் பெருமைக்கொண்ட பண்டேலா வம்சம், ஓர்ச்சாவுக்கு நாம் செல்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இங்கே காணப்படும் ஜஹாங்கிர் மஹால், ராஜா மஹால், பூல் பாஹ், என மதிமயக்கும் பல அமைப்புகளும் ஓர்ச்சாவில் விலைமதிப்பில்லா காட்சியை நம் கண்களுக்கு தருகிறது.

PC: Joel Godwin

கொச்சி:

கொச்சி:

கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த நகரமான கொச்சியை கொச்சின் எனவும் அழைக்கப்பட, அரபிக்கடலின் இராணி எனவும் நாம் இதனை அழைக்கிறோம். இந்த நகரமானது உயர்ந்த ஆதிக்கத்தை கொண்டு பல்வேறு கலாச்சாரமும் இணைந்து காணப்பட, டட்ச், போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பெயர் சொல்லும் பலரும் இவ்விடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இந்த யூத நகரத்தில் நாம் நடக்க, கொச்சி கோட்டையானது புதைந்திருக்கும் கலாச்சாரத்தையும், கடல் பயணத்தையும் தளர்ந்த மனம் கொண்டு தந்திட, இந்த நகரத்தின் மையமானது இளைஞர்களுக்கும், பலருக்கும் கேரளாவின் கொச்சியில் சிறப்பாக அமைகிறது.

PC: Doron

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X