Search
  • Follow NativePlanet
Share
» »உலகத்துலயே மிக மட்டமான சுற்றுலாத் தளம் சென்னை தானாம்! ஏன் இப்படி?

உலகத்துலயே மிக மட்டமான சுற்றுலாத் தளம் சென்னை தானாம்! ஏன் இப்படி?

உலகத்துலயே மிக மோசமான சுற்றுலாத் தளம் சென்னை தானாம்! ஏன் இப்படி?

சென்னை.. வந்தாரை வாழ வைக்கும், மொழி இன பேதமில்லாமல் தோளில் தூக்கி சுமக்கும், மெரினாவில் கடலை விற்றாலும் பெரிய தொழிலதிபர் ஆகிவிடலாம், சென்னைக்கு பேதமே இல்லை போன்ற நிறைய மொழிகளை சென்னைக்கு வருபவர்களைப் பார்த்து சொல்வதை கேட்டிருக்கலாம். ஆனால், சுற்றுலா என்று வந்துவிட்டால், சென்னை உண்மையில் சிறந்ததா.. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். சென்னைதான் உலகின் மிக மோசமான வளர்ந்த சுற்றுலாத் தளம் என்கிறார்கள். இது உங்களைப் பொறுத்தவரையில் உண்மைதானா? அப்படியானால் இதை படியுங்கள்.

இந்தியாவின் தரக்குறைவான மெட்ரோ நகரம்

இந்தியாவின் தரக்குறைவான மெட்ரோ நகரம்

இந்தியாவில் மெட்ரோ நகரம் என்று எடுத்துக்கொண்டால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு என நிறைய இருக்கிறது. அங்கெல்லாம் அழகழகான பல இடங்கள் இருக்கிறது. கட்டமைப்புகள் இருக்கின்றன. காண்பதற்கு எழில் நய மிக்க அழகிய கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஆனால் சென்னையில் என்ன இருக்கிறது?

 வெளிநாட்டவர்கள் வர முகம் சுழிக்கும் சென்னை

வெளிநாட்டவர்கள் வர முகம் சுழிக்கும் சென்னை

பெங்களூரு, டெல்லி, கொல்கத்தாவில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வந்து குவிகின்றனர். அங்கெல்லாம் மிக அதிக அளவில் சுற்றுலா செல்கின்றனர் வெளிநாட்டு பயணிகள். அவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் அவை இருக்கின்றன. கேரளம், கர்நாடக மாநிலங்களில் கொச்சி, பெங்களூர் போன்ற நகரங்கள் சென்னைக்கு பல ஆண்டுகளுக்கு பின்பு உருவாக்கப்பட்டு, இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் சென்னை? வெளிநாட்டவர்கள் வர முகம் சுழிப்பதற்கு என்ன காரணம்?

PC: YouTube

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள்

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள்


இந்தியா ஒரு கலாச்சார நாடு, இங்கு பல இடங்களில் கலாச்சார நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் சென்னையில் அது போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடக்கின்றனவா? சென்னையில் இருப்பவர்களுக்கு நடனம், இசை போன்றவற்றில் ஈடுபடும் திறமை இருக்கிறதா?

PC: YT

சகிப்புத் தன்மை

சகிப்புத் தன்மை


இந்தியாவின் வட மாநிலங்களில் இருக்கும் மத ஒற்றுமை சகிப்புத்தன்மை சென்னையில் இல்லை. இங்கு மாற்று மதத்தினரை மதிக்கும் போக்கும் இல்லை. சக மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கமும் இல்லை.

 சென்னையில் ஷாப்பிங் செய்ய எதுவும் இல்லை

சென்னையில் ஷாப்பிங் செய்ய எதுவும் இல்லை

சென்னைக்கு வந்து ஷாப்பிங்க் செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல அப்படி ஒரு அம்சங்களும் இல்லை. இங்கு மற்றவர்கள் விரும்பும் வகையில் எதுவுமே இல்லை. சென்னையின் அடையாளம் என்பது வெறும் கூவமும் சென்ட்ரலும்தான்.

Yoga Balaji

கூட்ட நெரிசலும் இட நெருக்கடியும்

கூட்ட நெரிசலும் இட நெருக்கடியும்

மற்ற மாநிலங்களின் தலைநகரை ஒப்பிடும்போது சென்னையில் கூட்ட நெரிசல் சொல்லி மாளாது. அளவுக்கதிகமான கூட்டமும், நெரிசலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை விழிபிதுங்கச் செய்கின்றன.

chennaicorporation

உள்ளூர் காரர்கள் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுவார்கள்

உள்ளூர் காரர்கள் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுவார்கள்

சென்னையில் வாழும் மக்கள் முக்கியமாக உள்ளூர் வாசிகள் யாருக்கும் மரியாதையே தரமாட்டார்கள். சுத்தமாக இருக்கமாட்டார்கள். காட்டுமிராண்டித் தனமாக செயல்படுவார்கள். அவர்களிடத்தில் பேசினாலே நம்மை மதிக்கமாட்டார்கள்.

 உள்ளூர் காரங்களுக்கு வேற மொழியே தெரியாது.. முக்கியமா ஹிந்தி

உள்ளூர் காரங்களுக்கு வேற மொழியே தெரியாது.. முக்கியமா ஹிந்தி

இங்க இருக்குற யாருக்குமே இந்தி இங்கிலீஷ் தெரியாது. படிப்பறிவு இல்லாதவர்கள். யாருகிட்ட எப்படி பழகணும்னு கூட தெரியாதவர்கள். அவர்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். அதையும் உருப்படியா பேசமாட்டாங்க.. மிக்ஸ் பண்ணி மிக்ஸ் பண்ணி பேசுவாங்க.

JeffBedford

 உணவுக் கலாச்சாரம்

உணவுக் கலாச்சாரம்

இங்கு இருப்பவர்கள் சோறு, தோச, இட்லி, சாம்பார் தான் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மற்ற உணவுகள் பற்றி எதுவும் தெரியாது. ஆமா இவர்களுக்கு உணவு பற்றியே விழிப்புணர்வு கிடையாது.

Destination8infinity

வரலாற்று பொக்கிஷங்கள்

வரலாற்று பொக்கிஷங்கள்

இந்தியாவின் மற்ற இடங்களை ஒப்பிட்டு பார்க்கையில் சென்னையில் வரலாற்று சம்பந்தமான எதுவும் இல்லை. இங்கு காண்பதற்கு என்று எந்த விசயமும் சிறப்பாக இல்லை.

Wiki

6 மணிக்கு மேல்

6 மணிக்கு மேல்


சென்னையில் 6 மணிக்கு மேல் ஊர் அடங்கிவிடும். யாரும் வெளியில் வரமாட்டார்கள். பார்ட்டி, பப், நைட் கிளப்ஸ், விடுதிகள் எதுவும் இல்லை. டிரெண்டிங்க் தெரியாத மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இரவு விருந்துகளில் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள்.

இசை பற்றிய ஞானம் இல்லை

இசை பற்றிய ஞானம் இல்லை

இங்கு இருப்பவர்களுக்கு இசை பற்றிய ஞானம் இல்லை. மியூசிக் பற்றி பேசத் தெரியாது. அவர்களுக்கு நாட்டுப்புற இசை மட்டும்தான் தெரியும். உலக இசை அறிவு கிடையாது

கடுப்பானீர்களா?

கடுப்பானீர்களா?

இத்தனையையும் படித்துவிட்டு கடுப்பாகி விட்டீர்கள் தானே.. ஆம் நானும் தான். என் வடநாட்டு நண்பர் ஒருவர் சென்னை பற்றி இத்தனை விசயங்களை அடுக்கடுக்காக சொல்லும்போதும், அதைக் கேட்ட மற்றவர்கள் ஆமாம் ஆமாம் என மண்டையாட்டும்போதும் மிகக் கடுப்பாகிப்போனேன். அதைவிட க்கொடுமை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருப்பவர்களும் இதை ஆமோதித்ததைதான். சரி.. அதுக்கப்றம் நா சென்னைய பத்தி அவங்ககிட்ட என்ன சொன்னேன்னு கேக்கலியே..

அப்போ சென்னை பற்றிய உண்மைகள் என்ன? மீண்டும் மேலுள்ள புகைப்படங்களை வரிசையாகப் பாருங்கள்.

முதல் படத்திலிருந்து வரிசையாக பாருங்கள்

முதல் படத்திலிருந்து வரிசையாக பாருங்கள்

சென்னை மோசமான கட்டுமானம் கொண்ட மெட்ரோ நகரம் என்கிறார்கள். தொழில்நுட்பத்தில் அதி சிறந்த இந்தியாவிலேயே அழகிய பல கட்டிடங்களும்,மேம்பாலங்களும் சென்னையில்தான் உள்ளது. இந்த மெட்ரோவே அதற்கு உதாரணம்.

வெளிநாட்டவர்கள் முகம் சுழிக்கிறார்களா.. அட போங்க பாஸ்.. இந்தியாவிலேயே அதிக அளவு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தரும் ஒரே இடம் தமிழகம்தான். அதுவும் சென்னைக்கு வந்துட்டுதான் மற்ற இடங்களுக்கு போறாங்க.. உலக நாடுகள்ல பிஸினஸ் பேசுற இடமா சென்னை அமைஞ்சிருக்கு.

கலாச்சார பண்பாடு விழாக்கள்லாம் நடக்குமா இல்லியானு இங்க வந்து பாருங்க.. சென்னையில் கோடைவிழா, திருவையாறு, கண்காட்சிகள், ரேப் மியூசிக் திருவிழா என எக்கச்சக்க இசை நிகழ்ச்சிகள் நடக்குது.. அதுலயும் இவங்களுக்கு இசை அறிவு இல்லைனு வேற சொல்றாரு. அட இந்தியாவுலயே ரெண்டு ஆஸ்கார் வாங்குன ஏ ஆர் ரஹ்மான் எந்த ஊருக்காரரு?

 கூட்ட நெரிசல் ஷாப்பிங்

கூட்ட நெரிசல் ஷாப்பிங்

இந்த ஊர்ல ஷாப்பிங் போகுறதுக்கு எடமே இல்லைனு வாய்க்கூசாம பழி சொல்றாங்க.. ஏழைகள் முதல் நடுத்தரவர்க்கத்துக்காரங்கள வாங்ககூடிய எல்லா பொருள்களும் ரங்கநாதன் தெருவுக்கு போனா கிடைக்குமே.. உடனே அந்தர் பல்டி அடிச்சி, அது கூட்ட நெரிசலாம்.. அந்த ஏரியாவுலேயே நல்ல நல்ல ஏசி ஷோ ரூம் இருக்கு.. கூட்டமே இல்லாம அழகா ஷாப்பிங்க் பண்ணிட்டு வர வேண்டியதுதான்.

அப்றம் உள்ளூர் காரங்க மரியாதை தெரியாதவங்க. வேற மொழியே தெரியாதுனு சொல்றாங்க.. அட போங்க பாஸ்.. எங்களுக்கு இந்தி தெரியாமலாம் இல்ல.. நாங்க வேணும்னே இந்தி பேசறதில்ல.. நாங்க அவாய்ட் பண்றோம் அத பேசறதுக்கு. போதுமா..

வருசா வருசம் அமெரிக்காவுல நடக்குற இங்கிலீஸ் பேசுற போட்டியில கலந்துக்கிட்ட ஜெயிக்கிறது நம்ம ஊரு புள்ளைங்கதான். இதுல என்ன விசயம்னா அமெரிக்கா புள்ளைங்களவிட அதிக திறமை இருக்கு. நாசாவுல வேலை செய்யுறதுல இருந்து அமெரிக்காவுல பல இடங்கள்ல சென்னையில பொறந்தவங்கதான் பெரிய ஆளா இருக்காங்க.. உள்ளூர் காரங்களுக்கு லாங்குவேஜ் தெரியாம இருக்கலாம்.. ஆனா உங்கள தாங்கு தாங்குனு தாங்குவாங்க.. சென்னை புரட்சி கேள்வி பட்டிருக்கீங்களா.. ?

இதுலாம் தெரியாம சென்னை மட்டமான நகரம்னு கமண்ட் பண்ணிட்டா.. நாங்க ஒத்துக்கிடுவோமா.. உண்மையான சென்னைக்கு வந்து பாரு நண்பா.. இதோ கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணா பிளைட் டிக்கெட், டிரெய்ன் டிக்கெட்ஸ் புக் பண்ணிடலாம்.. சென்னைக்கு போலாமா..

டிக்கெட் புக் செய்வதற்கு....

Hari.G Photography

Read more about: travel chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X