Search
  • Follow NativePlanet
Share
» »கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் வருவது போன்ற இடங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பயணம் போகலாம் வாங்க...

கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் வருவது போன்ற இடங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பயணம் போகலாம் வாங்க...

இப்போதெல்லாம் பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் என எல்லா சமூக வலைதளங்களிலும் ஹிட் டாபிக் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' என்னும் ஆங்கில தொடர் தான். நம்ம ஊர் மெகா சீரியல்களை போல இல்லாமல் ஒரு திரைப்படத்திற்கு இணையாக தயாரிக்கப்படும் இந்த சீரியலுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் வருவது போன்ற இடங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பயணம் போகலாம் வாங்க...

ஏழு அரச குடும்பங்களுக்கு இடையே நடக்கும் அதிகார போராட்டம் தான் இந்த சீரிஸின் கதைக்களமாகும். இதில் வரும் சுவாரஸ்யங்களுக்கு இணையாக ரசிகர்களை ஈர்த்த ஒரு விஷயமென்றால் அது இந்த சீரிஸில் வரும் இடங்கள் தான். ஐஸ்லாந்து, பிரிட்டன் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட இந்த தொடரில் வருவது போன்ற சுவாரஸ்யம் நிறைந்த சில இடங்கள் இந்தியாவிலும் இருக்கின்றன. அந்த இடங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

கேம் ஆப் த்ரோன்ஸ் கதையில் வருவது போன்றே காடுகளில் சுற்றித்திரிய வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த வன விலங்கு பூங்காவான ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் யானை மீது அமர்ந்தபடி காடுகளுக்குள் சவாரி செய்து மகிழ்ந்திடுங்கள்.

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

உத்தரகண்ட் மாநிலத்தில் நைநித்தல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த தேசிய பூங்காவானது அருகி வரும் உயிரினங்களில் ஒன்றான வங்காள புலிகளை பாதுக்காக்கும் நோக்கத்தோடு ஏற்ப்படுத்தப்பட்டதாகும். 1936ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பூங்காவிற்கு இந்த திட்டத்தை முன்னெடுத்த ஜிம் கார்பெட் என்பவற்றின் பெயரே சூட்டப்பட்டது.

Photo:Arindam Bhattacharya

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

480க்கும் மேற்ப்பட்ட உயிரினங்கள் இந்த பூங்காவினுள் வாழ்கின்றன. இமய மலையின் சாரலில் அமைந்திருக்கும் இந்த பூங்கா வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. புலிகள், யானைகள், புள்ளி மான்கள், கீரிகள், ஆந்தைகள், பிணந்தின்னி கழுகுகள் என ஏராளமான பிராணிகளை நாம் இங்கே காண முடியும்.

Photo:arnabg

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

இந்த பூங்காவிற்கு வர சிறந்த கால கட்டமாக கோடை காலமான மே மற்றும் ஜூன் மாதங்களும் அதிக குளிர் நிலவும் டிசம்பர் - ஜனவரி மாதங்களும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக புலிகளை பார்க்க விரும்புகிறவர்கள் வறட்சி நிலவும் கோடைகாலத்தில் வருவது நல்லது.

Photo:Andrew Miller

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

ஜான் ஸ்னோவை போல காட்டில் உலாவுங்கள் :

இந்த பூங்காவை எப்படி அடைவது?, நைநித்தல் மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Photo:Shaunak Modi

படகில் நதியை கடந்திடுங்கள் :

படகில் நதியை கடந்திடுங்கள் :

இரண்டு சாம்ராஜ்யங்களுக்கு இடையே இருக்கும் நதியை தன் பெரும் படையுடன் சென்று ஏழு ராஜ்யங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பால் 'கலீசி' என்னும் நாடோடிகளின் தலைவி. மிக சுவாரஸ்யமாக அமைந்திருக்கும் இந்த பயணத்தை போன்றே படகில் பயணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழா என்ற இடத்திற்கு செல்வோம் வாருங்கள்.

படகில் நதியை கடந்திடுங்கள் :

படகில் நதியை கடந்திடுங்கள் :

இயற்கை அழகு குறையாத கேரளத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக இருப்பது படகுகள் மிதந்து செல்ல ஏற்ற அலைகள் எழாத ஓடைகள் பாயம் ஆலப்புலாவின் படகு வீடுகள் தான். படகு பயணத்தை அதி உல்லாசமான அனுபவமாக ஆக்குகின்றன இந்த படகு வீடுகள்.

படகில் நதியை கடந்திடுங்கள் :

படகில் நதியை கடந்திடுங்கள் :

ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ள இந்த படகு வீடுகளில் மிதந்தபடியே கேரளத்தின் மாசற்ற பேரழகை ரசித்து மகிழலாம்.

படகில் நதியை கடந்திடுங்கள் :

படகில் நதியை கடந்திடுங்கள் :

ஆலப்புழாவில் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான புன்னமடா ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரியில் தான் மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது பிரசித்திபெற்ற நேரு கோப்பை பாம்பு படகு போட்டி நடைபெறுகிறது.

படகில் நதியை கடந்திடுங்கள் :

படகில் நதியை கடந்திடுங்கள் :

ஒரு வார விடுமுறையை இனிமையாக கழித்திட இந்த படகு வீடுகள் சிறந்ததொரு தேர்வாகும். இந்தியாவில் படகில் செல்லும் வாய்ப்பு நமக்கு வெகு குறைவு என்பதால் நிச்சயம் குடும்பத்துடன் ஆலப்புழாவிற்கு வந்து படகு வீடுகளில் மிதந்து கொண்டாடி மகிழுங்கள்.

மர்ம கடற்கரை :

மர்ம கடற்கரை :

கேம் ஆப் த்ரோன்ஸ் சீரிஸில் நிறைய மர்மம் நிறைந்த இடங்கள் உண்டு. குறிப்பாக ஆயிரம் வருடங்களாக உறங்கும் அரக்கர்கள் வாழும் காடு நம் தூக்கத்தை கலைக்கும். அதற்கு பின்னால் சொல்லப்படும் கதையும் மிக பயங்கரமானது. அப்படியொரு பயங்கரமான இடம் இந்தியாவிலும் உண்டு. அது எது தெரியுமா?.


குஜராத் மாநிலத்தின் செழிப்பு மிக்க நகரங்களில் ஒன்றான சூரத்தில் இருக்கும் டுமாஸ் என்ற கடற்கரைதான் விடைதெரியாத மர்மங்களின் இருப்பிடமாக இருக்கிறது. அரபிக்கடலோரத்தில் உள்ள இக்கடற்கரையில் இரவு நேரத்தில் பேய்கள் உலாவுவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. மேலும் இந்த கடற்கரை மணல் கருப்பு நிறமாக இருக்கிறது. இதற்கு பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது என்பதும் இன்னும் பிடிபடாத பதிலாக இருக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X