Search
  • Follow NativePlanet
Share
» »வங்கதேசத்துடன் நாம் பங்கிடும் 4200 சகிமீ பரப்பளவு கொண்ட இதை உங்களுக்கு தெரியுமா?

வங்கதேசத்துடன் நாம் பங்கிடும் 4200 சகிமீ பரப்பளவு கொண்ட இதை உங்களுக்கு தெரியுமா?

வங்கதேசத்துடன் நாம் பங்கிடும் 4200 சகிமீ பரப்பளவு கொண்ட இதை உங்களுக்கு தெரியுமா?

By Udhaya

நாடுகள் என்றாலே தங்களுக்குள் எல்லைகளைப் பிரித்துக்கொள்ளும். அதில் சண்டையும் பெரும்பாலும் தோன்றும். சில நாடுகள் குறிப்பிட்ட மக்களை வைத்துக்கொள்ளும். அங்கே சிறுபான்மையினர் கடுமையாக நடத்தப்படுவார்கள். பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தியாவிலிருந்து பிரிந்ததுதான் வங்கதேசம். அப்படி பிரிக்கும்போது, இந்தியப் பகுதிகளிலிருந்து சில பகுதிகளை பிரித்து வங்கதேசமாக அறிவித்தார்கள். எனினும் வங்கமொழி பேசும் பகுதி மக்கள் இந்தியாவுடனே இருக்கவிரும்பினர். அப்படி விரும்பியவர்களுக்கென தனி மாநிலம் அமைக்கப்பட்டது அதுதான் மேற்கு வங்காளம். வங்கதேசத்தைப் பிரிக்கும்போது 4200 சகிமீ பரப்பளவு கொண்ட இதையும் பிரித்தார்கள்.. அதுதான் தற்போது வங்கதேசத்திற்கும், இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் எல்லை.....

வங்கதேசத்துடன் நாம் பங்கிடும் 4200 சகிமீ பரப்பளவு கொண்ட இதை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் வாருங்கள்.

சுந்தரவனக் காடுகள்

சுந்தரவனக் காடுகள்


இந்தியாவிற்கும் வங்கதேசத்துக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்பு நிலப்பகுதிதான் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இதன் பெரும்பாலான பகுதிகள் வங்கதேச நாட்டிற்குள் இருந்தாலும், இந்திய எல்லையில் வரும் மூன்றில் ஒரு பங்கு பகுதி சுற்றுலாப் பயணிகள் எளிதில் சென்று வரவும், மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

Soumyajit Nandy

யுனெஸ்கோ

யுனெஸ்கோ


உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இடமாக சுந்தரவனக் காடுகள் இருக்கும். மேலும், இந்த பகுதியில் உள்ள யுனெஸ்கோ-வின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. மிகவும் பெரிய மாங்குரோவ் காடுகளில் ஒன்றான சுந்தரவனக் காடுகள் சுமார் 4200 ச.கிமீ பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த காடுகளில் உலகத்திலேயே மிகவும் மோசமாக, அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான இந்தியப் புலிகளுக்கான காப்பகமும் உள்ளது.

V Malik

உப்பு நீரில்

உப்பு நீரில்

சுந்தரவனக்காடுகளின் சூழலுக்கேற்ப, உப்பு நீரில் வாழ தன்னைத் தயார் படுத்திக் கொண்டு, கம்பீரமாக உலவிக் கொண்டிருக்கும் இந்தியப் புலிகளை காண வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்! சுமார் 250 புலிகள் மட்டுமல்லாமல், சேட்டல் மான்களும் மற்றும் ரீசஸ் குரங்குகளும் வசிக்கும இடமாக சுந்தரவனக் காடுகள் உள்ளன. மேலும் இராஜ நாகம் மற்றும் வாட்டர் மானிடர் போன்ற மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளின் வசிப்பிடமாகவும் சுந்தரவனக் காடுகள் இருப்பதால், சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

Soumyajit Nandy

புகைப்படம் எடுப்பவர்களின் சொர்க்கம்

புகைப்படம் எடுப்பவர்களின் சொர்க்கம்

சரியான நேரத்தில் சுந்தரவனக் காடுகள் தேசிய பூங்காவிற்கு வரும் புகைப்படக் கலைஞர்கள் மாஸ்க்டு ஃபின்புட் , மாங்குரோவ் பிட்டா மற்றும் மாங்குரோவ் விஸ்லர் ஆகிய அரிய வகை பறவையினங்களையும் 'க்ளிக்' செய்ய முடியும். இந்த பகுதியைச் சுற்றிலும் சுந்தரி மற்றும் கோல்பாடா வகை மரங்கள் அதிகளவில் உள்ளன.1900-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், டேவிட் ப்ரெய்ன் என்ற உயிரியல் ஆய்வாளர் சுமார் 330 உயிரினங்களை இங்கே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Santanu Paul

 சுந்தரி

சுந்தரி

சுந்தரி என்பது வாடகைக்கு தரப்படக்கூடிய மிதக்கும் வீடு! எப்பொழுதும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு விடும் இந்த படகு இல்லத்தில் நீங்கள் சுந்தரவனக் காடுகளை நன்றாக சுற்றிப்பார்க்க முடியும். சுந்தரியில் 8 பேர் கொண்ட ஒரு குடும்பம் செல்ல முடியும் மற்றும் இதில் பல்வேறு படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளன. கேரளாவிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இவை பகட்டான படகுகளாக கருதப்படுகின்றன.

V Malik

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

அறிவியல் ஆய்வாளர்கள் பருவநிலை மாற்றத்தால் சுந்தரவனக் காடுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த காடுகள் கொல்கத்தாவிலிருந்து காரில் சென்று விடக்கூடிய தொலைவிலேயே உள்ளன. இரவில் தங்க முடியாததாலும், அதற்கான வசதிகள் இல்லாததாலும் சுற்றுலாப் பயணிகள் சுந்தரவனக் காடுகளுக்கு பகலில் சென்று விட்டு வந்து விடுவார்கள்.

Anirban Biswas

நாவில் எச்சில் ஊறச் செய்யும்

நாவில் எச்சில் ஊறச் செய்யும்

இங்கிருக்கும் சில உள்ளூர் உணவகங்களில் நாவில் எச்சில் ஊறச் செய்யும் சுவை மிகுந்த உள்ளூர் உணவுகளும், கடல் உணவுகளும் கிடைக்கின்றன. மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவிலிருந்து சுந்தரவனக் காடுகளுக்கு தொடர்ச்சியாக கார் மற்றும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுந்தரவனக் காடுகள் குடும்பத்தோடும், கணவன்-மனைவி ஆகியோரும் சென்று வர மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலமாகும்.

Sanjeev Jassa

பாய்மரக் கப்பல்கள்

பாய்மரக் கப்பல்கள்

இங்கிருக்கும் ஆற்றில் ஓடும் ஒற்றைப் பாய்மரக் கப்பல்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் செல்வது காதலைப் பரிமாறிக் கொள்ள ஏற்ற சூழலை உருவாக்கும். குறுகலான துணையாறுகள் மற்றும் ஓடைகளில் இங்கு செல்லும் படகு பயணங்கள், சுற்றுலாப் பயணிகளை அமேசான் போன்ற சர்வதேச சுற்றுலாப் பயண தலங்களுடன் சுந்தரவனக் காடுகளை ஒப்பிட வைக்கும்!

Adam Jones

கொல்கத்தாவிலிருந்து சுந்தரவன காடுகள்

கொல்கத்தாவிலிருந்து சுந்தரவன காடுகள்


சுந்தரவனக் காடுகள் கொல்கத்தாவிலிருந்து 102 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. காரில் செல்வதுதான் சாலச் சிறந்ததாகும். எனினும் பேருந்துகள் மூலமாகவும் வாடகை வண்டிகள் மூலமாகவும் இடம்மாறி மாறி செல்லமுடியும்.

சுந்தரவனக் காடுகளின் 77கிமீ முன்பாகவே அவுரா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதுதான் இங்கு செல்ல அமைந்துள்ள ஒரே ரயில் நிலையமாகும்.

Badsha.envsc

 இரவில் நோ

இரவில் நோ


சுந்தரவனக் காடுகள் அனைவரும் கட்டாயம் காணவேண்டிய இடமாகும். ஆனால், இங்கு இரவில் தங்கும் வசதிகள் குறைவு. எனவே பாதுகாப்பாக காடுகளுக்கு வெளியே செல்வதே சிறந்தது.

அதிகபட்சம் ஆறு மணி நேரங்களில் தலைநகர் கொல்கத்தாவை அடையமுடியும். எனவே, கொல்கத்தாவிலுள்ள இடங்களையும் சுற்றிவிட்டு வரலாம்.

Bhushanfromindiasunderbanswidlife

 கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா உயர்நீதிமன்றம்

சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த கம்பீரமான கட்டிடம் 1800களின் மத்தியில் கட்டப்பட்டதாகும். காலனிய ஆட்சிக்குரிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காணப்படும் இது பார்வையாளர்களை கடந்த காலத்துக்கு இழுத்துச்செல்கிறது. தற்போதும் முழுமையான பயன்பாட்டில் உள்ள இந்த கட்டிடம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Avrajyoti Mitra

ஈடன் கார்டன் மைதானம்

ஈடன் கார்டன் மைதானம்


கொல்கத்தா நகரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானம் இது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடும் களமாகவும் இது தற்போது பயன்படுத்தப்படுகிறது.

தீவிர கிரிக்கெட் ஆர்வலர்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது நிச்சயம் இந்த மைதானத்தை பார்த்து விரும்புவர். அப்போது ஏதேனும் விளையாட்டு போட்டி நடந்துகொண்டிருப்பின் பயணிகளுக்கு அதைவிட மகிழ்ச்சி வெறொன்றுமில்லை.

JokerDurden

 சால்ட் லேக் ஸ்டேடியம்

சால்ட் லேக் ஸ்டேடியம்

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு சொந்தமான இந்த சால்ட் லேக் ஸ்டேடியம் உலகிலேயே இரண்டாவது பெரிய மைதானமாகும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும் இடமாக இது பயன்படுத்தப்படுகிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த பிரபல மைதானம் கொல்கத்தாவில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய அம்சமாகும்.

Rameshng -

அலிபூர் விலங்கியல் பூங்கா

அலிபூர் விலங்கியல் பூங்கா

ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த அலிபூர் ஜூ எனும் மிருகக்காட்சிசாலை கொல்கத்தா நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவின் அழகு புகைப்பட ஆர்வலர்க விரும்பக்கூடிய வகையில் உள்ளது. மாலை நேர குடும்ப பொழுதுபோக்கிற்கும் இது ஏற்ற இடமாகும். 250 ஆண்டுகள் கடந்து உயிர்வாழும் ஒரு ஆமையை பாதுகாப்பதற்காக சமீபத்தில் இந்த பூங்கா பாராட்டுகளை பெற்றுள்ளது.

Biswarup Ganguly

 ஹௌரா பாலம்

ஹௌரா பாலம்

கல்கொத்தாவின் முக்கிய அடையாளமான ஹௌரா பாலத்தை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் யாருமே திரும்புவதில்லை.

இந்த தொங்குபாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1943ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை இது பல்வேறு பாலிவுட் ஹாலிவுட் சினிமாக்காட்சிகளிலும் இடம்பெற்று வந்துள்ளது.


Manuel Menal

 இந்தியன் மியூசியம்

இந்தியன் மியூசியம்

உலகத்திலுள்ள பழமையான அருங்காட்சியகங்களின் ஒன்றாகவும் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகமாகவும் இந்த இந்தியன் மியூசியம் புகழ் பெற்று விளங்குகிறது. வெவ்வேறு வரலாற்று யுகங்களை சேர்ந்த அரும்பொருட்கள் முதல் மானுடவியல் ஆதாரங்கள் வரை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை சேர்ந்த பொருட்கள் இங்கு பிரதானமாக இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தவிர திபெத்திய, பர்மிய மற்றும் முகாலாயர் கலாச்சாரத்துக்குரிய அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

Mjanich

தொழில்நுட்ப காட்சிக்கூடம்

தொழில்நுட்ப காட்சிக்கூடம்

தொழில்நுட்பத்துறையில் பிர்லா கொண்டிருந்த ஆர்வத்திற்கு சான்றாக விளங்கும் வகையில் 1959ம் ஆண்டு இந்த காட்சிக்கூடம் துவங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் துவக்க கால தொழில்நுட்ப தயாரிப்புகளான நீராவி என்ஜின்கள், கிராமபோன் கருவிகள், ஒலிப்பதிவு கருவிகள், தொலைபேசி சாதனங்கள், ரோடு ரோலர் வாகனங்கள் மற்றும் புத்தம் புதிதாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு அரிதான ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்ட கார் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Biswarup Ganguly

 பார்க் ஸ்ட்ரீட்

பார்க் ஸ்ட்ரீட்

பார்க் ஸ்ட்ரீட் மற்றும் அதை ஒட்டியுள்ள காமக் ஸ்ட்ரீட் ஆகிய இரண்டும் கொல்கத்தா நகரத்தின் நவநாகரிக ஷாப்பிங் பகுதியாகும். இங்கு எல்லா சர்வதேச பிராண்டுகளின் கடைகளும் அமைந்துள்ளன. இங்குள்ள நடைப்பாதைகளில் பலவிதமான பொருட்களை பேரம் பேசி வாங்கலாம். அலுவல் ரீதியாகவோ சுற்றுலாப்பயணமாகவோ நீங்கள் கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும் பட்சத்தில் இந்த மார்க்கெட் பகுதிக்கு ஒரு முறை வருகை தருவது சிறந்தது. இரவு நேரத்தில் பார்க் ஸ்ட்ரீட் பிரதேசம் முழுதும் ஜொலிக்கும் அழகுடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kolkatan

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் தாஜ் மஹாலை ஒத்த தோற்றத்துடன் இந்த விக்டோரியா மெமோரியல் அமைந்துள்ளது. 1921ம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மாளிகையை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ரம்மியமான புல்வெளி வளாகத்தை கொண்டிருப்பதால் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக இது பயணிகளை ஈர்க்கிறது

Subhrajyoti07

ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ்

ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ்


ஜி.போ. ஓ அல்லது ஜெனரல் போஸ்ட் ஆஃபீஸ் என்று அழைக்கப்படும் தலைமை தபால் அலுவலகக்கட்டிடம் கொல்கத்தா நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் பிரசித்தி பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர்கள் விதவிதமாக இதனை படம் பிடித்துள்ளனர்.

குமிழ் கோபுர அமைப்புடன் வெள்ளை நிறத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். கொல்கத்தா நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இது தற்போது புகழுடன் அறியப்படுகிறது.

Schwiki

Read more about: travel forest kolkata
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X