Search
  • Follow NativePlanet
Share
» »இயற்கைக்குச் சவால் விடும் சாகசப் பயணிகளே முரட்டுச்சாலையில் மிரட்டும் ரைடிங் போலாமா?

இயற்கைக்குச் சவால் விடும் சாகசப் பயணிகளே முரட்டுச்சாலையில் மிரட்டும் ரைடிங் போலாமா?

முரட்டுச்சாலையில் மிரட்டும் ரைடிங் - நாகலாந்தின் லாங்லெங்கிற்கு ஒரு பயணம்

நெடுந்தூர சாகச சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் லாங்லெங். இதில் மிகவும் பிரபலமானது லாங்லெங்கில் இருந்து சங்க்தோங்க்யா செல்லும் சாலை. இந்தச் சாலை மிகவும் முரடாக, குண்டும் குழியுமாக, வளைவு நெளிவுகள் கொண்ட, தூசி பறக்கும் சாலைகயாக அமைந்துள்ளது.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களைக் கொண்டு இந்தச் சாலையில் பயணிப்பதைப் சாகசப் பயணிகள் பெரிதும் விரும்புவர். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த சாகச பயணத்தை மேற்கொள்ள பல்வேறு மக்கள் வருகின்றனர்.

சரி.. கிளம்பலாமா?

லாங்லெங்

லாங்லெங்

நாகாலாந்து மாநிலத்தின் பதினொறு மாவட்டங்களில் ஒன்று லாங்லெங். அம்மாநிலத்தின் துயூன்சாங் மாவட்டத்தில் ஒரு பகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது தான் லாங்லெங் மாவட்டம். கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 1066 மீட்டர் உயரத்தில் இருக்கும் இம்மாவட்டத்திற்கு செல்ல இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதாவது இன்னர் லைன் பெர்மிட் என்ற ஆவணத்தை பெறுவது அவசியம்.

longleng.gov.in

பண்பாடு கலாச்சாரம்

பண்பாடு கலாச்சாரம்

லாங்க்லெங் - போம் நாகாஸ் பழங்குடியினர் வசித்து வரும் அழகிய ஊர். இவர்கள் பானை செய்தல், நூற்றல் மற்றும் மூங்கில் வேலைப்பாடுக்ளில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.

longleng.gov.in

 கைக்கொடுக்கும் உழவுத் தொழில்

கைக்கொடுக்கும் உழவுத் தொழில்

மேலும் இவர்கள் உழவுத் தொழிலையும் காலகாலமாக செய்து வருகின்றனர். போம் நாகாஸ் மக்களின் தோற்றம் குறித்த தகவல்கள் தெளிவில்லாமல் இருந்தாலும், இவர்கள் நாகாஸ் பழங்குடியினரைப் போலவே கற்களில் இருந்து தோன்றியவர்கள் என்று சொல்கிறார்கள். இப்போது போம் நாகாஸ் பழங்குடியினர் கிறித்துவ மதத்திற்கு மாறி நாகரீகம் அடைந்திருந்தாலும், அவர்களுடைய பண்டிகைக் காலங்களில் பாரம்பரிய உடையான வைஹி-ஆஷாக் அல்லது நெம்பொங்க்-ஆஷாக் அணிந்து உற்சாகத்துடன் கலந்துகொள்கிறார்கள். இந்த பாரம்பரிய ஆடை, ஒரு துண்டு போன்றது, அதனை உடம்பில் உடுத்திக் கொள்கின்றனர்.

longleng.gov.in

மோன்யூ

மோன்யூ


போம் நாகாஸ் மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் திருவிழா மோன்யூ திருவிழாவாகும். வெயில்காலத்தை வரவேற்றும், குளிர்காலத்திற்கு பிரிவு விருந்தாக நடத்தப்படும் இத்திருவிழா, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். போம் நாகாஸ் மக்களின் மிக முக்கிய திருவிழாவாக மோன்யூ திருவிழா விளங்குகிறது.

longleng.gov.in

திகு ஆறு

திகு ஆறு

நாகாலாந்தில் உள்ள ஆறுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது திகு ஆறு. மோகோக்சுங் மற்றும் லாங்லெங் மாவட்டத்தின் குறுக்கே செல்லும் திகு ஆறு, லாங்லெங்கின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதன் அழகிய தோற்றம், அமைதியான சூழ்நிலை மற்று மணல் நிறைந்த கறை என எழில் பொங்கும் திகு ஆரு, காண்போரின் எண்ணத்தைக் கவருவதில் ஆச்சர்யமில்லை. தண்ணீர் குறைவாக ஓடும் குளிர்காலங்களில், திகு ஆற்றங்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது அவ்வளவு இதமாக இருக்கும்.

longleng.gov.in

வளம் கொழிக்கும் பகுதிகள்

வளம் கொழிக்கும் பகுதிகள்

பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறுகளில் ஒன்றான திகு ஆறு, லாங்லெங்கின் முக்கியமான சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. திகு ஆறு பாய்வதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வளம் நிறந்த விளை நிலங்களாக, செழிப்பாக காணப்படுகின்றன. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட லாங்லெங் மக்களின் உயிர்நாடியாக திகழ்வது திகு ஆறு. நல்ல பருவ மழை காரணமாக, அறுவடைக் காலங்களிலும் திகு ஆறு வற்றாமல் இருக்கும்

longleng.gov.in

லாங்லெங்கிற்கு செல்வது எப்படி?

லாங்லெங்கிற்கு செல்வது எப்படி?


விமானம் மூலமாக :

நாகாலாந்தில் இருக்கும் ஒரே விமான நிலையம், திமாப்பூரில் அமைந்திருக்கிறது. ஆகையால், விமானம் மூலமாக வர விரும்புவோர் முதலில் திமாப்பூர் வந்து பிறகு சாலை வழியாக லாங்லெங் செல்ல வேண்டும். திமாப்பூரில் இருந்து 642 கிமீ தொலைவில் இருக்கும் லாங்லெங்கிற்கு இம்பால் வழியாக செல்ல வேண்டும்.

விமானம் முன்பதிவு மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது நம் தளத்தில்....


ரயில் மூலமாக:

லாங்லெங்கில் ரயில் நிலையம் கிடையாது. ஆகையால், ரயில் மூலமாக வருபவர்கள், திமாப்பூர் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் இருந்து பல ரயில்கள் திமாப்பூருக்கு இயக்கப்படுகின்றன. திமாப்பூரை அடைந்து, பேருந்தின் மூலம் மோகோக்சுங் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தின் மூலம் லாங்லெங் செல்ல வேண்டும். இந்தச் சாலையில் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால், வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்றே ரயில் முன்பதிவு செய்யுங்கள் நேட்டிவ் பிளானட்டில்....

சாலை வழியாக:

லாங்லெங்கில் இருந்து சங்க்தோங்க்யா வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில்(NH 61) அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. லாங்க்லெங்கிற்கு அருகில் அமைந்திருக்கும் ஊர் மோகோக்சுங். நாகாலாந்தின் தலைநகர் கோஹிமாவில் இருந்து 230 கிமீ தொலைவில் இருக்கிறது லாங்லெங். சாலை வசதிகள் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், அமைதியான பள்ளத்தாக்கு, அழகிய மலைகள், எழில்மிகு கிராமங்கள் என கடந்து செல்லும் பாதைகள் அனைத்தும் கண்ணைக் கவருபவையாக அமைந்திருக்கின்றன.

சலுகை விலையில் சாலைப் பயணத்துக்கு வாடகை கார் புக்கிங்...

 லாங்லெங்கை ரசிக்க ஏற்ற காலம்:

லாங்லெங்கை ரசிக்க ஏற்ற காலம்:

பொதுவாகவே நாகாலாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் மழை இல்லாத காலத்தில் செல்வது சிறந்தது. லாங்லெங்கிற்கும் இது பொருந்தும். அக்டோபர் முதல் மே மாதம் வரை சுற்றுலாப் பயணிகள் சென்று வர சிறப்பான காலம். சுற்றுலா செல்ல திட்டம் செய்யும்போதே இவ்வனைத்தையும் கருத்தில் கொண்டு, அப்படியே மோன்யூ திருவிழாவையும் கண்டுகளிக்கும் வகையில் பயணத்தை அமைத்துக் கொள்வது சிறப்பு.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X