Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடாகவில் இருக்கும் புகழ்பெற்ற பாதாமி குடைவரை கோயில்கள் பற்றி தெரியுமா?

கர்நாடாகவில் இருக்கும் புகழ்பெற்ற பாதாமி குடைவரை கோயில்கள் பற்றி தெரியுமா?

காவிரியைத்தான் கர்நாடகா தராது. இதையெல்லாம் தாராளமாக தரும் தெரியுமா?

By Staff

காவிரி பிரச்னை என்பது பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமலே உள்ளது. அதிலும் கர்நாடக அரசும் சரி, தமிழக அரசும் சரி இந்த விசயத்தில் முழுமையான தீர்வுக்கு வித்திடாமல் தட்டிக்கழிக்கின்றன என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

கர்நாடகா காவிரி நீரைத் தருகிறதோ இல்லையோ இவற்றையெல்லாம் தாராளமாக தருகிறது.

சாதாரணமாக கற்களை கொண்டு கலைநயமிக்க கோயில்களை கட்டுவதே பெரும்சிரமமான காரியம். மிகப்பெரிய பாறைகளை குடைந்து குடைவரைக்கோயில்கள் கட்ட அதைக்காட்டிலும் அசுர உழைப்பும், சிற்பக்கலையில் உச்சபட்ச நேர்த்தியும் தேவை. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் அஜந்தா-எல்லோரா குடைவரை கோயில்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய குடைவரைக்கோயில்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் என்ற ஊரில் இருக்கின்றன.

திராவிட குடைவரைக்கோயில்களின் எடுத்துக்காட்டாக திகழும் பாதாமி குடைவரைக்கோயில்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இந்த மாதம் அதிகம் படிக்கப்பட்ட சுவாரசியமான கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாதாமி குடைவரை கோயில்கள்:

பாதாமி குடைவரை கோயில்கள்:

பாதாமி குடைவரை கோயில்கள் என்பவை ஹிந்து, ஜைன மற்றும் புத்த மத சிற்பங்கள் அடங்கிய நான்கு குகை குடைவரை கோயில்கள் உள்ள வளாகம் ஆகும்.

இவை ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Nilmoni Ghosh

பாதாமி குடைவரை கோயில்கள்:

பாதாமி குடைவரை கோயில்கள்:

இக்கோயில்கள் அமைந்திருக்கும் பாதாமி சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தலைநகரமாக 'வாதாபி பாதாமி' என்றலைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோயிலே பின்னாட்களில் இந்தியாவெங்கும் கட்டப்பட்ட ஹிந்து கோயில்களின் முன்னோடியாக இருந்ததாக யுனெஸ்கோ அமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

Andrea Kirkby

எங்கே அமைந்திருக்கின்றன?:

எங்கே அமைந்திருக்கின்றன?:

பாதாமி குடைவரைக்கோயில் வளாகத்தில் மொத்தம் நான்கு குகைகோயில்கள் இருக்கின்றன. இதில் விஷ்ணு கோயில் இருக்கும் மூன்றாவது குகையில் கி.பி578/579ஆம் ஆண்டுகளில் இது கட்டப்பட்டதற்கான குறிப்புகள் கன்னட மொழியில் காணப்படுகின்றன.

mertxe iturrioz

கட்டிடவியில் அமைப்பு:

கட்டிடவியில் அமைப்பு:

இந்திய கோயில்களின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள யுனெஸ்கோ அமைப்பு செய்த ஆராய்ச்சியின் முடிவில் பாதாமியில் உள்ள முதல் இரண்டு குகைகள் தக்கான கட்டிடவியல் முறைப்படியும் மற்ற இரண்டு குகைகள் நாகர மற்றும் திராவிட கட்டிடவியல் முறைப்படியும் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்குள்ள முதல் மூன்று குகைகளில் சிவன் மற்றும் விஷ்ணுவின் சிற்பங்களும், நான்காவது குகையில் ஜைன மத சிற்பங்களும் இருக்கின்றன.

mertxe iturrioz

முதல் குகை:

முதல் குகை:

தரைமட்டத்தில் இருந்து 59அடி உயரத்தில் அமைந்திருக்கும் முதல் குகை கோயில் பாதாமி மலையின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனுள்ளே 18 கரங்களுடன் ஐந்தடி உயரத்தில் நடராஜராக தாண்டவமாடும் சிவபெருமானை தரிசிக்கலாம்.

மேலும் துர்கையம்மன், லக்ஷ்மி, பார்வதி, முருகன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற கடவுளர்களின் சிற்பங்களையும் நாம் காணலாம்.

Jean-Pierre Dalbéra

இரண்டாவது குகை:

இரண்டாவது குகை:

இந்த குகையின் அமைப்பு கிட்டத்தட்ட முதல் குகையின் அமைப்பை போலவே தான் உள்ளது. ஒரே வித்தியாசம் முதல் குகையில் சிவனுக்குண்டான சிற்பங்கள் குடையப்பட்டிருப்பதை போல இரண்டாவது குகையினுள் விஷ்ணுவின் அவதாரங்களான வாமணன், வராஹி, கிருஷ்ணர் ஆகியோரின் சிற்பங்கள் குடையப்பட்டுள்ளன.

G41rn8

மூன்றாவது குகை:

மூன்றாவது குகை:

பாதாமி குடைவரைக்கோயில்களிலேயே மிகவும் பெரிய குகைக்கோயில் இந்த மூன்றாவது குகை தான். இரண்டாவது குகையை போலவே இதனுள்ளும் விஷ்ணுவின் சிற்பங்கள் இருக்கின்றன.

திரிவிக்கிரமா, அனந்தசயனன், வராஹி, நரசிம்மர் போன்றவர்களின் சிற்பங்கள் இங்கே இருக்கின்றன. ஆதிசேஷனின் மேல் விஷ்ணு அமைந்திருக்கும் சிற்பம் அத்தனை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

G41rn8

நான்காவது குகை:

நான்காவது குகை:

நான்காவது குகை மற்ற மூன்று குகையில் இருந்து வேறுபட்டதாகும். இதனுள்ளே ஜைன மதத்தின் குருக்களான தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் குடையப்பட்டுள்ளன.

7.5அடி உயரமுள்ள பிரஷவனாதரின் சிலை நாம் நிச்சயம் பார்வையிட வேண்டிய ஒன்றாகும்.

Dineshkannambadi

எப்படி அடைவது?:

எப்படி அடைவது?:

பாதாமி கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் இருந்து 454கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

பெங்களூருவில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பாதாமிக்கு இயக்கப்படுகின்றன.பாதாமிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஹூப்ளி ரயில் நிலையம் ஆகும். இது 100 கி.மீ தொலைவில் உள்ளது. ஹுப்ளி ரயில் நிலையத்திலிருந்து அனைத்து முக்கிய இந்திய நகரங்களுக்கும் ரயில் வசதிகள் உள்ளன.

Deepak Bhaskari

ஆயிரம் தூண் கொண்ட அபூர்வ ஜெயின் கோயில் !!ஆயிரம் தூண் கொண்ட அபூர்வ ஜெயின் கோயில் !!

இசையெழுப்பும் அதிசய தூண்கள் உள்ள கோயில்கள் எவை தெரியுமா?இசையெழுப்பும் அதிசய தூண்கள் உள்ள கோயில்கள் எவை தெரியுமா?

ஆசியாவின் இரண்டாவது பெரிய ஒற்றைப்பாறை மலைக்கு ஒரு ட்ரெக்கிங் பயணம் !ஆசியாவின் இரண்டாவது பெரிய ஒற்றைப்பாறை மலைக்கு ஒரு ட்ரெக்கிங் பயணம் !

உங்களுக்கு கும்கி அருவியைப் பற்றி தெரியுமா ?உங்களுக்கு கும்கி அருவியைப் பற்றி தெரியுமா ?

தெரியுமா இவையனைத்தும் உலகச் சிறப்பு வாய்ந்த இடங்கள்?தெரியுமா இவையனைத்தும் உலகச் சிறப்பு வாய்ந்த இடங்கள்?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X