Search
  • Follow NativePlanet
Share
» »அகரசேன் கி பாவ்லியும் அழகிய லோடி கார்டனும்

அகரசேன் கி பாவ்லியும் அழகிய லோடி கார்டனும்

அகரசேன் கி பாவ்லியும் அழகிய லோடி கார்டனும்

By Udhay

அகரசேன் கி பாவ்லி டெல்லியிலுள்ள தனித்தன்மையான ஒரு சுவாரசிய கலைச்சின்னமாக வீற்றுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் நவீன கட்டமைப்புகள் மற்றும் இதர பளபளப்புகள் காரணமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் இந்த பழமையான கலைச்சின்னம் இருப்பதே பலருக்கு தெரியாது என்பதுதான் உண்மை.

அகரசேன் கி பாவ்லி இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் ஒரு வரலாற்றுச்சின்னமாகும். கன்னாட் பிளேஸ் எனும் இடத்துக்கு அருகில் ஹெய்லி ரோடில் இது அமைந்துள்ளது. 15 அடி அகலம் மற்றும் 60 அடி நீளத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு படிக்கிணறுதான் இந்த அகரசேன் கி பாவ்லி எனப்படும் அமைப்பு. இதைக்கட்டியது யார் என்பது குறித்த தீர்க்கமான சான்றுகள் எதுவும் இல்லை.

மஹாபாரத மன்னரால்

மஹாபாரத மன்னரால்

புராணிகக்கதைகளின்படி, இது மஹாபாரதத்தில் இடம் பெற்ற அக்ரசேனா எனும் மன்னரால் கட்டப்பட்டதாகவும் பிற்காலத்தில் அகர்வால் சமூகத்தினர்14ம் நூற்றாண்டில் இதனை புதுப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. 103 படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கிணறு 5 அடுக்குகளைக்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Wiki

இந்திய தொல்லியல் துறை

இந்திய தொல்லியல் துறை

பொதுவாக வட்ட வடிவில் அமைக்கப்படும் படிக்கிணறு அமைப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக செவ்வக வடிவமைப்பின் ஒரு முனையில் மண்டபக்கூரையுடனும் மறுமுனையில் ஒரு பெரிய வேப்ப மரத்தின் நிழலின் கீழ் அமைந்திருக்கும் திறந்த வாசலுடனும் இது காணப்படுகிறது. தற்போது இந்த கிணற்றில் நீர் இல்லை என்றாலும் இதன் கட்டமைப்பு பார்வையாளர்களை வெகுவாக வசீகரிக்கிறது.
புறாக்கள் மற்றும் வௌவால்களும் அதிகமாக இந்த கிணற்றில் வசிக்கின்றன. 1958ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஸ்தலங்கள் பாதுகாப்பு சட்டப்பிரிவின்படி இந்த அகரசேன் கி பாவ்லி ஸ்தலம் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது

Wiki

லோடி கார்டன்

லோடி கார்டன்

லோடி கார்டன் எனப்படும் இந்த பூங்கா டெல்லியிலுள்ள பிரசித்தமான பூங்காக்களில் ஒன்றாகும். 90 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்கா இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. சிக்கந்தர் லோடி மற்றும் முகமது ஷா ஆகிய மன்னர்களின் கல்லறை நினைவுச்சின்னங்கள் மட்டுமல்லாது படா கும்பத் மற்றும் ஷீஷ் கும்பத் ஆகிய புராதன அமைப்புகளும் இந்த பூங்கா வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளன.

Wiki

 நினைவுச்சின்னம்

நினைவுச்சின்னம்

15ம் நூற்றாண்டில் வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட லோதி வம்சத்தினர் மற்றும் சய்யீத் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் இந்த அற்புதமான கட்டிடக்கலை சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சப்தர்ஜங் நினைவுச்சின்னம் மற்றும் கான் மார்க்கெட் பகுதிகளுக்கிடையே இந்த லோடி கார்டன் காணப்படுகிறது. ஆரோக்கியம் பேண விரும்பும் டெல்லி வாசிகளிடையே இந்த தோட்டப்பூங்கா மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.

காலை மற்றும் மாலை நடைப்பயிற்சிகளுக்கு ஏற்ற சுத்தமான சூழல் இந்த பூங்காவில் நிலவுவதே இதற்கு காரணம்.

Wiki

சிகந்தர் லோடி டூம் (கல்லறை நினவுச்சின்னம்):

சிகந்தர் லோடி டூம் (கல்லறை நினவுச்சின்னம்):

சிகந்தர் லோடியின் கல்லறை நினைவுச்சின்னம் 1517ம் ஆண்டில் அவரது மகனான இப்ராஹிம் லோடியால் கட்டப்பட்டிருக்கிறது. செவ்வக வடிவ பீடத்தின்மீது எழுப்பப்பட்டுள்ள எளிமையான கட்டமைப்பான இது 1866ம் ஆண்டில் ஆங்கிலேயரால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாபரால் இப்ராஹிம் லோடி தோற்கடிக்கப்பட்ட வரலாற்றுக்குறிப்பும் ஆங்கிலேயர்களால் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருக்கிறது.

Wiki

முகமது ஷா கல்லறை நினைவுச்சின்னம்:

முகமது ஷா கல்லறை நினைவுச்சின்னம்:

லோடி தோட்டப்பூங்காவில் இந்த கல்லறை நினைவுச்சின்னமே முதலில் எழுப்பப்பட்டிருக்கிறது. அலாவுதீன் ஆலம் ஷா மன்னரால் 1444ம் ஆண்டில் சய்யீத் வம்சத்தின் கடைசி மன்னரான முகமது ஷாவுக்காக இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

Wiki

படா கும்பத்:

படா கும்பத்:


படா கும்பத் என்றால் பெரிய குமிழ் மாடம் என்பது பொருள். இதன் அருகிலேயே உள்ள மூன்று மாட மசூதிக்கான வாசல் அமைப்பாக இது விளங்கியிருக்கிறது. இந்த கும்பத் அமைப்பும் மசூதியும் 1494ம் ஆண்டில் சிக்கந்தர் லோதியின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

Wiki

ஷீஷ் கும்பத்:

ஷீஷ் கும்பத்:

ஷீஷ் கும்பத் எனும் பெயருக்கு கண்ணாடி குமிழ் மாடம் என்பது பொருளாகும். வழவழப்பான பீங்கான் ஓடுகள் இந்த அமைப்பின் மாட அமைப்பில் பொருத்தப்பட்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் அடையாளம் தெரியாத ஒரு குடும்பத்தினரின் சமாதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பும் சிக்கந்தர் லோதியின் ஆட்சிக்காலத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது.

Wiki

Read more about: travel delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X