Search
  • Follow NativePlanet
Share
» »ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்

ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்

By Staff

இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?

தமிழர்களின் கட்டுமானக் கலை உச்சம் தொட்ட காலம் சோழர்கள் ஆண்ட சமயம், குறிப்பாக : முதலாம் ராஜ ராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், இரண்டாம் ராஜ ராஜ சோழன் காலத்தில்.

இந்த மூன்று மன்னர்களும் தங்களின் பெருமையை சொல்ல, சரித்திர அடையாளமாக பிரமாண்ட கோவிலை கட்டினர்.

Airavateswar1

Photo Courtesy : Jean-Pierre Dalbéra

சோழர்கள் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ராஜ ராஜ சோழன், தஞ்சை பெரிய கோவில். இதற்கடுத்து கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரளவிற்கு தெரிந்திருக்கும்.

அனைவருக்கும் தெரிந்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் - முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டியது.

இதையடுத்து அநேக பேருக்கு தெரிந்த இன்னொரு கோவில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் - முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டியது. இவர் முதலாம் ராஜ ராஜ சோழனின் புதல்வன் ஆவார்.

Airavateswar1

Photo Courtesy : Srikaanth Sekar

ஆனால், பலருக்குத் தெரியாத இன்னொரு கோவில் ஐராவதேஸ்வர கோவில். கும்பகோணத்தை அடுத்து தரசுராம் என்ற ஊரில் இருக்கிறது. இந்தக் கோவிலை கட்டிய‌ மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழன்.

மேலே உள்ள இரண்டு கோவில்களைப் போல பெரிது இல்லையென்றாலும் இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள், வேலைப்பாடுகள், அழகியல் அம்சங்கள் மற்ற இரண்டு கோவில்களுக்கும் துளியும் குறைந்ததில்லை.

Airavateswar2

Photo Courtesy : Aravindan Ganesan

இந்த மூன்று கோவில்களுமே யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் இருப்பது ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்று.

ஐராவதம் என்றால் வெள்ளை யானை - இந்திரனுடைய வாகனம். இதன் பேரில் அமைக்கப்பட்டிருக்கிறது ஐராவதேஸ்வர கோவில். சைவர்களான சோழர்கள் பாரம்பரியபடி இந்த கோவிலிலும் சிவனே முக்கிய கடவுள்.

Airavateswar3

Photo Courtesy : Karthikeyan.Raghuraman

கட்டிடக்கலை

ஓட்டுமொத்த கலை வேலைப்பாடுகளின் பொக்கிஷம் ஐராவதேஸ்வர கோவில். மற்ற இரண்டு பெரிய கோவில்களைவிடவும் நுண்ணிய வேலைப்பாடுகள், சிற்பங்கள் பதிப்பு கொண்ட கோவில் இது.
கோவிலின் கோபுரம் 80 அடி உயரம் கொண்டது; கோவிலின் முகப்பில், தெற்கு பக்கவாட்டில் இருக்கும் தேர் சாயலில் குதிரைகள் கொண்ட செதுக்கல்கள் மிகப் பிரமாதமானவை.

Airavateswar4

Photo Courtesy : Nithi Anand

தரசுராம் கோவிலை எப்படி அடைவது:

கும்பகோணத்தில் இருந்து வெறும் ஐந்தே கி.மீதான்.

கும்பகோணம் சென்றால் இந்த மூன்று கோவில்களை பார்க்காமல் பஸ் ஏறாதீர்கள்.

Airavateswar5

Photo Courtesy : Sowrirajan S

1000 ஆண்டுகள் கழித்தும், இத்தனை தொழில்நுட்ப முன்னேற்றம் கண்ட பின்னும், சோழர்கள் கட்டிய மாபெரும் கோவில்களுக்கு நிகராக ஒரு கோவிலை நம்மால் கட்ட முடியவில்லை.

இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X