Search
  • Follow NativePlanet
Share
» »அம்பாஜி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது

அம்பாஜி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது

அம்பாஜி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது

அம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி அல்லது அன்னை சக்தியை வழிபடும் சாக்த உபாகர்களுக்கு மிக முக்கியமான புனித தலமாகும்.

அம்பாஜி மாதாவின் பீடம் காபார் மலை உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த காபார் மலைத் தொடர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கன்தா மாவட்டத்தில் அமைந்துள்ள தான்டா தாலுகாவில் உள்ளது. இங்கு பத்ராவி பூர்ணிமா மற்றும் தீபாவளி தருணங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாமும் சென்று பார்க்கலாமே!

காடுகளும் சுற்றுலாவும்

காடுகளும் சுற்றுலாவும்

இந்த இடத்தை ஆரவல்லி மலையின் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளன. இவ்விடத்தின் இயற்கை அழகு மற்றும் அமைதி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நிறைவான ஆன்மீக அனுபவத்தை தருகிறது.

Emmanuel

காபார் மலை

காபார் மலை


காபார் மலை மிகப் புகழ்பெற்ற வேத கால நதியான சரஸ்வதி நதியின் ஆரம்பப் புள்ளி அருகே அமைந்துள்ளது. அரசுர் மலைத்தொடர்களில் அமைந்துள்ள இது ஆரவல்லி மலைகளின் தென் மேற்கு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 அடி உயரத்தில் இருக்கிறது. காபார் மலை செங்குத்தாக உள்ளதால் பக்தர்கள் மலை ஏறுவது மிகவும் கடினம் ஆகும்.

பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து 300 கல் படிகள் உள்ள ஒரு குறுகிய ஆபத்தான பாதையில் ஏறி காபார் மலையை அடைய வேண்டும். இந்த பாதையே கோவிலை அடைவதற்கான மிக முக்கியமான பாதையாகும். மத முக்கியத்துவம் அம்பாஜி கோயில் இந்தியாவின் மிக முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Pushkarbhokri

 புராணங்களின் கதை

புராணங்களின் கதை

இந்து மத புராணத்தின் படி, தேவி சதியின் உடலில் உள்ள இதயப் பகுதி காபார் மலையின் மீது விழுந்ததாக நம்பப்படுகிறது. இந்த அரசூர் மலையின் மீது அமைந்துள்ள சக்தி பீடமான அன்னை அரசூரி அம்பாஜியின் கோவில் அன்னைக்கு சிலைகள் இல்லை. "ஸ்ரீ விசா இயந்திரம்" முக்கிய விக்ரஹமாக வணங்கப்படுகிறது.

இயந்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. இந்த விசா ஸ்ரீ யந்திரத்திற்கு வழிபாடு செய்வதானல், ஒருவர் தன்னுடைய கண்களை கட்டிக் கொண்டு வழிபாடு செய்யவேண்டும்.

Viral A dave

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும் பத்ராவி பூர்ணிமா மிகவும் புகழ்பெற்ற திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவின் போது உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். மேலும் தீபாவளியின் போது, இந்த அம்பாஜி கோவில் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

anurag

முக்கியமன சுற்றுலா இடங்கள்

முக்கியமன சுற்றுலா இடங்கள்

கப்பார் மலையில், கைலாஷ் மலையில் உள்ளது போன்று சன்செட் பாயிண்ட்கள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து கண்ணுக்கினிய சூரிய அஸ்த்தமனத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல் இழுவை வண்டி சவாரி போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

கப்பார் மலையில் பல்வேறு ஆன்மீக இடங்கள் உள்ளன. முக்கிய கோவில் பின்புறம் மானசரோவர் என்கிற குளம் காணப்படுகிறது. அந்த குளத்தின் இரு புறங்களிலும் இரண்டு கோயில்கள் உள்ளன். ஒன்று மகாதேவர் கோயில், மற்றொன்று அம்பாஜி தேவியின் சகோதரியான அஜய் தேவி கோவிலாகும்.

புகழ்பெற்ற ஸ்ரீ கோட்டேஷ்வர் மகாதேவர் கோவில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் 8 கீ.மீ தொலைவில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்கு மிக அருகில் உள்ளது. இது சரஸ்வதி நதி மற்றும் காமுக்கில் உள்ள ஒரு புனித குந்த்திற்கு தொடர்பில் இருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றான அம்பாஜிக்கு ஆண்டு தோறும் கணக்கில் அடங்கா எண்ணிக்கையிலான பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

Emmanuel

    Read more about: ambaji
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X