Search
  • Follow NativePlanet
Share
» » ஜம்மு & காஷ்மீரின் அழகிய அனந்த்நாக் பயணம்

ஜம்மு & காஷ்மீரின் அழகிய அனந்த்நாக் பயணம்

ஜம்மு & காஷ்மீரின் அழகிய அனந்த்நாக் பயணம்

அனந்த்நாக் மாநகராட்சி, ஜம்மு & காஷ்மீரின் வணிக தலைநகரமாக அறியப்படுகிறது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென் மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் ஒன்றான அனந்த்நாக் கி.மு. 5000-லேயே வணிக நகரம் என்றளவில் பிரபலமாக விளங்கியது. மேலும் இந்த இடம் அக்காலத்தில் நகர வளர்ச்சி அடைவதில் முன்னோடியாக அமைந்தது. இந்த நகரத்தை சுற்றி ஸ்ரீநகர், கார்கில், டோடா மற்றும் கிஷ்டவர் போன்ற நகரங்கள் உள்ளன.

 புராணக்கதைகள்

புராணக்கதைகள்

புராணக்கதைகளின் படி, சிவபெருமான் அமர்நாத் குகைக்கு செல்லும் வழியில் தன் உடமைகளை இந்த நகரத்தில் விட்டுச் சென்றதால் இந்த நகரம் இப்பெயர் பெற காரணமாக விளங்கியது. அவர் தன்னிடம் உள்ள பல நாகங்களை இங்கே விட்டுச் சென்றதால் இந்த இடம் அனந்த்நாக் என்ற பெயரைப் பெற்றது. கூல் குலாப் கர், டோடா மற்றும் புதல் தாலுக்காகளுடன் இணைப்பில் இருக்கிறது அனந்த்நாக்.

ஆன்மீகம்

இந்த தலம் இங்குள்ள பல ஹிந்து மற்றும் முஸ்லிம் கோவில்களால் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது. ஹஸ்ரத் பாபா ரேஷி, கோஸ்வாமி குண்ட் ஆசிரமம், ஷீலாக்ரம் கோவில் மற்றும் நிலா நாக் போன்றவைகள் தான் இங்குள்ள புகழ் பெற்ற கோவில்களாகும். இங்குள்ள ஏழு கோவில் வளாகத்தில் ஹனுமான் கோவில், சிவன் கோவில், சீதா கோவில் மற்றும் கணேஷ் கோவில் ஆகியவைகள் உள்ளன.

Shaurya

 மற்ற சுற்றுலாத் தளங்கள்

மற்ற சுற்றுலாத் தளங்கள்

கோவில்களைத் தவிர சலங் நாக், மாலிக் நாக் மற்றும் நாக் பல் போன்ற அழகிய ஓடைகளை சுற்றுலாப் பயணிகள் இங்கு கண்டு களிக்கலாம். அனந்த்நாக் செல்லும் சுற்றுலாப் பயணிகள், 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மர்டந்த் சூரியக் கோவிலுக்கும் சென்று வரலாம். இந்த கோவிலை சூரிய பகவானுக்கு மரியாதை செய்யும் விதமாக லலித்தாதித்ய அரசரால் கட்டப்பட்டது.

இந்த கோவிலின் கட்டிடக்கலை காஷ்மீர் ஹிந்துக்களின் தொழில் நுட்பச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும். இப்போது இந்த சூரிய கோவில் சிதைந்த நிலையில் இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் பனி படர்ந்த மலையின் பின்னணியில் எஞ்சியிருக்கும் இந்த கோவிலின் மிச்சத்தை கண்டு களிக்கலாம். இது போக 15-ஆம் நூற்றாண்டில் ஷேக் செயின்-உட்-டின் என்பவருக்காக கட்டப்பட்ட ஆயிஷ்முகம் மசூதியையும் காணலாம்.

ஷேக் செயின்-உட்-டின் என்பவர் தன் வாழ் நாள் முழுவதையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததாக நம்பப்படுகிறது. அவர் அங்குள்ள ஒரு குகையை விட்டு வெளியே வராமல், உள்ளூர் மக்களுக்கு அல்லாஹ்வை பற்றி போத்தனைகள் செய்தார். நேரம் கிடைக்குமானால், மற்ற சமயஞ்சார்ந்த இடங்களான மஸ்ஜித் சையது ஷப், நக்பல், கெர்பவனி அஸ்தபன் மற்றும் ஆயிஷ்முகம் போன்ற ஸ்தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.

Mike Prince

கிறித்துவ நிலையம்

கிறித்துவ நிலையம்

ஜான் பிஷப் நினைவகம் மருத்துவமனை திடலில், புனிதமாக கருதப்படும் ஒரு கிறித்துவ சிறுகோயில் உள்ளது. இந்த ஆலயம் 1982-ஆம் வருடம், தாங்கள் வழிபட தனிப்பட்ட திடல் வேண்டுமென்று போராடிய கிறிஸ்துவ மக்கள் மற்றும் அதிகாரிகளுக்காகவும் கட்டப்பட்டது. இந்த ஆலயம் அந்த பகுதியில் வாழும் கிறிஸ்துவ பணியாளர்களின் நலனுக்காக பாடுபடுகிறது. அனந்த்நாக் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அங்கே சென்று வர அனைத்து முக்கிய வகை போக்குவரத்தையும் பயன்படுத்தலாம். ஸ்ரீநகரில் தான் இதற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் உள்ளது.

Mike Prince

எப்போது எப்படி அடைவது

எப்போது எப்படி அடைவது


அனந்த்நாக்கிலிருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ளது. ஷேக் உல் அலம் விமான நிலையம் என்றழைக்கப்படும் இந்த விமான நிலையத்திலிருந்து புது டெல்லி மற்றும் ஜம்முவிற்கு விமான சேவைகள் உள்ளன. வெளிநாட்டினர் இந்தியாவின் தலைநகரம் வழியாக ஸ்ரீநகருக்கு இணைப்பு விமானம் மூலம் வந்தடையலாம்.

வாடகை கார்களை பயன்படுத்தி ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து அனந்த்நாக் நகரத்துக்கு சுலபமாக வரலாம். அனந்த்நாக் மாநகராட்சிக்கு ஜம்மு & காஷ்மீரிலிருந்து முக்கிய இடங்களுக்கு ரயில் சேவை இருப்பதால், அனந்த்நாக்கிற்கு ரயில் வழியாகவும் வந்தடையலாம். இந்தியாவிலுள்ள மற்ற பெரிய நகரங்களில் உள்ளவர்கள், அனந்த்நாக்கிலிருந்து 247 கி.மீ. தொலைவில் உள்ள ஜம்மு தவி ரயில் நலையம் மூலம் இங்கு வரலாம்.

தரை மார்க்கமாக அங்கு செல்ல தங்கள் சொந்த வாகனத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ செல்லலாம். அரசு போக்குவரத்து கழகம் நடத்தும் பேருந்து சேவைகள் மூலமாகவும் இங்கு வரலாம். அனந்த்நாக் வருவதற்கு உகுந்த நேரம் இளவேனிற் காலம் மற்றும் கோடைக்காலத்திலும் தான்.

Varun Shiv Kapur

    Read more about: anantnag
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X