Search
  • Follow NativePlanet
Share
» »ஆத்தங்குடியும் அருகினில் இருக்கும் ஆயிரம் ஜன்னல் வீடும்!

ஆத்தங்குடியும் அருகினில் இருக்கும் ஆயிரம் ஜன்னல் வீடும்!

ஆத்தங்குடியும் அருகினில் இருக்கும் ஆயிரம் ஜன்னல் வீடும்!

ஆத்தங்குடி கிராமம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. மேலும் இங்கு என்னென்ன சுற்றுலா அம்சங்கள் எல்லாம் இருக்கு அப்படின்னு ஒரு எட்டு போயி பாத்துட்டு வந்துடுவோம். அட.. வாங்க காரைக்குடி போலாம்.

சிறப்பான ஓடுகள்

சிறப்பான ஓடுகள்


இந்த ஊரில் மிகவும் சிறப்பான ஓடுகள் கிடைக்கின்றன. இவ்வகை ஓடுகள் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றன. இவ்வோடுகள், சிமின்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றை உபயோகித்து செய்யப்படுகின்றன. இந்த ஓடுகள், முதலில் வடிவமைக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, பின் கண் கவர் கலை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இவ்வேலைப்பாடுகள் தான் இவ்வோடுகளுக்கு, அதன் தனிச்சிறப்பான கட்டமைப்பைக் கொடுக்கிறது. இவ்வேலைப்பாடுகளோடு, பல வித வண்ணங்களும் இவற்றின் அழகைக் கூட்ட உபயோகப்படுத்தப்படுகின்றன.

Koshy Koshy

வீடுகளுக்கு ஏற்றவாறு

வீடுகளுக்கு ஏற்றவாறு

மக்கள், அவர்கள் வீடுகள் மற்றும் புல்தரைகளுக்குத் தக்கவாறு, ஓடுகள் செய்யச் சொல்லியும் வாங்கிப் போகின்றனர். விலங்கினங்கள் மற்றும் செடிகள் வரையப்பட்டுள்ள, புல்தரைகளுக்காகவே பிரத்யேகமாக தயாராகும் ஓடுகள் மிகப் பிரபலமானவையாகும்.

Koshy Koshy

பரம்பரை வீடுகள்

பரம்பரை வீடுகள்


நீங்கள் உங்கள் சுவர்களின் மற்றும் திண்டுகளின் வண்ணங்களுக்குப் பொருத்தமான வண்ணங்களிலும் இவ்வோடுகளைத் தேர்வு செய்யலாம். ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை மேலும் அழகுபடுத்திக் காட்ட, இவ்வோடுகளை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வரும் வீடுகளில் இவ்வகை ஓடுகளைக் காணலாம்.

Jean-Pierre Dalbéra

 ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு, காரைக்குடியின் பிரபலமான அடையாளமாக விளங்குகிறது. இதன் பெயரை அப்படியே அர்த்தப்படுத்திப் பார்த்தால், "ஆயிரம் ஜன்னல்களை உடைய வீடு" என்ற அர்த்தத்தில் வரும். இவ்வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே, இதனை குறிப்பாகப் பார்க்க விரும்பும் அளவுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நகருக்கு நீங்கள் வந்து, இவ்வீட்டைப் பார்க்க விரும்பினால், வழியில் பார்க்கும் யாரைக் கேட்டாலும் வழி சொல்வார்கள். சுமார் 20,000 சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ள இவ்வீடு, 1941-ம் வருடம், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. .

KARTY JazZ

அந்த காலத்திலேயே அப்படி ஒரு வசதி

அந்த காலத்திலேயே அப்படி ஒரு வசதி

அந்தக் காலத்தில் மிக அதிகத் தொகையாக தோன்றிய இது, தற்போது சாதாரணமாகத் தோன்றுகிறது. இவ்வீட்டில், 25 பெரிய அறைகளும், ஐந்து பெரிய கூடங்களும் உள்ளன. மேலும், சுமார் 20 கதவுகளும், 100 ஜன்ன்ல்களும் உள்ளன. முதன்முறையாக, இவ்வீட்டில் நுழையும் யார்க்கும், என்ன தான் அது சிதைவுக்குள்ளாகி இருந்தாலும், மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தாலும், அதன் அசல் கட்டுமானக் கலையழகும், பிரம்மாண்டமும் தான் முதலில் கண்ணைக் கவர்ந்து பிரம்மிக்க வைக்கும்.

KARTY JazZ

Read more about: travel karaikudi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X