Search
  • Follow NativePlanet
Share
» »அவந்திப்பூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது

அவந்திப்பூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது

அவந்திப்பூர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது

அவந்திப்பூர், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முதன்மையான ஒரு சுற்றுலாத் தலமாகும். சிவன் கோயிலான சிவ-அவந்தீஷ்வரா மற்றும் விஷ்ணு கோயிலான அவந்திஸ்வாமி-விஷ்ணு, ஆகிய அதன் இரு பழமையான கோயில்களுக்கு, அவந்திப்பூர், மிகவும் பிரபலமானதாகும். இவ்விரு கோயில்களும், 9-ம் நூற்றாண்டில், அவந்திவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டுள்ளன.

சிவ- அவந்தீஷ்வரா கோயில், இந்து மத நம்பிக்கைகளின் படி, அழிவுக் கடவுளாக வணகப்படும் சிவனுக்காகவும், அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில், இந்துக்களின் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்காகவும் கட்டப்பட்டுள்ளன. இக்கோயில்களின் கட்டுமானத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாணிகள், கிரேக்க பாணியை ஒத்துள்ளன. இந்த யாத்ரீகத் தலங்கள், தற்போது, சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அமைப்பும் அழிவும்

அமைப்பும் அழிவும்

சிவ-அவந்தீஷ்வரா கோயில், இவ்விடத்தை ஆண்ட, "புத்ஷிகன்" என்றும் அழைக்கப்படும் சிக்கந்தர் சுல்தானால், ஒரு முறை, தாக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல், இதன் வடிவத்தை நாசம் செய்துள்ளது. இது மட்டுமின்றி, இக்கோயிலைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள், இயற்கை மற்றும் காலத்தின் சீற்றங்களைத் தாங்கக்கூடியவைகளாக இல்லை. இதனால், இக்கோயில்கள், கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குக் கீழே புதைந்து விட்டன.

Prasad Mantri

வெளியில் தெரிந்த ரகசியங்கள்

வெளியில் தெரிந்த ரகசியங்கள்

18-ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவ்வாறு அகழ்ந்தபோது கிடைத்த சிலைகள் சிலவற்றை, ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டனர். இக்கோயிலுக்குச் சொந்தமான சில கலைப் பொக்கிஷங்களை, ஸ்ரீநகரில் உள்ள, ஸ்ரீ பிரதாப் சிங் அருங்காட்சியகத்தில் காணலாம். இக்கோயில்கள், சிதிலமடைந்துள்ள நிலையில் இருந்தாலும், வெவ்வேறு கோலங்களில் இருக்கும் தெய்வங்களின் திருவுருவச்சிலைகள் சிலவற்றை, இப்போதும் காணலாம்.

Unknow

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

அவந்திப்பூரைச் சுற்றிப் பார்க்க திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள், வான், இரயில், அல்லது சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம், இவ்வூரை எளிதாக அடையலாம். அவந்திப்பூரிலிருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையமே, அவந்திப்பூருக்கு அருகாமையில் அமைந்துள்ள விமான தளமாகும்.

ஜம்முதாவி இரயில் நிலையமே, இவ்வூருக்கு அருகாமையில் அமைந்துள்ள தலைமை இரயில் நிலையமாகும். இது இந்தியாவின் அனைத்து முக்கிய இரயில் நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பேருந்து மூலமும் இவ்வூரை அடையலாம். ஆனால், இங்கு செல்வதற்கு நேரடிப் பேருந்துகள் இல்லை; முதலில் ஒரு பேருந்து மூலம் ஸ்ரீநகருக்குச் சென்று, பின், அங்கிருந்து மற்றொரு பேருந்தின் மூலமே இங்கு செல்ல முடியும். அவந்திப்பூரை நன்கு சுற்றிப் பார்க்க விரும்புவோர், ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே சென்று வரலாம். அப்பொது தான், உறைய வைக்கும் பனியிலிருந்து தப்பிக்கலாம்.

Varun Shiv Kapur

Read more about: kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X