Search
  • Follow NativePlanet
Share
» »வனப் பகுதியில் சுற்றுலா போறவங்களுக்கு சின்ன சின்ன டிப்ஸ்..!

வனப் பகுதியில் சுற்றுலா போறவங்களுக்கு சின்ன சின்ன டிப்ஸ்..!

வனப்பகுதியில் சுற்றுலா செல்கையில் எதை எடுத்துச் செல்ல வேண்டும், என்ன செய்யக் கூடாது என தெரியாதவர்களுக்கு சின்ன சின்ன அறிவுரைகள்.

சுற்றுலா விரும்பிகளான நாம் அழகிய மலைத் தொடர், பல அம்சங்கள் நிறைந்த நகரம், வரலாற்றுப் பகுதி, சாகசத்திற்கும், முகாமிற்கும் ஏற்ற காடுகள் என பல பகுதிகளை சுற்றி வருவோம். ஆனால், ஒவ்வொரு முறை இதுபோன்ற பயணத்தை மேற்கொள்ளும் போதும் ஏதேனும் ஒரு முக்கியப் பொருளை எடுக்காமல் சென்று அல்லது, சுற்றுலாவிற்கு சரியான திட்டமிடாமல் சென்று ஒட்டுமொத்த பயணத்தையுமே சொதப்பி விடுவோம். இதில் வேறெந்தப் பகுதிக்கு சுற்றுலா சென்றாலும் மறந்து சென்ற பொருட்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடை செய்து விடலாம். ஆனால், காடுகள், மலைப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கையில் இதுபோல் நடந்தால் அவ்வளவு தான். சரி வாருங்கள், வனப் பகுதியில் சுற்றுலா போறவங்களுக்கான சின்ன சின்ன டிப்ஸ்-களை பார்ப்போம்.

பருவ காலம்

பருவ காலம்


வனப் பகுதி, மலைப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிக்கு சற்றுலா செல்வதற்கு முன் கட்டாயம் கவணிக்க வேண்டிய ஒன்று அப்பகுதியின் கால நிலை. கோடை காலத்தில் இதுபோன்ற பகுதிகளுக்கு சுற்றலா செல்வது மேலும் சிறப்பு. மக் காலத்தில் செல்வதாக இருந்தால் தகுந்த முன்னேற்பாடுடன் செல்ல வேண்டும்.

உடையின் நிறம்

உடையின் நிறம்


கோடைக் காலத்தில் வனப்பகுதிக்குள் செல்கையில் சில சமயம் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வைகள் வெளியேறி சோர்வடையச் செய்வது வழக்கம். காட்டன் உடை அணிவதால் இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மேலும், அடர் நிறமான பச்சை, சாம்பல், கறுப்பு போன்ற நிறங்களில் உடைகள் அணிவது நல்லது. இதுபோன்ற அடர் நிற ஆடைகள் மரங்களின் நிறத்துடன் ஒத்துப்போவதால் விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

மழைக் காலத்தில்

மழைக் காலத்தில்


மழைக் காலத்தில் இதுபோன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போது காலில் ஷூக்கள் அணிவது கட்டாயம். மேலும், முழுக் கை ஆடை, தலைக்கு தொப்பி உள்ளிட்டவற்றை அணிய வேண்டும். ஏனெனில், மழைக் காலத்தில், அல்லது மழை பெய்து முடிந்த சில காலத்தில் காட்டுப் பகுதியில் அதிகளவிலான அட்டைப் பூச்சிகளும், விசப் பூச்சிகளும் பெருகியிருக்கும். அவற்றிடம் இருந்து நம் உடலை பாதுகாக்க இதுபோன்ற ஆடைகள் உதவும்.

பொருட்கள் தேர்வு

பொருட்கள் தேர்வு


பயணத்தை தொடங்கும் முன்பாக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு பொருட்கள், துணியிலும் கவணம் செலுத்த வேண்டும். தேவையின்றி அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்வது வீன் சிரமத்தை உண்டாக்கும். மேலும், தண்ணீர் பாட்டில்கள், முதலுதவிக்கு தேவையான மருந்துகள், எளிதில் தீப்பற்றக் கூடியவற்றை எடுத்துச் செல்லலாம்.

பயணிக்கும் போது

பயணிக்கும் போது


காட்டு வழியில் வாகனத்தில் செல்லும் போது தேவையின்றி அதிகப்படியான சத்தத்தை எழுப்ப வேண்டாம். மேலும், வாகனத்தின் ஹாரனைக் கூட அடிக்கடி அழுத்த வேண்டாம். இவை, காட்டுச் சூழ்நிலையை சீர்குலைத்து விடும். சில சமயங்களில் விலங்குகளின் கவனத்தை ஈர்த்து இடையூறு செய்து விடும். மேலும், காட்டுப் பாதையில் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்குவதை தவிர்ப்பது நல்லது.

உணவுகள்

உணவுகள்

குறிப்பாக, வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் போது தேவைக்கும் அதிகமாகவே உணவுகளை எடுத்துச் செல்லாம். ஆனால், எடுத்துச் செல்லும் உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெடாதவாறும், அதே சமையம் உடல் உபாதைகளை சீர்குலைக்கும் வகையிலான உணவுகளாகவும் இருக்க வேண்டும். மேலும், வனப்பகுதியில் கிடைக்கும் புதிதான காய்கள், பழங்களை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X