Search
  • Follow NativePlanet
Share
» »தளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா? இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்!

தளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா? இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்!

தளபதி விஜய் போல உங்களால செய்யமுடியுமா? இந்த இடங்களுக்கு போங்க கண்டிப்பா முடியும்!

இந்தியாவில் 5 இடங்களில் இதுபோன்ற பங்கி ஜம்பிங்க் செய்யமுடியும். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டாகவும், அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் செய்யக்கூடிய சாகசமாகவும் உள்ளது. இந்த இந்தியாவிலும் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரும் விசயங்களாக இருக்கும். ஏனென்றால் இதுபோன்ற சாகசங்களை சராசரி மக்கள் பெரிதும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதை விரும்புபவர்கள் இதை செய்ய வெளிநாடுகளுக்கு போகவேண்டியிருந்தது. முன்பு விஜய் ஒரு படத்தில் கூட இதுபோன்ற சாகசத்தை செய்திருப்பார். ஆனால் அந்த சமயத்தில் இந்தியாவில் இதுபோன்ற சாகச விளையாட்டுகள் இல்லாமல் இருந்தது. சரி இப்போது இந்த 5 இடங்களையும் காணச் செல்வோமா.

ரிஷிகேஷ்ஷில் குதிக்கலாம் வாங்க!

ஆன்மீக ஸ்தலமாகவே அறியப்பட்டு வந்த ரிஷிகேஷ் சில காலமாக சாகச விளையாட்டுகள் அதிகம் நடைபெறும் இடமாகவும் புகழ் பெற்று வருகிறது. ஏற்கனவே இங்கு சாகச படகு சவாரி மிக பிரபலம், அதற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் இப்போது பங்கீ ஜம்ப் விளையாட்டும் இங்கே சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. 'ஜம்பிங் ஹைட்ஸ்' என்ற நிறுவனத்தால் இங்கு பங்கீ ஜம்ப் விளையாட்டு நடத்தப்படுகிறது.

கட்டணம்


ஒருமுறை குதிக்க 2500 ரூபாய் என்றாலும் மரண பயத்தை பக்கத்தில் போய் பார்த்துவர தாரளமாக இவ்வளவு ரூபாய் கொடுக்கலாம். ஒரு பாறை முகட்டில் தரையில் இருந்து 83 அடி உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிக உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கும் இடமும் இதுவே.

பெங்களூர்

ஓசோன் குழும நிறுவனத்தால் பெங்களுருவில் நடத்தப்படும் பங்கீ ஜம்ப் மிகப்பிரபலமாகும். தரையில் இருந்து 80அடிக்கு மேற்பட்ட உயரத்தில் கிரேன் ஒன்றின் உதவியுடன் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. குதிப்பவர்களுக்கு உலகத்தரமான பாதுகாப்பு வசதிகள் செய்திருப்பது இந்த இடத்தின் சிறப்பு.

நீங்களும் செல்லுங்களேன்

பெங்களூருக்கு வருகை தருபவர்களும், சென்னை, ஓசூர், கோவை நகர வாசிகளும் ஒரு வார இறுதி விடுமுறையின்போது இங்கு வந்து குதித்து சாகசம் செய்யலாமே.. என்ன ஆயத்தமாகிட்டீங்களா?

டெல்லி:

வட இந்தியாவில் பங்கீ ஜம்பிங் செய்ய நினைத்தால் தலைநகர் தில்லியில் வண்டேர்லஸ்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் பங்கீ ஜம்பிங் மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாகும்.

யாரெல்லாம் சாகசம் செய்யலாம்

இந்த வண்டேர்லஸ்ட் பங்கீ ஜம்பிங் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் ஜெர்மெனி நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் என்பதோடு மட்டுமில்லாமல் இந்த விளையாட்டுக்குரிய உபகரணங்களும் ஜெர்மெனியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 14-50 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இந்த சாகச விளையாட்டில் ஈடுபடலாம்.

கோவா:

கேளிக்கை, கொண்டாட்டங்களின் தலைநகரான கோவாவில் உள்ள அஞ்சுனா கடற்கரையில் கிராவிட்டி ஜோன் என்ற நிறுவனத்தால் பங்கீ ஜம்பிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. வெறும் 25 மீட்டர் உயரத்தில் இங்கு குதிக்கும் மேடை உள்ளதால் முதல் முறை இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு தகுந்த இடம் இது. நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டபடியே இந்த பங்கீ ஜம்பிங் விளையாட்டையும் தில் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

லோனாவ்லா, மகாராஷ்டிரா:


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றான லோனவ்லாவில் இருக்கும் டெல்லா அட்வென்ச்சர்ஸ் என்ற கேளிக்கை பூங்காவில் இந்த பங்கீ ஜம்பிங் விளையாட்டு இடம் பெற்றுள்ளது. 45 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குதிக்கும் மேடையில் இருந்து நாம் குதிக்கலாம். 1500ரூபாய் கட்டணம் செலுத்தினால் 4-5 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தலைகீழாய் மிதக்கலாம்.

அடடே.. ஜம்பிங்

சுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்

அடடே.. ஜம்பிங்

சுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்

அடடே.. ஜம்பிங்

சுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்

அடடே.. ஜம்பிங்

சுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்

அடடே.. ஜம்பிங்

சுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்

அடடே.. ஜம்பிங்

சுற்றுலாப் பயணிகள் பங்கீ ஜம்பிங் செய்யும் அற்புத காட்சிகள்

Read more about: travel bangalore lonavala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X