Search
  • Follow NativePlanet
Share
» »தூத்துக்குடி சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

தூத்துக்குடி சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

தூத்துக்குடி சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. முத்து நகரத்துக்கு பயணிப்பவர்கள் நிச்சயம் காணவேண்டிய மற்ற இடங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னை தூத்துக்குடி நகரில் இருந்து 600 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கேரள தலைநகரம் திருவனந்தபுரம் தூத்துக்குடியிலிருந்து 190 கி. மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.

 எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநிலத்தின் மற்ற எல்லா இடங்களில் இருந்தும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் விமான நிலையம் உள்ளது அது சென்னை விமான நிலையத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது. இந்நகரின் ரயில் நிலையம் தென் இந்தியாவின் பல நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் இருந்து தமிழ் நாட்டின் மற்ற மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன.

தூத்துக்குடியின் சிறப்பான சுற்றுலாத் தளங்கள்

தூத்துக்குடியின் சிறப்பான சுற்றுலாத் தளங்கள்

தூத்துக்குடியின் சுற்றுலாத் தளங்களைப் பற்றி ஒவ்வொன்றாக காண்போம் வாருங்கள். கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை.

தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. இது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நகரம் பிரபலமான மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தை தன்னகத்தே கொண்டுள்ளது .

மற்ற சுற்றுலா இடங்கள் மானப்பாடு, கழுகுமலை, ஒட்டபிடாரம், எட்டயபுரம், கொற்கை ஆதிச்ச நல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்கி, நவ திருப்பதி போன்றவை. மலையை குடைந்து கட்டப்பட்ட பிரபல ஜெயின் கோவில் அமைந்துள்ள கழுகு மலை, கொற்கை குளம் மற்றும் வெற்றி வேளம்மன் கோவில் முதலியன பிரபலமான சுற்றுலாத் தலங்கள்.

கடைசியாக சொல்லப்பட்ட இரண்டு இடங்களும் புகழ்பெற்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களாகும். புகழ்பெற்ற வரலாற்று இடமும் இங்கு இருக்கிறது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டபொம்மன் நினைவு கோட்டை இந்நகரத்தில் உள்ளது

Ramkumar

நவ திருப்பதி

நவ திருப்பதி

நவ திருப்பதி என்பது 9 கோவில்களின் கூட்டு என்றும் பொருள் கொள்ளலாம். இவை விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் ஆகும். இந்த கோவில்கள் தாமிர பரணி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவ திருப்பதி என்பனயாவன:

ஸ்ரீ வைகுண்டம்,
திருவரகுணமங்கை,
திருப்புளியங்குடி,
இரட்டை திருப்பதி,
துளைவில்லி மங்களம்,
திருகுழந்தை,
தென் திருப்பதி,
திருக்கோலூர்-வித்தம்மானிதி
ஆழ்வார் திரு நகரி

இந்த 9 கோவில்களுக்கான பயணம் திருவைகுண்டத்தில் தொடங்கி ஆழ்வார் திருநகரியில் முடிவடையவேண்டும்.

Ssriram mt

 கொற்கை எனும் அழகிய கிராமம்

கொற்கை எனும் அழகிய கிராமம்

கொற்கை தற்போது கிராமமாக இருந்தாலும் ஒரு காலத்தில் சரித்திரம் பேசிய ஊராக இருந்தது. இது பாண்டியர்களின் கடற்கரை துறைமுகம் ஆகும்.

இங்குள்ள ஒரு குளம் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குளத்துக்கு கொற்கை என்று பெயர்.

பல அழகிய கலை பொருள்கள் இந்த கிராமத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் 1838ம் ஆண்டு வாக்கில் ஒரு படையெடுப்பு நிகழ்ந்ததாகவும் அந்த படையெடுப்பில் கிமு 3ம் நூற்றாண்டு மற்றும் 2 ம் நூற்றாண்டை சேர்ந்த பல அரிய கலை பொருள்கள் திருடப் பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Suriya vicky

பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சி


பாஞ்சாலங்குறிச்சி வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு சிறப்பு வாய்ந்த இடமாகும். இது மிகவும் பழைமையான வரலாறு பேசும் பூமி. வீரம் விளைந்த மண் என்று பலரால் போற்றப்படுவது.

இது தூத்துக்குடியிலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாஞ்சாலங்குறிச்சி 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரத்துக்கு பெயர் போன வீர பாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த ஊராகும்.

1947ம் ஆண்டு அரசு கட்ட பொம்மனுக்கு நினைவு கோட்டை ஒன்றை கட்டமைத்ததது. இது இன்று இந்திய தொல் பொருள் ஆராய்வு கழகத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X