Search
  • Follow NativePlanet
Share
» »4 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் போலாமா?

4 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் போலாமா?

4 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் போலாமா?

அலிபாக் எனும் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள சாவ்ல் நகரம், பல்வேறு சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியையும், எழுச்சியையும் கண்டுள்ளது. இந்த சாவ்ல் நகரம் முழுக்க போர்த்துகீசிய காலத்து யூதர்களின் திருக்கோயில்கள் மற்றும் தொன்மையான தேவாலயங்களின் சிதைவுகள் நிறைந்து கிடக்கும். இங்குள்ள சாவ்ல் கோட்டையும், அதற்கு இணையான கொர்லை கோட்டையும் நம்மை இறந்த காலத்தில் பயணிக்க செய்யும் அற்புதங்கள். வாருங்கள் கண்டு மகிழலாம்.

சாவ்ல் காடு கலங்கரை விளக்கம்

சாவ்ல் காடு கலங்கரை விளக்கம்

கொர்லை துறைமுகத்துக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கும் சாவ்ல் காடு கலங்கரை விளக்கத்தை பயணிகள் இயந்திர படகின் மூலம் அடையலாம். இங்கு செல்வதற்கு 1 முதல் 1.5 மணி நேரம் ஆகும். இந்த கலங்கரை விளக்கம் 17-ஆம் நூற்றாண்டுகளில் ரேவ்தந்தா கடற்கரையை தேடி வருபவர்களுக்கு அடையாளச் சின்னமாக விளங்கி வந்தது.

Alewis2388

எங்குள்ளது

எங்குள்ளது

இது ரேவ்தந்தா கடற்கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சாவ்ல் காடை சுற்றி காணப்படும் கற்பாறைத் தொகுதிகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அதில் பாதிக்கு மேற்பட்டவை நீரில் மூழ்கியுள்ளன. இந்த கற்பாறைத் தொகுதிகளின் அருகில் 1860-ஆம் ஆண்டு அகதிகள் முகாமொன்று கட்டப்பட்டிருக்கிறது.

Ccmarathe

 கொர்லை கோட்டை

கொர்லை கோட்டை

கொர்லை கோட்டை மோரோ மற்றும் கேஸ்டில் கர்லூ என்ற பெயர்களிலேயே பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோட்டை போர்த்துகீசியர்களால் 1521-ஆம் ஆண்டு, கொர்லை நகரத்தின் தீவு கிராமமான மோரோ டி சாவ்லில் கட்டப்பட்டது.

Alewis2388

வடிவத்தை நினைவுறுத்தும்

வடிவத்தை நினைவுறுத்தும்

சாவ்ல் கோட்டையின் வடிவத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோட்டை கொர்லையிலிருந்து, பஸ்ஸெய்ன் வரை நீண்டு செல்கிறது. இது ரேவ்தந்தா துறைமுகத்தை பாதுகாக்கும் பொருட்டு, துறைமுகம் செல்லும் வழியை மறைத்து கட்டப்பட்டுள்ளது.

Alewis2388

எவ்வளவு பெரியது தெரியுமா?

எவ்வளவு பெரியது தெரியுமா?

ஒரே நேரத்தில் 7000 குதிரைகளை அடைக்கக் கூடிய அளவுக்கு பெரிதாகவும், பலமானதாகவும் கட்டப்பட்டுள்ள கொர்லை கோட்டை, உலகின் மிகச் சிறந்த கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Alewis2388

தத்தா மந்திர் கோயில்

தத்தா மந்திர் கோயில்

தத்தா மந்திர் கோயில் ரேவ்தந்தா கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் தத்தத்ரேயா கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு பெரும்பாலும் மகாராஷ்டிரிய சமூகத்தை சேர்ந்தவர்களே வழிபடுவார்கள். இந்தக் கோயில் எதிரிகளை கண்காணிப்பதற்காக சிவாஜி மகாராஜாவின் ஆட்சியில் கட்டப்பட்டது.

Rjshinde

திருவிழா

திருவிழா

இதன் முதன்மை தெய்வமான தத்தத்ரேயாவின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக 5 நாட்கள் கொண்டாடப்படும். இந்த 5 நாட்களும் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு விடுமறை அளிக்கப்படும். தத்தா மந்திர் கோயில் 1500 படிகளுடன், குன்றின் உச்சியில் அமைந்திருக்கிறது. இக்கோயிலிலிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த சாவ்ல் நகரமும், ரேவ்தந்தாவும் தெளிவாக தெரியும்.

Rjshinde

 கரு மணலால் சூழப்பட்ட ரேவ்தந்தா

கரு மணலால் சூழப்பட்ட ரேவ்தந்தா

இந்தப் பகுதிகள் முழுமையும் கொட்டைப் பாக்கு மரத்தாலும், தென்னை மரத்தாலும் சூழப்பட்டது. அதோடு பாகுலி எனும் நறுமண மலரும் இங்கே அதிகமாக காணப்படும். அதுமட்டுமல்லாமல் பரந்து கிடக்கும் கரு மணலால் காண்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் விதமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ரேவ்தந்தா

Read more about: travel mumbai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X