Search
  • Follow NativePlanet
Share
» »குற்றாலம் VS அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி..! எது பெஸ்ட் ?

குற்றாலம் VS அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி..! எது பெஸ்ட் ?

பரந்துவிரிந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழக எல்லையில் குற்றாலமும், கேரள எல்லையில் அதிரப்பள்ளியும் உலகப் புகழ்பெற்றதாக இருப்பது நாம் அறிந்ததே. ஆனால், இவற்றில் எது பெஸ்ட் ?

பசுமையான மலைத்தொடரும், அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத சுற்றுலாத் தலங்கள் தான் இந்த குற்றாலமும், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியும். பரந்துவிரிந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழக எல்லையோரம் குற்றாலமும், கேரள மாநில எல்லை ஓரம் அதிரப்பள்ளியும் உலகப் புகழ்பெற்றதாக இருப்பது நாம் அறிந்ததே. தமிழகத்தில் குற்றாலம் என்றால் தெரியாதோர் யாரும் இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சீஷன் துவங்கிவிட்டாளே குற்றாலத்திற்கு என ஓர் சுற்றுலா ஆர்மியே படையெடுத்துச் செல்லும். அதிரப்பள்ளியும் இதற்குச் சலைத்தது அல்ல. பரம்பிக்குளம், சோலையார் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் காட்டின் நடுவே கம்பீரமாக கொட்டும் அழகு காண்போரை மெய் சிலிர்க்கச் செய்துவிடும். சரி, இவை இரண்டிலும் எது பெஸ்ட் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ?. வாருங்கள், அதை மதிப்பீடு செய்ய பயணிப்போம்.

குற்றாலம்

குற்றாலம்


அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர்.

Mdsuhail

மூலிகைகளும், பழவகைகளும்

மூலிகைகளும், பழவகைகளும்


இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

Raghukraman

ஒன்பது அருவிகள்

ஒன்பது அருவிகள்


குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.

Arvintharaj.T

பேரருவி

பேரருவி


மெயின் அருவி எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் இருக்கிறது இந்த அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும். பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

Aronrusewelt

குற்றாலநாதர்

குற்றாலநாதர்


இந்த அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திகழ்கிறது. இங்கு அகத்திய முனிவர் நிறுவிய பராசக்தி பீடமும் அமைந்துள்ளது. சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

Raji.srinivas

செண்பகாதேவி அருவி

செண்பகாதேவி அருவி


பேரருவியில் இருந்து மலையில் 2 கிலோ மீட்டர். தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Jabbarcommons

தேனருவி

தேனருவி


செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

Jabbarcommons

ஐந்தருவி

ஐந்தருவி


குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

Raghukraman

பழத்தோட்ட அருவி

பழத்தோட்ட அருவி


ஐந்தருவிக்கு போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. விஐபி-க்கள் மட்டுமே குளிக்க முடியும். குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புலியருவி உள்ளது.

Pandiaeee

பழைய குற்றாலம் அருவி

பழைய குற்றாலம் அருவி


குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கிலோ மீட்டர்., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

Vidhya varshini senthil kumar

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி


தமிழகத்தில் எப்படி குற்றாலமோ, அதேப் போன்றுதான் கேரளத்தில் அதிரப்பள்ளி. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தாபுரம் தாலுக்காவில், திருச்சூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்திலும் கொச்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.தென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ் பெற்று விளங்குகிறது.

Kishrk91

பறவைகள் சரணாலயம்

பறவைகள் சரணாலயம்


சர்வதேச பறவைகள் அமைப்பு அதிரப்பள்ளி வனப்பகுதியை ஒரு முக்கிய பறவைகள் சரணாலயமாகவும் அங்கீகரித்துள்ளது. இருவாச்சி எனும் அருகி வரும் பறவையினத்தின் இங்கு நான்கு வகைகள் இங்கு வசிக்கின்றன. இங்கு காணப்படும் தாவரவகைகளும் உயிரினங்களும் பலவகைகளை சார்ந்தனவாக காணப்படுகின்றன. ஆசிய இயற்கை பாதுகாப்பு மையமானது அதிரப்பள்ளி வனப்பகுதியை தேசியப்பூங்காவாகவும் சரணாலயமாகவும் அறிவிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இந்த வனப்பகுதி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதிரப்பள்ளி, வழச்சல், சர்ப்பா, கொளத்திருமேடு மற்றும் சோலையார் போன்றவையே அவை.

Rameshng

பழங்குடி மக்களுடன் ஒரு நாள்

பழங்குடி மக்களுடன் ஒரு நாள்


இங்குள்ள காடுகளில் கோடர்கள் எனும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தேன், மெழுகு, ஏலம், இஞ்சி போன்ற இயற்கை விளைபொருட்களை சேகரித்து வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்த பழங்குடி மக்களின் கிராமத்துக்கு விஜயம் செய்து இவர்களின் வாழ்க்கை முறையையும் பயணிகள் நேரில் கண்டு ரசிக்கலாம். ஆதிகுடிகள் வசிக்கும் இந்தக் கிராமமானது 'கடவுளின் சொந்த தேசம்' என்ற பெருமையை பெற்றுள்ள கேரளப்பகுதியின் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

Jayakrishnan.B

அதிரவைக்கும் அதிரப்பள்ளி

அதிரவைக்கும் அதிரப்பள்ளி


பேரைக் கேட்டாளே சும்மா அதிருதுள்ள.... அந்தமாதிரித்தான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியும். அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சியான இந்த அதிரப்பள்ளி மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.

Jan Joseph George

குட்டி நயாகரா

குட்டி நயாகரா


தென்னகத்தின் நயாகரா, இந்தியாவின் குட்டி நயாகரா என பல செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த அதிரப்பள்ளி பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிக்கும். சாலக்குடி ஆற்றுப்பெருக்கானது வழச்சல் வனச்சரகத்தின் வழியே பாய்ந்தோடி வந்து இந்த நீர்வீழ்ச்சியில் வழிந்து கீழே ஆழத்தில் ஓடும் ஆற்றில் விழுகிறது.

Souradeep Ghosh

பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி

பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி


மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்ட தோற்றத்துடன் இந்த நீர்வீழ்ச்சி நம்மை முதல் பார்வையிலேயே திகைக்க வைத்துவிடுகிறது. நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை பயணிகள் ரசிக்கலாம். நீர்வீழ்ச்சியை நோக்கிச்செல்லும் பாதையிலிருந்து பார்க்கும்போதே நீர்வீழ்ச்சியின் முன்புற தோற்றமும் கீழே ஆழத்தில் ஓடும் ஆறும் காட்சியளிக்கின்றன.

Dilshad Roshan

கமல் கண்டு அஞ்சிய அருவி

கமல் கண்டு அஞ்சிய அருவி


புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியூட்டும் தற்கொலைக் காட்சியின் பின்னணியில் நாம் காணும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி, இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான். இந்த அற்புத நீர்வீழ்ச்சிக்கு மிக அருகிலேயே இன்னும் சில நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இயற்கையின் வரனாக அமைந்துள்ளது அதிரப்பள்ளியின் சிறப்பாக உள்ளது.

வழச்சல் நீர்வீழ்ச்சி, அதிரப்பள்ளி

வழச்சல் நீர்வீழ்ச்சி, அதிரப்பள்ளி


சோலயார் மலைப்பகுதியில் அதிரப்பள்ளி மழைக்காடுகளுக்குள்ளே இந்த வழச்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் சாலக்குடி காடுகளிலிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

Irshadpp

அடேங்கப்பா...

அடேங்கப்பா...


பொதுவாக குறைந்த நீர் மட்டத்துடன் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து மிக பிரம்மாண்டமான அகலமான ஆக்ரோஷமான வேகத்துடன் நீர் வழியும் நீர்வீழ்ச்சியாக மாறி விடுகிறது. இதுபோன்ற நீர்வீழ்ச்சிகள் தமிழக - கேரள எல்லையில்தான் இருக்கின்றனவா என்று மனதை மலைக்கச் செய்திடும் தோற்றத்துடுன் காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் பயணித்தே ஆக வேண்டும்.

കാക്കര

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருச்சூருக்கு மிக அருகே உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. திருச்சூரில் இருந்து சாலக்குடி வரை ஒரு மணி நேர பேருந்து பயணம். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இருக்கும் இடம் சாலக்குடி என்று சொல்வார்கள். ஆனால் சாலக்குடி என்பது மலைக்கு கீழே உள்ள ஊர். சாலக்குடியிளிருந்து ஒன்று அல்லது ஒண்ணரை மணி பேருந்து பயணத்தில் அதிரப்பள்ளி அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X